வலித்தூண்டலில் அரசு சார்பில் 15 வீடுகள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கட்டி முடிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் இராணுவ வீரர்களால் கட்டி முடிக்கப்பட்ட இவ்வீடுகள் அனைத்தின் தரமும் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது.
இவ்வீடுகள் ஜூலை மாதம் 18ஆம் திகதி இராஜபக்சேவால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முந்தைய நாட்கள் அவ்வழியே பயணித்தபோது கண்ட காட்சிகள் மிகவும் கேவலமான அரசியல் தந்திரமாகும்.
ஒரு வீட்டின் முன்பகுதி சீமென்ட் வைத்து பூசப்பட்டிருந்தது. அதன்மேல் வர்ணமும் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வீட்டின் பின் பகுதியில் எந்தவித பூச்சும் பூசப்படவில்லை. ஆனால் சுண்ணாம்புகொண்டு வர்ணம் பூசிவீட்டை அழகுபடுத்தினார்கள். அதைவிட மோசமானது அப்பகுதியில் 20 வருடங்களாக சாட்சியாக நின்று கொண்டிருக்கும் வீட்டை சுற்றி பச்சைநிற தகரங்களை வைத்து மறைத்து விட்டு வீட்டின்மேலே மரக்கிளைகளை வெட்டி போட்டிருந்தார்கள்.

அப்போதுதான் நிழற்படம் எடுக்கும்போது பசுமையாக தெரியுமாம். மேலும் 2500ரூபாய் தருகின்றோம் என டோக்கன் கொடுத்து அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததும் நடந்தது.
மாவிட்டபுரம் அருகே மிகப்பெரிய சிமெந்து ஆலை இருக்கிறது. ஒரு காலத்தில் இலங்கை முழுமைக்குமே சீமென்ட் உற்பத்தி செய்து கொடுத்த ஆலை இது. காரணம், சீமென்ட் உற்பத்திக்கு தேவையான கனிமங்கள் இப்பகுதியில் அமுத சுரபியாக கிடைக்கின்றன.
ஆனால் இன்று இந்த ஆலை பூட்டப்பட்டிருக்கின்றது. இங்குள்ள வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு துகள்களாக்கப்பட்டு புத்தளத்திலுள்ள சீமெந்து ஆலைக்கு கொண்ட செல்லப்படுகின்றன. இடத்தை மேம்படுத்துவதற்கான எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளாமல், அடிப்படைத் தேவைகளுக்கு கூட பல கிலோமிட்டர் செல்ல வேண்டிய சூழலில் மீள்குடியமர்வு நடைபெறுகின்றது.

முழங்காவில் பகுதியிலும் உலக நாடகளின் உதவியுடன் வீடுகட்டி மீள்குடியமர்த்தும் பணி நடைபெற்றுவருகின்றது. 26அடி நீளம் 23அடி அகலத்தில் 106 வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்த உரிமைகளை பெறுபவர்கள் தாங்களாகவே வீடுகளை அமைத்து கொள்ள வேண்டும்.
மூன்று தவணைகளாக வங்கி மூலமாக பணம் கொடுக்கப்படும். ஆகஸ்ட் 3 முதல் பணம் கிடைக்கும் என கருத்து தெரிவித்தவர்கள் சொன்ன இன்னொரு தகவல் “வீடு கட்டுவதற்கு முழங்காவில் கற்களை பயன்படத்த கூடாதாம். அதில் தரம் இல்லையாம். வவுனியாவிலுள்ள அவர்களது கற்களைத்தான் பயன்படுத்த வேண்டுமாம். இவ்வீடுகள் எல்லாம் ஒரே மாதத்தில் கட்டி முடிக்க வேண்டுமாம்”.

”இன்னும் சில இடங்களில் 6 தகரங்கள் மட்டும் கொடுத்து விட்டு அதில் வீடு கட்டி கொள்ளுங்கள் என்கின்றார்கள்”. சிங்களவர்களுக்கு வீடுகளின் நிலைத்தன்மை பற்றியெல்லாம் கவலையில்லை. இடையிடையே நலன்புரி முகாமிலிருந்து வெளியேறியவர்கள், கடைசி கட்ட போரின் கோரத்தை கண்டவர்கள், உறவுகளை தொலைத்தவர்கள், கணவனையோ, மனைவியையோ, தாயையோ தந்தையையோ சிங்களவனின் குண்டுகள் அழித்ததை நேரிலே பார்த்து கதறிதிரிந்தவர்கள், தடுப்பு முகாமிலிருந்து வந்தவர்கள், கடைசிவரை ஆயுதம் ஏந்திவிட்டு காயப்பட்டு வந்தவர்கள் என சிலரை பார்த்து பேசக்கிடைத்தது.
நான் தமிழ்நாட்டிலிருந்து வருகின்றேன் என்றதும் விரக்த்தியோடுதான் நோக்கினார்கள். உலக் தமிழர்களின் தலைவர் எனத்தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு எம் இனத்தையே அழித்தொழித்தவர் கருணாநிதி என்று பொங்கினார்கள். அவர்களது உதடுகளும், கரங்களும் நடுங்கின. அது மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டி விமானம் ஏறியவர் மீதான கோபத்தையும் பாதிப்புக்களையும் காட்டுவதாக இருந்தது.

எனது பயணம் முடிந்து மீண்டும் கொழும்பு நோக்கி திரும்பினேன். அதே ஓமந்தை சோதனைச்சாவடி. பேரூந்து நிறுத்தப்பட்டது இம்முறை உள்ளே வந்த இராணுவ வீரன் எங்களது அடையாள அட்டைகளை கேட்கவில்லை மாறாக அனைவரும் கையிலுள்ள அல்லது பேரூந்தின் பின்புறம் வைத்துள்ள சுமைகளுடன் வாருங்கள் என்று சொல்லி சென்றான்.
அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவன் பின்னே சென்றோம். ஆங்கே நின்ற மற்ற வீரர்கள் அனைத்தையும் திறந்து காட்ட சொன்னார்கள். அனைத்து பைகளையும் பெட்டிகளையும் திறந்து காட்டினோம். அவனுக்கு திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும் எங்களை விட்டுவிட்டான். மீண்டும் அனைத்தையும் எடுத்து கொண்டு பேரூந்தை நோக்கி பயணித்தோம்.

ஒரே தேசத்தில் மற்றொரு பகுதி இராணுவத்தின் இரும்பு பிடியில் இருப்பதையும், ஆனால் உலகனைத்திற்கும் இந்த உண்மை மறைக்கப்பட்டு வருவதனையும் கண்ணார கண்டு வந்தேன். நலன்புரி முகாங்களும் தடுப்பு முகாம்களுமே உலக கவனத்திற்கு வந்துள்ள வேளையில் திறந்தவெளிச்சிறைச்சாலையில் எம் ஈழத்தமிழர்கள் ஈடு இணையற்று துயருறுவதையும் பார்த்து வந்தேன். சுதந்திரத்தின் அருமையையும் நான் உணர்ந்து வந்தேன்.
இனியும் தொடரும்....
- அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















