
|
எலியொன்று ஓடியது! பார்த்திருந்த பூனை எலிமீது பாய்ந்து பிடிக்க -- எலியங்கே பூனையின் வாயில் இரையாய்த் துடித்தது! பூனையிடம் வீழ்ந்ததைப் பார்.
தாய்க்கோழி கூடவரக் குஞ்சுகளோ குப்பையில் மேய்ந்திருந்த நேரத்தில் வான்கழுகு -- பாய்ந்துவந்து குஞ்சை அபகரித்துச் சென்றதுபார்! அக்குஞ்சு வஞ்சகத்தால் வீழ்ந்தது பார்.
மான்கூட்டம் துள்ளிக் குதித்தோடிச் சென்றது! மானறியா வண்ணம் புலியோ பதுங்கிவந்து மான்மீது தாக்கி அடித்து வீழ்த்தியது! மானங்கே வீழ்ந்தது பார். |
பூனை மகிழ்ச்சியாய் ஓடியது! நாயங்கே பூனையை நோக்கி விரைந்துசென்று தாக்கியது! பூனை சரிந்து விழுந்தது! நாய்களுக்குப் பூனை பகையாம் உணர்.
மக்களும் இப்படித்தான் வன்பகையால் சீறுகின்றார்! வக்கிரத்தின் கொம்பிலே ஆடுகின்றார்! யாரிங்கே எக்கணத்தில் யாரைத்தான் வீழ்த்துவார்?செந்தமிழே! இப்பகையை யார்தந்தார்? சொல்.
--மதுரை பாபாராஜ் |








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















