போரின் கடைசி வாரங்களில் சிறிலங்கா படையினரால் தமிழ் மக்களுக்கும் சரணடைந்த போராளிகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக்கொடூரமான காணொலியை அடுத்த வாரமளவில் சனல் - 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ளது அறிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள சனல்-4 தொலைக்காட்சியின் ஜோன் ஸ்னோ தொகுத்தளிக்கும் பின்னிரவு செய்திப்பெட்டக நிகழ்ச்சியில் இந்த காணொலி ஒளிபரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது தொலைக்காட்சி இதுவரை காலமும் ஒளிபரப்பிய குரூரமான காணொலிகளில் இதுபோன்ற ஒன்றை தாம் காணவில்லை என்றும் இந்த காணொலி காண்பிக்கப்படுவதற்கு முன்னர் பார்வையாளர்களுக்கு உரிய முன் அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள மேற்கொண்டுள்ளதாகவும் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட காணொலியில் சிறிலங்கா இராணுவத்தினர் தமது கொடூரமான கொலைகளை எவ்வாறு போர் வெற்றியாக கொண்டாடுகிறார்கள் என்பதும் பொதுமக்கள் தங்கியிருந்த முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகள் ஆகியவை சிறிலங்கா படையினரால் எவ்வாறு வேண்டுமென்றே இலக்குவைத்து தாக்கியழிக்கப்பட்டன என்பது பற்றியும் இறந்த பெண் போராளிகள் எவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது பற்றியும் உயிருடன் தடுப்புக்காவலில் காணப்படும் போராளிகள் பலர் எவ்வாறு பின்னர் இறந்தார்கள் என்பது பற்றியும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட காணொலி கையடக்கத்தொலைபேசி கமராவினால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறிலங்கா இராணுவம் சாட்சிகளற்ற போரின் ஊடாக அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கும் நோக்கத்துடன் எல்லா பன்னாட்டு அமைப்புக்களையும் வன்னியிலிருந்து வெளியேற்றியது. ஆனால் நவீன கையடக்க தொலைபேசியினதும் செய்மதி தொழில்நுட்பத்திடமும் அது தோற்றுவிட்டது என்று நிகழ்ச்சியின் இயக்குநர் கலும் மக்ரே கூறியுள்ளார்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















