தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில் இரண்டாவது தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்னாஸ்டிக் குழுநிலைப்போட்டியில் முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்ற இவ்வீரன் தனிநபருக்கான போட்டியிலும் தனது இரண்டாவது பதக்கத்தை பெற்றுள்ளார்.
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்றுவரும் இப்போட்டிகளில் செல்லத்துரை பிரசாந்த்தின் அதீத திறமைக்காக ஆகக்கூடிய புள்ளியான 15.500 ஐக்கொண்டதாகவும், இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் 14.125 புள்ளிகளையே பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1986 ஆம் ஆண்டு பிறந்த பிரசாந்த தனது ஐந்து வயதிலேயே ஜிம்னாஸ்ரிக் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபடதொடங்கியிருந்தார். இவரது தனித்திறமைகாரணமாகவே குறித்த விளையாட்டில் அவுஸ்திரேலியாவின் தரம் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்களவில் உயரும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.











கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















