வாழ்க்கை என்பது கடமையடா - அதில்
வாழ்ந்து பார்ப்பது உரிமையடா!
இன்பமும் துன்பமும் குமிழிகளே -அவை
இரண்டும் இங்கே நிலையில்லை!
இன்பம் வந்தால் துள்ளாதே - அட
இன்னல் வளைத்தால் துவளாதே!
இரண்டையும் ஒன்றைக் கருதிவிடு -
இன்னலை இங்கே ஊதிவிடு!
இந்தச் சமநிலை தேவையடா - அது
இல்லை என்றால் குழப்பமடா!
என்றும் வேண்டும் நம்பிக்கை -- அதை
இழந்தால் நாமோ வெறும்சக்கை!
காக்கை குருவி எறும்புகளும் - இந்தக்
காசினி மீதில் வாழ்கிறது!
ஊற்றாய் ஊறும் பகுத்தறிவை -- ஏந்தும்
உன்னால் வாழ முடியாதா?
நேற்று என்பதை அழித்துவிடு - உலகில்
நாளை என்பதை மறந்துவிடு!
ஏக்கந் தன்னை எடுத்துவிடு -- கனியும்
இன்றில் வாழ எழுந்துவிடு!
மனிதா! மனிதா! மயங்காதே -- இங்கே
மலைப்பின் பிடியில் சிக்காதே!
துணிச்சல் கொண்டு நடைபோடு -- வாழ்வைத்
தூக்கிப் பிடித்தே எடைபோடு!








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















