திங்கட்கிழமை, 07 செப்டம்பர் 2009 00:00
வன்னியரசன்

|
தேன்பாடும் நாடாம் தென்தமிழீழம் கயியால வன்னியன் கட்டோடு ஆண்டான் யாழ்மீட்டும் மண்ணை சங்கிலி மன்னன் மார்தட்டி நின்று மறத்தோடு ஆண்டான் அனுராதபுரத்தை மையமாய் கொண்டு எல்லாள மன்னன் எடுப்போடு ஆண்டான் அடங்காதபற்றை அழியவே விடாமல் பண்டாரவன்னியன் பகட்டோடு ஆண்டான்
தெற்குப்பகுதி சிங்களதேசம் வடக்குப்பகுதி தமிழரின்தேசம் சுற்றிய உலகின் சுழற்சியில் எல்லாம் சுட்டமண்ணையும் ஒட்டிவைத்தனர் சேர்ந்திருப்பது நல்லது என்பதால் வடக்கும் தெற்கும் இணைக்கப்பட்டது புத்தரின் போதனை பொதுவாய் போதலே சத்தியம் தவறா குணங்களே இருக்கும் மொத்த உலகமும் முழுதாய் நினைத்தது
தூங்கிய குணங்கள் துள்ளிக்குதித்தது வாங்கிய சுதந்திரம் வல்லூறாய் ஆனது ஏறிமிதித்தலே மரபாய் போனதால் கீழேகிடந்தவன் எழுந்திட துடித்தான் தனியாய் போவதே தமிழர்க்கு வழியென ஈழத்தமிழன் முழுதாய் நம்பினான்
முப்பது இயக்கம் முன்னே சென்றது வேங்கை மட்டுமே வீறுடன் நின்றது எழுந்துவந்த எதிர்ப்பை எல்லாம் எதிர்த்துநின்று போர் தொடுத்தது வெற்றியென்பது வெளியே நின்றது தட்டியெடுக்கவே வேண்டியிருந்தது
|
வெற்றிச்செய்தியை பார்த்திருக்கையில் கூடியிருந்தது குழிபறித்தது தட்டிக்கொடுத்து வளர்த்து வந்தது எங்கள் சேனையை காட்டிக்கொடுத்தது பக்கத்திலிருந்து பார்த்த தேசமோ போட்டிபோட்டு ”போட்டுக் கொடுத்தது”
என்னசெய்வது? என்னசெய்வது? எல்லோர் மனதிலும் எழுந்த கேள்விக்கு இறுதிப்போரே வழியாய் ஆனது
தன் ஒவ்வோர் பிள்ளையும் ஒவ்வொரு முனையில் எங்கள் தலைவனும் இன்னொரு முனையில் இலக்கிய முற்றத்தில் பேசிய வீரத்தை ஈழக்களத்திலே செய்து காட்டினான் பாக்களில் பேசிய தமிழனின் மரபை எங்கள் தலைவன் செயலில் காட்டினான்
வீழ்ந்துபோவது வீரனுக்கு அழகு தாழ்ந்துபோவது தன்மான இழுக்கு எங்கள் வீரரே (வழி) காட்டிச்சென்றனர்
உண்ணாமல் போன எங்கள் திலீபன் தன்னுயிரே குடித்த எங்கள் புலேந்தி கடலிலே போன எங்கள் கிட்டு காட்டிய வழியே வீரரருக்கானது
எங்களுக்காகவே இவர்கள் சென்றனர் தங்களைதந்து தாயகம் கேட்டனர் கொள்கைக்காகவே தம்பணி செய்தவர் எங்களின் வீரர்கள் இவரென கொள்ளுவோம்.
|