
கைதுசெய்யப்பட்ட அல்லது சிறைப்பிடிக்கப்பட்ட பொதுமக்களை போராளிகளை சித்திரவதை செய்து கொலைசெய்யப்படும் காட்சிகளை கொண்ட காணொளியை சனல் 4 ஒளிபரப்பியுள்ளது. இக்காணொளியில் பெண்போராளிகள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகளை கொண்டுள்ளது.
குறித்த காணொளி வெளியிடப்பட்டபின்னர் அதுபற்றி கருத்துக்கூறிய பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இவ்வருட இறுதிக்குள் குறிப்பிட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களில் சிறிலங்கா தனது செயற்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் ஏனைய வழிமுறைகள் ஊடாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆனால் பிரித்தானியாவின் கருத்துப்பற்றி கருத்துக்கூறிய சிறிலங்கா அரசாங்கப் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்கல தமது அரசுக்கு காலஎல்லை விதிப்பது பற்றி கடுமையாக விமர்சித்தார்.
ஈழத்தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைகளை வெளிக்கொண்டுவந்த, சனல் 4 இன் சிறிலங்காவின் கொலைக்களம் என்ற காணொளியை ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரத்தில் மட்டும் 810000 பார்வையாளர்கள் பார்வையிட்டதாக அற்றன்சனல் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானிய சனல் 4 தொலைகாட்சியில் வெளியான விவரணம்
அவுஸ்திரேலிய ABC தொலைகாட்சியில் வெளியான விவரணம்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















