வெளியே மழை...
தனிமையின் வேர்கள் தாய்பாறையைத் தொட்டிருந்த
என் அறையின் யன்னலூடான பிணைப்பு-
எனக்கும் மழைக்குமானது.
மழையின் அழுகை நீண்டுசெல்கிறது.
அநாதைமழை ஓலமிடகிறது உறவகள் தேடி…
இந்தக் கண்ணீர் துடைக்க
எந்தக் கைக்குட்டையும் தைக்கப்படவே
இல்லைபோலும் இன்னும்…
இட்லரின் கொடூரமாய் நீள்கின்றதுஅறைமுழுவதுமான குளிரின் ஆக்கிரமிப்பு… ..
சர்வாங்கமும் சூடுதேட பிரயாசைப்படுகிறது.
தேநீர்க் குவளையுடன வந்தமர்கின்றேன்.
கையில் பியர்கிண்ணம் ஏந்தியதாய்,
மெல்ல எட்டிப்பார்க்கின்றன ஆண்தனங்கள் என்னுள்
தொண்டையில் இறங்கும் குவளை தேநீரின்
வெதுவெதுப்பான இளஞ்சூட்டில்
இன்னும் மாறாமல் அப்படியே தெரிகிறது
உன் உதட்டின் மெல்லிய இளஞ்சூடு…
திடீரென எழுந்த எரிமழையாய்
அறைமுழுதும் பரவும் நெருப்பில்
மழைநீர் கொதிகிறது உச்ச வெப்பநிலையில்… .
மனதும் கூடத்தான்.
மழைபொழியும் நாட்களில்
உன்னோடு எனைப் பிணைத்துக் கொண்டு
மித்தா திண்ணைகளில்
மழையோடு அழுதது
ஞாபகமிருக்குமா உனக்கு?
எப்பெப்போதும் மழை பார்த்தால் …
கடேசி மிடக்கில் தேநீர் நெருப்புதணலாய் இறங்கிப் பரவுகிறது
உயிரெல்லாம் எரியூற்றிய வண்ணம்...








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















