Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 09 (வரலாற்றை மறக்காத இனத்திற்கு வெற்றி நிச்சயமே!)

மின்னஞ்சல் அச்சிடுக PDF
நான் சென்றிருந்த ஊரில் தினமும் மாலையில் அங்கிருந்த ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினேன். திருப்பலியில் மறையுரை நிகழ்த்திய பிறகு அம் மறையுரையில் இருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான சரியான விடையை அல்லது சரியான உணர்வுகளை வெளிப்படுத்துவோருக்கு திருவிழா நாளில் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூலை 19ஆம் திகதி, இன்றைய கால சமூக வாழ்க்கைச் சூழலில் கறை படிவது எமது வாழ்க்கைக்கு உகந்ததா? என்று வினா தொடுத்தோம்.

 

பலரும் பதில் எழுதியிருந்தார்கள். வயது வித்தியாசமோ, அனுபவ வேறுபாடுகளோ இல்லாது பலரும் எழுதியிருந்தார்கள். பலவித பதில்களில் தாங்கள் ஈழத்தில் பகுத்தறிவு பாதையினையும் பரந்துபட்ட ஞானத்தினையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களுள் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியும் ஒருவர்.

 

“போர்க் காலத்தை எடுத்துக் கொண்டால் பிறருக்காக எமது உயிரையும் அர்ப்பணிக்க நேர்ந்தது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை முன் வைக்கிறேன். ஒரு பதுங்கு குழியில் ஒரு சிறிய குழந்தை. அந்த சிறிய குழந்தையின் தாய் தந்தை குண்டு வீச்சில் இறந்து அந்த பதுங்கு குழியில் கிடந்தனர். அத்தருணம் அச்சிறிய குழந்தையும் இறக்க நேரிடும்போது அந்த தாய் அந்த சிறிய குழந்தையை அணைத்து வைத்திருந்ததனால் அந்த தாயின் முதுகு பக்கம் குண்டின் சிறிய துண்டு துளைத்தது. தந்தையின் மேலும் குண்டு பதிந்திருந்தது. சிறிய குழந்தை அனாதையாக அந்த பதுங்கு குழியில் கத்தி அழுதது.

vannihospital-1

குண்டு வீச்சினால் எல்லோரும் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். எல்லோரும் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக கவனிக்காமல் சென்றனர். அவ்வழியே ஒரு பத்து வயது சிறு பையனும் தனது தந்தையுடன் சென்றான். இக்குழந்தையின் அழுகுரலை கேட்டு, தாய் தந்தை விட்டுச் சென்று விட்ட அச்சிறிய குழந்தையை தூக்கி கொண்டு சென்றான். அச்சிறிய குழந்தையின் உடல் முழுவதும் தாய் தந்தை குருதி காணப்பட்டது. அவன் தனது மார்போடு அணைத்து வருவதை அவனது தாய் தந்தை அவதானித்து அந்த பையனிடம் பேசினார்கள்.

 

உனது ஆடை முழுவதும் கறைபடிந்திருக்கு. ஏன் இக்குழந்தையை தூக்கி வந்தாய் என்று கேட்டார்கள். அப்பையன் தாய் தந்தைக்கு சொன்னான். நீங்கள் இறந்து நான் தவித்திருந்தால் என்னை யாரும் ஆதரிக்க மாட்டார். யாராவது எங்களைப்போல சிறுவர்கள் காப்பாற்றுவார்கள்.

 

இதைக்கேட்ட தாய் தந்தை வியப்பில் ஆழ்ந்தனர். பின் தந்தை கூறினார். நீ நல்ல காரியம் செய்திருக்கிறாய். உனது ஆடையில் கறை படிந்தததை அவதானிக்காமல் அந்த உயிரை காப்பாற்றினாய். உன்னை பெற்ற எனக்கு பெருமைதான். இது உண்மை சம்பவம். ஆகவே நாங்களும் இக்குழந்தையுள்ளம் படைத்தவராக எமது ஆடையில் கறைபடிந்தாலும் இதனால் பிறருக்கு நன்மை செய்து வாழ வேண்டும்”. என்று எழுதியிருந்தார்.

 

எழுத வேண்டிய தனிநபர் அனுபவங்கள் ஆழ்கடல் பொக்கிசமாக அபரிமிதமாக இருக்கின்றனர். வலி அனைத்தும் ஒன்று சேர்ந்து தன்னை எழுதுமாறு கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். பேசவே அச்சப்படும் ஈழ மண்ணில் இவை அனைத்தும் சாத்தியமின்றி இருக்கின்றன. இம் மாணவியின் இப்பதிவின் உண்மையை வெளியுலகிற்கு உணர்த்த விரும்பிய நான் இலங்கையில் வெளிவரும் ஒரு மாதாந்திர இதழுக்கு அனுப்பி வைக்கச் சொன்னேன். இக்கட்டுரையும் அனுப்பபட்டது. ஆனால் கருத்து சுதந்திரம் கருத்தடை செய்யப்பட்ட நாட்டில் இருப்பதால் அவர்கள் அதனை வெளியிடவில்லை.

 

பேசுவதைக்கூட அவசர கதியில் பேசிவிட்டு இடம் பெயரும் சூழலில் இருக்கும் எம்மவர்களின் எதிரொலியாக பெரியவர் தொடர்ந்து பேசினார். வலைஞர் மடத்தில் உள்ள மருத்துவமனையில் நான் கண்ட காட்சிகள் இப்போது நினைத்தாலும் என்று ஆரம்பித்தவர்… மீண்டும் தடுமாறினார்…குவியல் குவியலாக பிணங்கள்…பேசவும் முடியாமல் முனகவும் முடியாமல் கனபேர்…தெரிந்த உறவுக்காரர்கள் யாருமின்றியும் ஆறுதலாக பேச ஒருவருமின்றியும் பலர்…மருத்துவர்கள் வரும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்க முயன்று தோற்றுப்போய்கொண்டிருந்தார்கள். யாருமே நிற்க முடியாது பாதர். மனத்திடம் இருந்தது. ஆனாலும் நிற்க முடியாது.

 

கால்கள் அல்லது கைகளில் ஏதாவது ஒன்றை இழந்தவர்கள் துடித்து அழுததையும், காயங்களோடு கதறியதையுமே தாங்க முடியாத நிலையில் இருந்த நான் ஒரு முதியவரைக் கண்டேன். தலை இருந்தது உடல் இருந்தது. இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழ் இல்லை. இரண்டு கைகளும் இல்லை. நாட்டைக்காப்பாற்ற போராடிப் பழக்கப்பட்ட இனம் இப்போது தன்னைக்காக்கவே போராட வேண்டிய சூழலில் யார் பாதர் அவரை தூக்கிச்செல்ல முடியும்? யார்தான் கவனிக்க முடியும் என்று ஆதங்கத்தில் ஆறுதலாய் கேட்டவர் ஆண்டவர் அவரை எடுத்துக்கொண்டாலாவது நல்லது என்றவரின் கண்ணில் கண்ணீர் குறையவில்லை.

 

கடந்த கால நிகழ்வுக்குள் மூழ்கிப்போன பெரியவரின் உணர்வுவுக்குள் கலந்துவிட்ட எனக்கு ஒரு வழக்கு நினைவுக்கு வந்தது. அது 1781ஆம் ஆண்டு நடந்தது. கருப்பின மக்கள் மீது வெள்ளைத்தோலினர் கொண்டிருந்த மனநிலையை உரத்துக்கூறும் வழக்கு அது. மேற்கு ஆபிரிக்காவிலிருந்து நீக்ரோக்களை அடிமையாக மக்காவுக்கு கப்பல் வழியாக கொண்டு சென்றனர். அந்த கப்பவில் 400 நீக்கிரோக்கள் இருந்தார்கள்.

 

போகின்ற வழியில் உப்புக்காற்றும் சுடும் வெப்பமும் இயலாதவர்களின் குமுறலும் ஒன்றிணைய புதுவகையான நோய் கப்பலில் தொற்றிக்கொண்டது. தங்களை காப்பாற்றிக்கொள்ள முனைந்த கப்பல் தலைவன் அடிமைகளுக்கு ஏன் உயிராசை என்று கூறி ஒதுங்கினர். அவர்களை ஒதுக்கினர். நாட்கள் ஆனது. நோய் தீவிரமடைந்தது. நீக்ரோக்களில் ஒவ்வொருவராக சுருண்டு படுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். என்ன செய்வது என்று யோசித்த கப்பல் தலைவன் விபரீதமான முடிவொன்றை எடுத்தான். அதன்படி நோயுற்றிருந்த 132 நீக்குரோக்களை கடலில் தூக்கிவீசினான்.

 

கப்பல் கரையை அடைந்ததும் கப்பல் தலைவன் நேரே நீதிமன்றம் சென்றான். கடலில் எறியப்பட்ட நீக்குரோக்களின் சந்தை விலைக்கு ஈடாக காப்பீட்டு நிறுவனம் பணம் தரவேண்டும் என்று வழக்கு தொடுத்தான். அதற்கு அவர் சொன்ன காரணம், கப்பலில் பயணிக்கும்போது அதன் உள்ளிருக்கும் ஏதாவது பொருள் அழுக ஆரம்பித்தால் அதனை கடலில் கொட்டிவிடுவதன் வழியாக மற்ற பொருட்களை பாதுகாக்க முடியும். அதே போலதான் நோயுற்ற நீக்ரோக்களை கடலில் கொட்டிவிட்டு மற்ற நீக்குரோக்களை நான் காப்பாற்றினேன். எனவே எனக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் என்று வாதிட்டான்.

 

நீதிபதி வெள்ளை இனவெறியின் மொத்த உருவமாய் அமர்ந்திருந்தார். அவர் கப்பல் தலைவனைப்பார்த்து உயிருக்கும் உடைமைக்கும் வேறுபாடு தெரியாதவனே, தெய்வச்சாயலுக்கும் அவர் உருவாக்கிய பொருளுக்கும் வித்தியாசம் தெரியாதவனே, பகுத்தறிவு உடையவர்க்கும் பயன்படும் பொருளுக்கும் மாறுபாடு அறியாதவனே என்றெல்லாம் கடிந்து கொள்ளவில்லை. மாறாக,

 

“ஆடு, மாடுகள், குதிரைகள் கொண்டு செல்லப்படும்போது, நோய் வந்துவிட்டால் . நோயுற்றவர்களை அப்புறப்படுத்தி மற்றவர்களை காத்திடுவது போன்ற முறைப்படிதான் தலைவன் நடந்து கொண்டான். ஆகவே, அவனுக்கு நிறுவனம் நட்ட ஈடு தரவேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.” வெள்ளைச்சட்டையை உதறி அணிந்து கொண்டார்.

 

அப்படித்தான் ஈழத்தமிழர்களை காப்பாற்றுகின்றேன் என்று சொல்லிக்கொண்டு எல்லோரையும் சிங்கள காடையர்கள் அழித்தொழிக்கிறார்கள். பிணக்குவியலாக மக்களை மாற்றுகிறார்கள் என்பதனை நினைக்க நினைக்க அவருக்கு ஆத்திரம் பொங்கியது. தலை கவிழ்ந்து தரையையே பார்த்தபடி இருந்தார்.

 

சகிக்க முடியாது பாதர். எங்களுடன் சேர்ந்து ஒரு குடும்பம் நடந்து வந்தது. அந்த குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் இருந்தார். அவர் அந்த பிள்ளைகளின் தந்தை என்று நினைக்கிறேன். அவரது மனைவி,மாமா மற்றும் தாத்தா ஆகியோரும் அதில் இருந்தார்கள். எங்கும் ஷெல் விழுந்துகொண்டே இருந்தது. தப்பித்தபடியே எங்களைப்போலவே ஓடிக்கொண்டிருந்தார்கள். இடறிவிழுந்த குழந்தையையும் அள்ளிக்கொண்டு மறைவிடம் தேடினார்கள். ஷெல் விழந்தது. அவர்கள் நின்ற இடத்தில் ஒரே ஒரு ஷெல் விழுந்தது. அந்த நபர் இறந்தார். அவரது மனைவி, மாமா, தாத்தா எல்லோருமே இறந்தனர் நான்கு பிள்ளைகளும் அனாதையாகி நின்றார்கள் என்று சொல்லி வார்த்தையை முடிக்க முடியாமல் கேவிக்கேவி அழுதார்.

 

உடல் காயப்பட்டவர்களை ரக்குகளில் தூக்கி போட்டு போனாங்கள். அவர்கள் எழுப்பிய உயிர்க்குரல் இருக்கின்றதே …அப்பப்பா நினைச்சு பார்க்க முடியாதது…எங்கும் சதைத்துகள்களாய் இறைச்சிக்கடை மாதிரித்தான் இருந்தது பாதர். பதினான்கு பதினைந்து வயது பிள்ளை ஒருத்தி தான் சாகப்போற நேரத்திலயும் தன் பெற்றோர் மற்றும் சகோதரர்களை நினைத்து துடித்து கதறியது இன்னும் என்னை என்னமோ செய்கிறது என்ற தன் ஏக்கத்தைக் கூறி  மிரட்சியோடு இருந்தார்.

 

ஒரு பெரியவர் தன்னுடன் மூன்று இளவயது பிள்ளைகளுடன் எங்களுடன் இருப்பதை நாங்கள் நின்று மூச்சு வாங்கியபோது பார்த்தோம். தம் பிள்ளைகளின் குடல் நனைக்க பாண்கூட இல்லாமல் துடிதுடித்தது தன் பிறப்பை நினைத்து கதறினார். அவசர அவசரமாக மற்றவர்களிடம் ஓடி கையேந்தி நின்றார். தான தர்மத்திற்கு பெயர்போன எங்களுக்கு இருந்ததை மட்டுமே பகிர முடிந்தது.    அடுத்த வேளை உணவு இருக்கலாம். நமது உயிர் இருக்குமா என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில் இருந்த எல்லோரும் பகிர்ந்ததால்தான் எம் பிள்ளைகளும் உணவுச்சுவை மறக்காது வழிநடந்தார்கள்.

 

வலைஞர்மடத்தில் இருந்நு இடம்பெயர்ந்தபோது மேற்றானியார் எங்களுக்குத் தேவையான உதவிகள் சிலவற்றை செய்தார். அங்கும் இருக்கமுடியாது என்றபோது அங்கிருந்து அனைத்து குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மாத்தளன் சென்றோம். மாத்தளனிலும் ஷெல்லடி அதிகரித்தவுடன் அனைவரையும் அழைத்துக்கொண்டு அருட்தந்தையர் முள்ளிவாய்க்கால் பக்கமாக நகர்ந்தார்கள்.

 

தாங்கள் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்துவிட்டு என்னை அனுப்பிவிட்டார்கள். செல்ல மனமின்றி நானும் மூன்று அருட் சகோதரிகளும் சிறிய கப்பலில் ஏறி இரவோடு இரவாக விமானங்களின் வெளிச்சத்தில் புல்மோட்டை என்னுமிடத்தில் வந்து இறங்கினோம். அங்கே கல்வி இலாகா அலுவலகமாக மகாவித்தியாலயக் கட்டடம் இருந்தது. அங்கே எங்களை அடைத்து வைத்தார்கள். ஏறக்குறைய ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் அங்கிருந்தார்கள். மூன்று நாள் சிறை வாசத்திற்கு பிறகு அருட் சகோதரிகளை விட்டு விட்டார்கள். எங்களை காமினி முகாமில் சிறை வைத்தார்கள். இருபது நாட்கள் அங்கிருந்த நான் அருட் தந்தையர்களின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டேன்.

 

குழந்தையர், அருட்தந்தையர்களின் கரம்பற்றி பாதுகாப்புதேடி முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் சென்றார்கள். இப்பகுதியில்தான் 50,000 இற்கு மேற்பட்ட மக்களை சிங்கள காடையன் கொன்று குவித்தான். அக்கொலைக்களம் நோக்கி எம் பிள்ளைகள் அனைவரும் இடம் பெயர்ந்தார்கள். அங்கே சொல்லெண்ணா துன்பத்துக்கு ஆளானார்கள். பெரிய அவலங்களை சந்தித்தார்கள்.

 

சுற்றி குண்டுகள் விழுந்த நேரங்களில் பிள்ளைகள் தங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தங்களுள் யாரும் களப்பலி ஆகிவிடக்கூடாதென்று அச்சத்துடன் வானையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வினாடியும் யுகம்போல கடந்தது. ஆயுதங்கள் குறைவாக இருந்தாலும், ஆட்பலம் குன்றினாலும் சர்வதேசம் கைவிட்டாலும், அண்டை நாடுகள் ஆயுத அரண் அமைத்தாலும் கடைசிவரை போராடிய எம்மவர்கள் எம் போராளிகள் ஒரு கணம் யோசித்தார்கள். சிங்கள காடைகள் மக்களை மொத்தமாக அழித்துவிடுவார்களோ என்று துடிதுடித்து பின்வாங்கினார்கள். அப்போது மக்களை இராணுவம் சுற்றி வழைத்தது. அந்த வளையத்திற்குள் எம்பிள்ளைகளும் அகப்பட்டார்கள்.

 

எங்கள் குழந்தைகள் அனைவரையும் வவுனியாவிற்கு அழைத்து வந்தார்கள். அங்கிருந்த முகாம் ஒன்றில் அடைத்து வைத்தார்கள். அது வலையம் நான்கு எனப்பட்டது. ஓராண்டு அங்கிருந்து பிறகு பலரின் முன் முயற்சிக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்கள். படபடப்பு மிகுந்த போர்க்கால நினைவுகளுடன் நடு இரவில் எழுந்து கதறிய அனுபவங்கள் அவர்களுக்கு உண்டு. எவர் மீதும் நம்பிக்கை இல்லாத வறட்சி உணர்வு உண்டு. கை நடுக்கங்கள் உண்டு. மேசை விழுவதையும் உணவு தட்டு தடுமாறுவதையும் கேட்டு அலறும் நிலை இருக்கிறது. உணவு இன்றி செத்தவர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களை நினைத்து முகம் வெளிறி இருக்கிறார்கள். இரத்தமே காட்சிகளான வெளியில் நடந்து வந்தவர்களுக்கு சிகப்பு நிறமே வேதனைக்குரியதாக இருக்கின்றது.

 

தொடர்ந்து பேசியவர் தம் ஆதங்கத்திற்கு நடுவில் சில ஆண்டுகள் முன்னோக்கி சென்றார். ஒருமுறை தந்தை செல்வா அவர்கள், தமிழனைக் காப்பாற்ற ஆண்டவனால்தான் முடியும் என்றார். காலப்போக்கில் மக்களிடம் இறைநம்பிக்கையும் குறைஞ்சுபோச்சு பாதர். கடவுள் இல்லை நமக்குதான் எல்லாம் தெரியும் என்று சிலர் வாழ்ந்திருந்தார்கள். ஆனால் எம் பிள்ளைகள் யாரையும் அழியவிடாமல் இறைவன் காப்பாற்றினார். அன்று எகிப்தில் இருந்தது, வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்திற்கு இடம்பெயர்ந்த இஸ்ரேலிய மக்களுடன் இருந்து வழிநடத்தியது போல எங்களுடனும் இறைவன் உடனிருந்தார் என்ற தமது விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

 

எங்களுடன் இருக்கும் குழந்தைகளுக்கு சொல்வது போலவே இனிவரும் பிள்ளைகளுக்கும் நாங்கள் சிலவற்றை சொல்ல ஆரம்பித்திருக்கின்றோம் பாதர். இவர்களது, தாய் தகப்பன் செய்த தியாகங்கள் சுதந்திர மண்ணுக்காக அவர்கள் சிந்திய இரத்த துளிகள். உயிர் மாத்திரமே ஆயுதமாக இருந்த வேளையில் அதையே ஆயுதம் தாங்கி ஆனந்தமாக சமர் புரிந்த சகோதரங்கள் அனைவரையும் பற்றி சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

 

வரலாற்றை மறக்காத இனம் எப்பாடு பட்டாலும் விடுதலையை ஒருநாள் நிச்சம் வென்றெடுக்கும் என்ற நம்பிக்கையை வரலாறு காட்டும் புனிதத்துவத்தை எடுத்தியம்பிகின்றோம். மேற்கில் மறையும் சூரியின் கிழக்கில் எழுந்தே ஆகவேண்டும். பறவைகள் தரைக்கு வந்தே ஆகவேண்டும். மக்கள் சக்தி எப்போதும் வெற்றியின் சக்தி. இதுதானே பாதர் நியதி என்றார். நான் கையெடுத்து கும்பிட்டேன்.

 

(சந்திப்போமா….)

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 

முன்னைய பதிவுகள்

01 02 03 04 05 06 07 08 சிறை 1 சிறை 2 சிறை 3

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( சனிக்கிழமை, 14 ஜனவரி 2012 00:55 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "கட்டுரை"

மாசில்லா பிள்ளைகள் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 8 (அனலில் இட்ட புழுக்களாய் துடித்தோம்)
தமிழினம் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 7 (தோல்வி அல்ல தொய்வு)
சாட்டயடி உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
Sad இறுதி நாட்களும் எனது பயணமும்
பண்பின் பயனாக, விடுதலையை வளர்க்க வேண்டும் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
uavum unarvum உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 5 (பிணவாடையில் கரைந்துபோன காற்று)
pinam thinnigal உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
KADAVUL ENGEY? உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
அக்கினிக் குஞ்சுகள்! உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 2
unarvukali erake vitha naram உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-1

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 86 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை