மூடிய இமைப்போர்வைகளைப் போர்த்துக்கொண்டு
உறக்கத்தின் வாயிற்கதவு தேடி,
கண்மணிகளின் நகர்வுகள்……
அந்த இரவையும் கிழித்துக்கொண்டு,
வாயில்தூண்களை உடைத்தெறிந்தபடி
உள்நுழைகிறது அந்த ஒளிக்கீற்று ….
தன்வழிப்பயணமாய் தொடங்கிற்று
கனவெளியின் தூரப்பாதை கனவு நோக்கி,
நேர்கோட்டின் வழிபழகிய ஒளி
வளைவு சுழிவிற்குள்ளும் நழுவ
கற்றுக்கொண்டிருக்கின்றது புதிதாக,
உள்ளுணர்வு தொலைந்த பாலகியாய்
நிகழ்கிறது என் கால்களின் வழித்தேடல்கள்…
தொலைதூரம் தொலைதொலைதூரம் கடக்கிறது பாதைகளை
தனிமை மறந்து…
மாயவுருவொன்றின் கைபிடியில் சிக்குண்ட கைதியாய்,
என்னையேவிட்டு நழுவுகிறது மனது… .
எந்தக் கிரகம் தேடிய சஞ்சார் தெரியவில்லை இதுவரை…
ஒளிமறைவு
இருளின் கக்குகை
திடீர் நிகழ்வில் தடுமாறி விழபோகிறேன்
பற்றிக்கொண்டனஉருவற்ற கரங்கள்.
இருளின் மறைவு ஒளிவரவு…..
இன்னும் தொடர்கின்றன வெள்ளொளி கிற்றுக்கள்… .
மீண்டும் சில கணங்கள் இருளின் கவ்வுதல்கள்
இவ்வாறே சிறுதூரப் பயணம்…
மீண்டும் கட்டங்கள் தாண்டும் போது
ஒளிகளைந்த இருளின் ஆக்கிரமிப்பெல்லைகளின் நீட்சி ….
இப்போதெல்லாம் ஒளியாண்டுகளாய் நீளும் இருளில்
கணப்பொழுதுகள்தாம் தங்கிவிட்டுப் போகிறது ஒளிக்கிரணம்.
இந்த வனாந்தரப் பயணம் முடிவதாயில்லை…
தளர்ச்சியால் நழுவுற்ற கால்கள்
முடவனாய்ச் சூம்பிவிழ…
மீண்டும் மாயவுருவின் பற்றுதல்கள்
முகம் மறைக்கும் உருவிடம் எரிச்சல் மூண்டெழ
களைத்துப்போனேன்…
வந்தவழி திரும்பினால்
ஒருத்தி வந்த தடம் மறைத்து
செறிந்து செறிந்து செறிந்து …
படர்ந்து படர்ந்து படர்ந்து …
ஓங்கி நெடிந்து நிற்கும் புதர்த்தடங்கள் …
வந்த வழி குருதிப்பயணம் …
போகும்வழி இருட்குடமும்
நெஞ்சுக்கும் வயிற்றுக்குமிடையே
பீதிகொண்ட இரயிலின் ஓலமாய் மோதி மோதிப் போகின்றது.
தொண்டையடைக்க,
தாய்தொலைத்தவொரு சிறுமியாய்
ஓலமிடத் தொடங்குகையில்… ..
மெல்லிய விரல்பதித்து
தோள்தடவும் ஆறுதலாய் அந்த மாயவுரு …
இப்போதும் முகம் மறைத்து.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















