பொடிநடையில், கடையிற் கிடைக்கிறது
பொதிபடுபழரசப்பொடி; பழமே சேராது
வேதிம நறுமணமூடி, பழப்பொடி;
தோடை தொடங்கி தூரியன்வரை, பல பள
பழப்படங்களோடு பெட்டியுட் பக்குவத்தில்.
விருந்தினரை எண்ணிக்கொள்ளுங்கள்.
வெறும் நீரை முகந்தோ முகராமலோ
இறைந்து நிறையுங்கள்; அளந்து சீனி
கலந்து கொள்ளக் கைநுனியிற் கரண்டி;
விருந்தினர் தேர்வில், விரும்பின தேர்வில்,
ஒரு சிட்டிகை தோடம்பொடி
..................................தூரியன்பொடி
.................................புளிப்பொடி
................................ப்ரூன்பொடி.
வரும் விருந்துக்குப் பழரசம் பரிமாறுவது இலகு.
~~
அரசியற்கட்டுரை அமைப்பது அடிப்படையிற் சுலபம்;
மனிதநேயக்கட்டுரையுங்கூட.
ஒரு சிட்டிகை பாசிசப்பொடி
..................................தேசியப்பொடி
..................................புலிப்பொடி
..................................புனுகுப்பொடி
-/பெயரிலி.
[வலைப்பதிவிலிருந்து மீள்பதிவாக்கப்படுகிறது]








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.
















