
அசைபட்ட கதவிடுக்கில் அகப்பட்டு அறுந்து விழுந்து துடிதுடித்துக் கொண்டிருந்த பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த என் பதினாறு வயது மகனை பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு கூட்டிப் போயின. பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த பயங்கர முகங்கள். இன்னும் வீடு திரும்பவேயில்லை எனது மகன். எப்படியும் திரும்பி வந்துவிடுவானென நினைக்கிற ஒவ்வொரு தடவையும் உடனே தவறாமல் சொல்லிக் கொண்டேயிருக்கிறது சுவரிலிருந்தபடி அந்த வாலறுந்த பல்லி. ---xxx---- தீபிகா. 10.59 P.m 22-01-2012. |








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















