தமிழ்நாட்டின் மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தமிழீழத்தில் உயிரிழந்த உறவுகளுக்கும் தமிழகத்தில் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும் தங்களது அஞ்சலியை செலுத்தினர் .
ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் ஜூன் 26 ஆம் நாள் நினைவு நிகழ்வில் குடும்பம் குடும்பமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு தமது உணர்வெழுச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழ்த்தேசிய பிரதிநிதிகளான பழநெடுமாறன், காசி ஆனந்தன், சீமான் உள்ளிட்ட பெரியோர்கள் பங்குகொண்ட இந்நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் எதிர்பாராத வகையில் கூடியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடும் காற்றையும் மழையையும் பொருட்படுத்தாது அலையென திரண்ட இம்மக்கள் வெள்ளத்தில் பெங்களுரிலிருந்து 600 வரையான IT தொழிநுட்பவல்லுநர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
மொழியால் இணைந்துநிற்கின்றோம் என 70 வருடங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் குடியேறிய குடும்பவழித்தோன்றலான செல்வரசு தெரிவித்ததாக ஐபிஎன் செய்திச்சேவை தெரிவிக்கின்றது.













































கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















புலம் பெயர்ந்த மக்களாகிய நாமும் அவர்களுக்கு
ஆதரவாக இங்கும் செய்திருக்களாமோ என்று எண்ணத்தோன்றுகிறது.