Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

சிட்னி மற்றும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபகலைமாலை - 2011 நிகழ்வுகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

2011_Thileepan_Melb_07sஅவுஸ்திரேலியாவில் மெல்பேணில் தியாகி திலீபன் கலைமாலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் அமைதியான கௌரவமான வாழ்வுக்காக, அறவழியிலான போராட்டத்தின் அதியுச்ச தியாகத்தை மேற்கொண்ட திலீபன் அவர்களின் நினைவுகளை சுமந்து அரங்கம் நிறைந்த நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 - 09 - 2011 அன்று மாலை 5 மணிக்கு தேசிய கொடியேற்றல்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வு மெல்பேண் பிறிஸ்ரன் நகர மண்டபத்தில், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

அவுஸ்திரேலிய தேசிய கொடியை திரு. அல்பிரட் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியகொடியை திரு. பாலா அவர்கள் ஏற்றிவைத்தார். தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ஜெயகுமார் ஈகச்சுடரை ஏற்றிவைக்க, கேணல் சங்கர் மற்றும் கேணல் ராயு அவர்களின் திருவுருவப்படங்களுக்கு முறையே திரு. இளைய பத்மநாதன் அவர்களும், திரு. சிசு நாகேந்திரம் அவர்களும் ஈகச்சுடர்களை ஏற்றிவைத்தனர்.

நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் மலர்வணக்கத்தை நிறைவுசெய்துகொள்ள அகவணக்கத்துடன் கலைநிகழ்வுகள் ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக தியாகி திலீபனின் நினைவுகளை தாங்கிய பாடல்களும் எழுச்சிக்கானங்களும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து செல்வி ருட்சிகா இளங்குமரன் அவர்கள் ”ஈழவிடுதலை காணப்போகின்றோம்” என்ற பாடலுக்கு நடனமாடினார்.

அதனைத்தொடர்ந்து தியாகி திலீபனின் நினைவுகளை தாங்கிய காணொளி அகலத்திரையில் காண்பிக்கப்பட்டது. தியாகி திலீபன் என்ன கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை தியாகம் செய்தாரோ, அதேநிலையே இப்போதும் இருக்கின்றது என்றும், தியாகி திலீபன் கேட்டுக்கொண்டதுபோல அனைத்து மக்களும் எழுச்சிகொண்டு பொங்குதமிழ் போன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பதன் ஊடாக தமிழர்கள் தமது சுதந்திரவேட்கையை வெளிக்கொண்டுவரவேண்டிய காலகட்டம் எழுந்துள்ளதாக அக்காணொளி பதிவுசெய்திருந்தது.

தொடர்ந்து செல்வன் துவாரகன் சந்திரன் அவர்கள், தியாகி திலீபனின் நினைவுகளைச் சுமந்த கவிதையை பதிவுசெய்தார்.

இடைவேளைக்குப் பின்னர் ஆரம்பமான நிகழ்வில் சிறுமி அபிதாரணி சந்திரன் அவர்கள், தியாகி திலீபனின் நினைவுகளை சுமந்த புதிதாக இயற்றிய பாடலைப் பாடினார். அதைத் தொடர்ந்து ஜேர்மனியிலிருந்து வருகைதந்திருந்த, நாச்சிமார் கோயிலடி இராஜன் தலைமையில் சிட்னி மெல்பேண் கலைஞர்கள் இணைந்து வழங்கிய ”சிறுதுளி” என்ற வில்லிசை நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய கலையை வெளிநாடுகளிலும் பேணிவரும் திரு. இராஜன் அவர்களின் கலைச்சேவையை அனைவரும் கைதட்டி பாராட்டினர்.

தியாகி திலீபனின் நினைவுகளை சுமந்து நடைபெற்ற இந்நிகழ்வு, இரவு எட்டுமணிக்கு தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று அனைவரும் உறுதியெடுத்தபின்னர் எழுச்சியுடன் நிறைவடைந்தது..

 

******************************************************************

 

அவுஸ்திரேலியாவில், சிட்னி ஹோம்புஸ் ஆண்கள் பாடசாலையில் அகவணக்கத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவுஸ்திரேலியா நாட்டுக் கொடியினை திரு செல்லையா சிறிகரன் அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியை ஜனகன் சிவராமலிங்கம் அவர்களும் ஏற்றிவைத்தனர். பொதுச்சுடரை மாணிக்க விநாயகம் மனோகரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஹோம்புஸ் ஆண்கள் பாடசாலையில் தியாகச் சுடர் லெப்டிணன் கேணல் திலீபனுக்கும், கேணல் சங்கருக்கும், தமிழ் நாட்டிலே சமீபத்தில் தீயில் தியாகமாகிய தோழர் செங்கொடிக்கும் தமிழ் மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

எமது விடுதலைப் போராட்டத்திலே தமது இன்னுயிரை நீத்த மாவீரரையும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து மாவீரன் டயஸ் கந்தாசாமியின் சகோதரர் மயில்வாகனம் தனபாலசிங்கம் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றினர். அதனை தொடர்ந்து மக்கள் அகவணக்கம் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து “மலர்தூவ வாருங்கள் என்ற பாடல் ஒலிக்க திரு வாகீசன் ஐயா அவர்களின் தலைமையில் மக்கள் வரிசையாக நின்று தியாகதீபம் லெப் கேணல் திலீபனுக்கும் கேணல் சங்கருக்கும் செங்கொடியின் திருவுருவப் படங்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், தொப்புள்கொடி உறவினருமான திரு திருவெங்கடம் அவர்கள் தலைமையுரையை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து திரு மனோகரன் அவர்கள் தியாகச் சுடர் திலீபன் பற்றிய உணர்வுபூர்வமான ஆக்கத்தை பகிர்ந்து கொண்டார.

தொடர்ந்து செல்வி ஆருதி குமணன்; இளையோர் சார்பில் ஆங்கிலத்திலே தியாகி திலீபன் பற்றி உரையாற்றினார். அடுத்ததாக பிரதம பேச்சாளர் மாயில்வாகனம் தனபாலசிங்கம் அவர்கள் “தமிழ்த் தேசியம்” என்னும் பொருளில் கருத்து மிக்க ஒரு செறிவான உரையை நிகழ்த்தினார்.

நிறைவாக எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் நடுவராக பணியாற்ற சுவையான ஒரு பட்டிமன்றத்துடனும் கொடியிறக்கலுடனும் தியாகி திலீபனின் நினைவுகள் நெஞ்சில் நிலைக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

2011_Thileepan_Melb_01

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 02:28 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "புலம்"

UN need to Arrast Rajapakse and the armed forse leaders அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)
அவுஸ்திரேலிய பெண் அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)
http://koothadiveddai.blogspot.com/ இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு)
ealam eangal thagam மே 2009 அரச படைகளின் வெறியாட்டம்! உலகத்தமிழர் பேரவை ஒளிப்படங்களை வெளியிட்டது!! (படங்கள் இணைப்பு)
ananthasankari வல்வை தந்த பெருமகனினால் தமிழருக்கு நல்ல சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது! - கிளிநொச்சியில் வேளமாலிகிதன்!!
thanks மிகக்கொடூரமான போர்க்குற்ற காணொலி ஒன்றை அடுத்தவாரம் ஒளிபரப்பவுள்ளதாக சனல்-4 அறிவிப்பு!
THANKS தாயக உறவுகளுக்காக நீதியை நாடி நிற்கும் ஒஸ்ரேலிய ஈழத்தமிழர்கள் - அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
கருத்து இழந்துபோன உறவுகளை நினைவுகூர்ந்து தமிழகத்தில் அலையென திரண்ட மக்கள் வெள்ளம்! ( படங்கள் இணைப்பு)
Uthavi 800000 பார்வையாளர்களை கலங்கவைத்த சனல் 4 காணொளி! வருட இறுதிவரை பிரித்தானியா காலக்கெடு!!!! (காணொளி இணைப்பு)
srilanka killing tamil civilians கண்ணீரில் உறையவைத்த காணொளி ஐநாவில் காட்சிப்படுத்தல்! மேலதிக விபரங்கள் இணைப்பு (காணொளி)

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 73 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை