தமிழர் தாயகத்தில் நடைபெற்ற சிறிலங்கா அரச படைகளின் கொடிய வன்செயல்களுக்கு நீதி கோரி தொடுக்கப்பட்ட முறைப்பாட்டில் அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண் சாட்சியம் அளித்துள்ளார்.
தற்போதைய அவுஸ்திரேலியாவிற்கான சிறிலங்கா தூதுவர் போர் நடைபெற்ற இறுதிக்காலப்பகுதியில் கடற்படைத்தளபதியாக பணியாற்றியவர். மனிதாபிமான பணிகளில் ஈடுபட்ட கப்பல்கள் மருத்துவமனைகள் கடற்படையினரால் இலக்குவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக ஐநா அறிக்கை தெரிவித்திருந்தது.
தற்போது பொதுநலவாய நாடுகளின் கூட்டம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தொடுக்கப்பட்ட இம்முறைப்பாட்டில் அவுஸ்திரேலிய தமிழர்கள் பலர் சாட்சியமளித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய காவல்துறையினரிடம் முதற்படியாக கையளிக்கப்பட்ட இம்முறைப்பாட்டில் மகிந்த ராஜபக்ச மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முறைப்பாட்டை பொறுப்பேற்ற காவல்துறையினர் அதில் தீவிர கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ஆவணத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவின்போதும் தப்பிய திருமதி மீனா கிருஸ்ணமூர்த்தி தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















Let's speak for Srilankan Tamils.