Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

இறுதி நாட்களும் எனது பயணமும் - 09

மின்னஞ்சல் அச்சிடுக PDF

Vanni_sunset_travellersஅதுவரை பொறுமையாக இருந்த படையினன் கதிரையில் அமர்ந்தான். அந்தப் படையினன் உண்மையிலேயே என்ன கேட்கப்போகிறான் என்று தெரியாத தயக்கம் என்னை ஆட்டிப்படைத்ததைவிட தரையில் இருந்து இன்னமும் தவித்துக்கொண்டு கிடக்கும் பையனின் பரிதாபக்கோலம்தான் மனதை துன்புறுத்தியது.

‘தங்கச்சி பேர் சொல்லுங்க’ என்று கேள்விகளை கேட்கத் தொடங்கினான். எனினும் அவனது பார்வை அடிக்கடி அந்த பையனில் நிலைத்தது. அந்த படையினனுக்கு இரக்கம் இருந்தாலும் அவனால் தனித்து எந்த முடிவையும் எடுக்கமுடியாது.

 

அந்தப் பையனின்மீது பாதிக்கண்ணும் எழுத்தின்மீது மீதிக்கண்ணுமாக பதிவைத் தொடர்ந்தான்.  எலும்பும் தோலுமாக படையினனின் அருகில்கிடந்த பையன் இன்னமும் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தான். அன்மை நாட்களில்தான் காயமடைந்திருப்பான் போலும்.

 

குருதியிழப்பே அவனை அவ்வளவு சோர்வடையச் செய்திருக்கிறது. அவனுக்கு அதிகமாய் வியர்த்துக்கொட்டிது. அவன் கண்களை மூடிவிடுவானோ என்ற அச்சம் எனக்கு எழுந்ததை போலவே அந்த படையினனுக்கும் எழுந்திருக்கலாம். ஒருவாறு நானும் பெயர், முகவரி அடங்கிய பதிவை கொடுத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு விலகினேன்.

 

சந்தியாவும் கங்காவும் பதிந்துவிட்டுவர நேரம் இரவு பத்து மணியை தாண்டிவிட்டது. மூவருமாகச்சென்று  கூட்டத்திடையே ஒரு இடைவெளியை தேடிப்பிடித்து அமர்ந்துகொண்டோம். என்ன செய்வதென்று புரியவில்லை.

 

பசியோ தாகமோ களைப்போ எதுவுமே தெரியவுமில்லை. ஆனால் எல்லாம் இருந்தனதான். என் சுடிதாரின் தோள்துண்டை விரித்து மூவரும் நிலத்தில் சரிந்தோம். வானம் இருளாகவே இருந்தது.

 

கண்ணுக்கெட்டிய தூரம்வரை மின்குழிகள் எரிந்துகொண்டிருந்தன. இருந்திருந்துவிட்டு வட்டுவாகல் தாண்டிய பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்தன. எனக்கு தலைவலித்தது. மூளை களைத்துப்போனதால் ஏற்பட்ட வலி. கண்களை மூடிக்கொண்டு அமைதியாக கிடக்கத்தான் முயன்றேன். ஆனால் முடியவில்லை.

 

அந்த இரவு மிகவும் கொடியதாய் இருந்தது. இப்போதைக்கு விடியமாட்டேன் என்றது. நித்திரையுமில்லாத விழிப்புமில்லாத அரைமயக்க நிலையில் கிடந்த என் கால்கள் வலித்தன. நாரி அறுந்துவிடுமளவுக்கு உளைந்தது.

 

ஒழுங்கான உணவில்லாத காரணமாய் ஏற்பட்ட சத்துக்குறைபாடுதான் காரணம் என்பதை அறிவேன். ஏனெனில் குருதிச்சோகையால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவள்தான் நான் என்பது எனக்குத் தெரியும். சற்றே திரும்பக்கூட இடமற்று நெருக்கிக்கொண்டு கிடந்த என் உடலால் வேதனையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

vanni-valam-91

உடல் வேதனையைவிட மனவேதனை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. தூங்க இயலாமல் கண்களில் வழிந்த துயரத்தை துடைத்தபடியே அந்த நீண்டதான இரவை கழித்தேன்.

 

லட்சக்கணக்கான மக்களிடையே கிடந்தபோதும் யாருமே இல்லாத உணர்வு என்னை வாட்டியது. அது பெற்றோரையோ உறவுகளையோ நினைத்தபோது ஏற்பட்ட உணர்வல்ல. சரிவர இன்னதுதான் காரணம் என்று குறித்துச் சொல்லமுடியாத ஒரு மாபெரும் வெறுமை என்னை விழுங்கிவிட்டதைப்போல உணர்ந்தேன்.

 

அந்த வெறுமைதான் காலம் முழுதும் இனி என்னை ஆக்கிரமிக்கப்போவதாய் பயங்காட்டியது.

 

17.05.2009. பொழுது புலர்ந்தபோது பிரமிப்பாக இருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் வெட்டைவெளி முழுவதையும் நிறைத்துக்கிடந்தார்கள்.

 

அழுக்கு ஆடைகளோடும் குழப்பமான உணர்வுகளோடும் நின்ற அவர்களில் எவரும் எவருடனும் எதுவும் பேசிப்பகிரவில்லை. ஆளாளுக்கு தண்ணீர் தேடியும் உணவு தேடியும் அலைந்தார்கள்.

உடலால் இயங்கக்கூடிய மனிதர்கள் ஆயிரக்கணக்கானோரிடையே அடிபிடிப்பட்டு அவற்றை கொண்டுவந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் உணவுப் பொதிகளுடனோ தண்ணீர் போத்தில்களுடனோ போவதையும் வருவதையும் காணமுடிந்தது. சிலர் தம் உடைகளையும் நனைத்துக்கொண்டு சென்றார்கள்.

ஒரு போத்தில் தண்ணிக்காககூட இரத்தம் சிந்தவேண்டி இருக்கு’ என்றபடி எங்களை கடந்து சென்றவரை அவதாணித்தேன். அவரது கெண்டைக்காலில் இருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது. கொஞ்சத் தண்ணீருக்கு தொகையானவர்கள் போட்டி போடுவதால் ஏற்படும் தகராறுகளை போக்க படையினர் வரிசையில் நிற்கச் சொன்னார்களாம்.

 

வரிசையில் நி;ன்றால் கிடைக்காதென்று அதை குழப்பிக்கொண்டு நின்ற அனைவருக்கும் மட்டையடி விழுந்ததாம். இப்படியான கதைகளை கேள்விப்படவே தண்ணீர் வேண்டாம் என்றுவிட்டது என் உள்ளுணர்வு.

 

இடிபட்டுப்போய் ஒரு குவளை தண்ணீரைகூட என்னால் எடுத்துவர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அடடா பதியும் இடத்தில் தந்த போத்திலையாவது கொண்டு வந்திருக்கலாமே என்று கவலையாக இருந்தது.

 

இவ்வளவு தொகையானதாக மக்கள் வருவார்கள் என்று படையினருக்கு தெரியாதாம். இலட்சக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் இருந்ததுபற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லையாம்.

vanni-valam-91

அதனால்தான் ஒழுங்குபடுத்தப்பட்ட உணவும் தண்ணீரும் போதாமல் போய்விட்டதாம். சில ஆயிரம்பேர்தான் வருவார்கள் என்று அரசாங்கம் தமக்குச் சொன்னதாக படையினர் சொல்கின்றார்களாம் என்று மக்கள் கதைத்துக்கொண்டார்கள்.

 

யானைப்பசிக்கு சோளப்பொரி கிடைத்ததைப்போல சில ஆயிரம்பேருக்கு உணவு கிடைத்தது. பல்லாயிரம்பேர் பட்டினியோடு கிடந்து அழுந்தினார்கள்.

பரந்த புல்வெளியை பகுதி பகுதியாக முட்கம்பிகள் பிரித்திருந்தன. முட்கம்பியின் வெளிப்பகுதி எங்கும் படையினர் காவல் செய்தபடி நின்றார்கள். அவர்கள் எல்லோரும் என்னவெல்லாம் நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதை புரிய முடியவில்லை. ஏனெனில் அவர்களது முகங்களில் எந்தவிதமான உணர்வுகளுமே இருக்கவுமில்லை.

 

‘அக்கா எங்களால் அடிபிடிப்பட்டு சாப்பாடு தண்ணியெல்லாம் எடுக்க முடியாதக்கா. அதோட ஆளாலுக்கு வந்து எழுப்பி கூட்டிக்கொண்டும் போறாங்கள். ஆமி வந்து வா எண்டு கூப்பிட்டால் வரமாட்டன் எண்டு என்னெண்டு சொல்ல முடியும். நாங்க தாமதிக்கிற ஒவ்வொரு நிமிசமும் பிரச்சினைதான். இண்டைக்கே உள்ள போவமா?’ என்றாள் சந்தியா.

 

அவள் சொல்வதும் சரிதான். மூவரும் சென்று உள்ளே செல்பவர்களது வரிசையில் நின்றோம். வரிசையோ ஆமையைவிட குறைந்த வேகத்தில் நகர்ந்தது. பல நேரங்களில் நகரவேயில்லை. அதிகாலை ஐந்துமணிக்கே வரிசையில் இடம்பிடித்துவிட்ட நாங்கள் பகல் பத்துமணிக்கு பிறகுதான் உள்நுழையும் வாயிலருகே வரமுடிந்தது.

 

ஆனால் அவ்விடத்தில் மூச்செடுக்கவே திண்டாடவேண்டி இருந்தது. குய்யோ முறையோ என்ற சத்தமும் கூக்குரலும் நெருக்கித்தள்ளலுமாக ஒரே களேபரம். சனங்களோடு முண்டியடித்துக்கொண்டு மணிக்கணக்காக நின்றும் அந்த நுழைவாயிலின் கம்பிகளை எட்டிக்கூட தொடமுடியவில்லை.

 

குழந்தைகளை தூக்கிக்கொண்டும் சிறுவர்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டும் நிற்கும் பெற்றவர்கள் படும்பாட்டை பார்க்க பரிதாபமாக இருந்தது.

 

மக்கள் அவ்வளவு நெருக்குவார பட்டுக்கொண்டு நிற்கையில் நானும் முண்டியடித்துக்கொண்டு நிற்பது ஈனத்தனமாகவே பட்டது. அப்படி நிற்பதை மிகுந்த அவமானமாக உணர்ந்தேன். என்னை நானே வெறுத்தேன்.

எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கத்துணிந்தவளாய் அத்தனைகாலம் உறுதியுடன் நின்றேனோ அந்த உறுதியெல்லாம் தொலைந்தவளாய் தவிக்கும் சனங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லக்கூட தகுதியற்றவளாய் நிற்பது கொடுமையானதாய் இருந்தது.

 

‘சந்தியா எனக்கு அந்தரமாக்கிடக்கு சந்தியா. சனம் போகட்டும் நாங்க ஆறுதலா போவம்’ என்றேன் அவளின் காதருகே.

vanni-valam-91

‘எனக்கும் ஒரு மாதிரித்தானக்கா இருக்கு. சனங்கள் என்ன நினைக்குதுகளோ எண்டு குற்ற உணர்வாகத்தான் இருக்கு’ என்றாள் அவளும்.

 

‘சரி. பின்னுக்குப்போவம்’ என்று நான் திரும்ப முயன்றேன். என்னால் உடலைக்கூட திருப்ப முடியவில்லை. நிற்கும் இடத்திலிருந்து காலை தூக்கினால் தூக்கியபடியே நிற்க வேண்டியதுதான். மீண்டும் இடம்பிடித்து ஊன்ற அரைமணிநேரம் தேவைப்படும் என்பதை இவ்விடத்தில் நின்ற எவராலும் மறுக்கமுடியாது. அத்தனைபேரும் அரைக்காலில்தான் நின்று தடுமாறினார்கள்.

 

சனங்களில் முட்டுப்பட்ட என் கைகள் எரிந்தன. அவ்வளவு உடல் வெம்மை. என்னால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. ஒவ்வொரு தடவை காலை நகர்த்தவும் நீண்டநேரம் முயற்சிக்கவேண்டி இருந்தது. சன வெக்கையால் அவிந்துகொண்டிருந்தேன்.

 

மற்றவர்கள் விடுகின்ற மூச்சு என்னில் சுட்டது. ஓவ்வொருவரின் உடலும் அனலெனச்சுட்டது. மற்றவர்கள் என்னில் முட்டும்போது என்னால் கட்டுப்படுத்த முடியாதளவு ஆற்றாமையும் சினமும் வந்தது. அப்படித்தான் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு இயலுமானளவு பொறுமை காத்தேன்.

 

சுமார் ஒரு மணிநேரம் முயன்று ஒவ்வொரு பாதமாய் எடுத்துவைத்து மக்கள் ஐதான பகுதிக்கு வந்தேன். ஓரிரு குடும்பங்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக குந்திக்கொண்டிருந்தவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஏனெனில் கொஞ்சம் நிதானமற்ற நிலையை உணர்ந்தேன். விழமுன் நிலத்தில் அமர்ந்துகொண்டேன்.

 

அப்படியே எனது பையின்மீது சரிந்து மேற்துணியால் மூடிக்கொண்டு அமைதியாக கிடக்க முயன்றேன். சற்றுநெரத்தில் ஓரளவு நிதானத்தை பெறமுடிந்தது.

vanni-valam-91

நான் எப்போதுமே அப்படித்தான். வலியை உணர்ந்து அதை தாங்கிக்கொள்வேன். அங்கம் முழுவதும் ஆயிரம் காயங்களை சுமந்துகிடந்த காலங்களிலும் குளறி அழுதவளில்லை.

 

வலியை மூளையால் கிரகித்து அதை உள்வாங்கி அநுபவித்துத்தானே தாங்கிக்கொண்டேன். இப்போது அதே பழைய காயங்களை  வெய்யில் கடுமையாய் வறுத்தெடுத்தது. சற்றுநேரத்தின்பின் எழுந்து அமர்ந்துகொண்டேன். ஆனால் கண்களில் காட்சிகள் எதுவும் தெளிவாய் தெரியவில்லை.

 

‘என்னக்கா தனிய குந்திக்கொண்டு இருக்கிறிங்க?’ என்று பழக்கப்பட்ட குரலொன்று மெதுவாய் கேட்டது.

 

 

தொடரும்…………….

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
அவலங்களை அனுபவமாகவும் சுதந்திரத்தை வரலாறாகவும் விடுதலையை ஈழத்தின் விடிவாகவும் கொண்டுஎதிர்காலம் தேசத்தின் தேடலாக
1 திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 07:55
jeya
எதிர்காலம் எது என்பதும் அவலங்கள் தொடருமா என்பதும் வரலாறு வழிகாட்டுமா என்பதும் சோதனைகளை சுமக்க முடியுமா என்பதற்கும் அப்பால் சொந்தங்கள் கிடைக்குமா என்பது சோகத்தை சுமக்கும் இந்தக்காலத்தை மக்களின் சொல்லில் அடங்காத அவலமாக கொண்டு வாழும் இனம் இனியாவது பலரின் உயிர்தியாகம் சிலரின் மதிப்பிற்கல்ல ஒருஇனத்தின் விடிவிற்காக இதுவரை என்பதில் பலபக்கம் இருந்தாலும் மற்றவர்களின் அனுதாபத்திற்கு அப்பால் உயிர்தியாகத்தைசாட்சியாக கொண்டு நியாயத்தின்பால் நீதி என்பது நீண்ட நாட்பயணமாக காலம் பதில் சொல்ல வேண்டியது. அதனை இனியாவது எங்கு எதில் எதனை எப்படி என்பதற்கு சாத்தியமானவற்றை கொண்டு தமிழினத்தின் ஈழவிடுதலைக்கு தகுந்தவழியில்சுதந்திரம் எனும் சந்தற்பத்தை தமிழினத்திற்கு எதிராக அரசியலை வளர்த்து தமிழர்களால் தம்மினத்தை அழிக்க வழிதேடி காலம் காலமாக நாட்டின்நலன்களை இனவளர்சிக்காக பயன்படுத்தி எதிர்காலம் நாடு முக்கியமானதல்ல நம் இனம் முக்கியமானது என்பதற்கு இணங்க செயல்பட்டு வந்தது சிங்களம் . அதன்விளைவு இன்று உச்சத்தை அடைந்துள்ளது . அதனை சரியான முறையில் அணுகத்தவறினால் இதுவரை சுதந்திரம் எனும் மரத்தை அரசியல் எனும் சிங்களம் தமிழினத்திற்கான ஆயுதம் ஏந்தி மேல்மரததில் இருந்து அடிமரத்தை வெட்டியது போல் தற்போது அதனை தாங்கி பிடிக்க போட்டி போட்டு நிற்கும் உலக அரசியல் நகர்வானது எமது நலன்கருதி இருக்கும் என்பதை தவிர்த்து எமக்கான சந்தற்பத்தை எதிர்பார்த்து நடக்க வேண்டிய பொறுப்பை எமது இனம் காத்து நடக்கவேண்டியது காலத்தின் கடமை ஆகும்.

வாசகர் கருத்துக்கள், category: "கட்டுரை"

மாசில்லா பிள்ளைகள் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 8 (அனலில் இட்ட புழுக்களாய் துடித்தோம்)
தமிழினம் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 7 (தோல்வி அல்ல தொய்வு)
சாட்டயடி உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
Sad இறுதி நாட்களும் எனது பயணமும்
பண்பின் பயனாக, விடுதலையை வளர்க்க வேண்டும் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
uavum unarvum உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 5 (பிணவாடையில் கரைந்துபோன காற்று)
pinam thinnigal உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
KADAVUL ENGEY? உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
அக்கினிக் குஞ்சுகள்! உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 2
unarvukali erake vitha naram உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-1

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 85 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை