தமிழ்நாட்டின் சிந்தனையிலும் போக்கிலும் ஒரு மாறுபாட்டை உண்டாக்கியவர் பெரியார். ஈ.வெ.ரா. இவர் அதிகம் பயன்படுத்திய சொல் 'வெங்காயம்'. 'உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாமல் போய்விடக்கூடியது' என்பதால், 'பயனில்லாததை, ஒன்றுமில்லாததைக்' குறிக்க அவர் 'வெங்காயம்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்பார்கள். ஆனால், வெங்காயத்தால் எவ்வளவு பயன் கிடைக்கிறது என்பதைப் பட்டியல் இட்டால் அது 'வெங்காயம்' இல்லை என்று தெரிந்துகொள்ளலாம்.ஆங்கிலத்தில் 'Onion' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த 'ஆனியன்' என்ற வார்த்தைக்கு மூலமான 'இலத்தீன்' சொல்லான 'யூனியோ' என்பதற்கு 'பெரிய முத்து' என்று பொருளாம். பல வித உடற்கோளாறுகளையும் தீர்த்துவைக்கும் வெங்காயத்திற்கு இந்தப் பெயர் பொருத்தம்தானே?
'என் பெண்ணைக் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறும் மாமனார், மாமியாரிடம் 'கண்டிப்பாக வெங்காயம் நறுக்காமல் பார்த்துக்கொள்கிறேன்' என்று மாப்பிள்ளை சொல்வது பழைய கால நகைச்சுவைக்காட்சிகளில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு. வெங்காயத்தைத் தண்ணீரில் நனைத்துவிட்டு நறுக்கினால் அவ்வளவாகக் கண் எரியாது, வெங்காயம் நறுக்குகையில் 'சூயிங் கம்' சாப்பிட்டால் கண் எரியாது என்று பல உத்திகள் கொடுக்கப்பட்டாலும் 'தன்னை வெட்டிக் கொல்பவரை, தனது அச்செயலுக்காக வருந்தி அழ வைக்காமல்' வெங்காயம் விடுவதில்லை. வெங்காயம் ஏன் கண்களைக் கலங்கடிக்கிறது தெரியுமா? அதில் உள்ள வேதிமமான 'அலைல் ப்ரொபைல் டை சல்பைடு' தான் இதற்குக் காரணம். இந்த ஒரு சங்கடம் தவிர, வெங்காயத்தால் மற்ற எல்லாமே நன்மை, நன்மை, நன்மையைத் தவிர வேறில்லை என்று அடித்துச் சொல்லலாம்.
பல தாது உப்புகளும், புரதங்களும், விட்டமின்களும் நிரம்பியுள்ள வெங்காயம், ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் மருந்துப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப் படுவது.
உடல் குளிர்ச்சிக்கு உதவுவது வெங்காயம். குறிப்பாக, சின்ன வெங்காயத்தினை நெய்யில் வதக்கி, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட, சீதபேதி எனப்படும் வயிற்றுப்போக்கு நிற்கும்.
தலைவலி நிற்கவே இல்லையா? வெங்காயத்தை நறுக்கி அதன் சாற்றை நெற்றிப்பொட்டில் தடவ, தலைவலி உடனடியாகக் குறையும்.
உடலில் இன்சுலினைச் சுரக்கச் செய்யவும், சர்க்கரை அளவைக்கட்டுப்படுத்தவும் உதவுவது வெங்காயம். நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.
சிறிய வெங்காயத்தின் சாறு, உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த வல்லது. கொழுப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டவர்கள், மாரடைப்புக்கு ஆளானவர்கள் அடிக்கடி வெங்காயத்தைச் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.
உரித்த வெங்காயத்துடன், வெல்லத்தைச் சேர்த்து மென்று சாப்பிட, பித்தக்கோளாறுகள், பித்தவாந்தி, ஏப்பம், தலைவலி போன்றவை பறந்தோடிவிடும். வெங்காயத்தைத் தண்ணீரில் வேகவைத்து அந்தத் தண்ணீரைப் பருகினால் சிறுநீர்க்கடுப்பு மறையும்.
வெங்காயச் சாற்றினைப் பஞ்சினில் நனைத்து, பற்களில் தேய்க்க, பல்வலி மற்றும் ஈறுகளில் ஏற்படும் வீக்கம் நீங்கிவிடும். தோல் வியாதிகளான படை, தேமல் இவற்றிற்கும் வெங்காயம் மருந்தாகப் பயன்படுகிறது. தோலில் அரிப்பு உள்ள இடங்களில் வெங்காயச்சாற்றைத் தடவி வர, இவை மறையும்.
இரவில் வெங்காயம் கலந்த உணவுகள் அல்லது பச்சை வெங்காயத்தைச் சாப்பிடுவது தூக்கத்தினை வரவழைக்கும்.
பச்சை வெங்காயம் சீரணத்திற்குச் சிறந்தது. வட இந்திய உணவுகள் பொதுவாக நெய், வெண்ணெய் அதிகம் கலந்திருக்கும். எனவே அவர்கள், பச்சை வெங்காயத்தையும் அதிகம் சேர்த்துக்கொள்வதைக் காணலாம். இது சீரணத்திற்கு உதவுவதுடன், கொழுப்பு உடலில் சேராமலும் காக்கிறது.
வெங்காயச்சாற்றுடன் கடுகெண்ணெய் கலந்து மூட்டுக்களில் தடவிவர, மூட்டுவலி குணமாவதைக் காணலாம்.
கொஞ்சம் வெங்காயத்தை அரைத்து, உப்பு, வெறும் சோறு இவற்றுடன் கலந்து பிசைந்து வெற்றிலையில் வைத்துக் கட்டுப்போட்டால், நகச்சுற்று சரியாகும்.
தேள் கொட்டிய இடத்தில் உடனடியாக வெங்காயத்தை நறுக்கித் தேய்ப்பதன் மூலமும், பாம்புக்கடிக்கு பச்சை வெங்காயத்தை மென்று தின்பதன் மூலமும், நஞ்சால் ஏற்படும் பாதிப்பு குறையும். பிறகு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.
சின்னவெங்காயத்தை வதக்கித் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் வெங்காயத்தை, விளக்கெண்ணெயில் வதக்கிச் சாப்பிடலாம். உடனடியாகப் பலன் உண்டாகும். வெங்காயம் சிறு குடல் அழற்சியைப்போக்கவும், குடல் பாதையை சுத்தம் செய்யவும்கூட உதவுகிறது.
மஞ்சள் வெங்காயம் இவற்றை அரைத்துச் சுட வைத்து அவற்றை வேனல் கட்டிகளில் தடவினால், சீக்கிரம் பழுத்து உடைந்துவிடும். முகப்பருத் தொல்லை உள்ளவர்கள் வெங்காயத்தை நறுக்கி, பருக்களின் மீது தேய்க்க பருத்தொல்லை போயே போச்சு.
வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். குறிப்பாக உடல் சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலுக்கு இது மிகவும் நல்லது. புகை பிடிப்பதால் அல்லது தொழிற்சாலைகளில் மாசு கலந்த காற்றை சுவாசிக்க நேர்பவர்கள், வெங்காயச் சாற்றை அடிக்கடி அருந்திவர நுரையீரல் சுத்தமாகும். இரத்த அழுத்ததைக் குறைக்கும் வல்லமையும் வெங்காயத்திற்கு உண்டு.
வீட்டிற்கு 'வண்ணம்' பூசுகிறீர்களா? அந்த நெடியைத் தாங்க முடியவில்லையா? உடனே இரண்டு பெரிய வெங்காயங்களை இரண்டாக நறுக்கி வீட்டின் நான்கு மூலையிலும் வையுங்கள். அதே போல், வீட்டில் நோயாளிகள் இருந்தாலும் கிருமிகள் பரவாமல் தடுக்க, இதைச் செய்யலாம். ஏனெனில் , வெங்காயம் சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளை உறிஞ்சிவிட வல்லது. எனவே, சமையல் செய்ய வெங்காயம் தேவையானால், நறுக்கி நீண்ட நேரம் வைக்காமல் உடனடியாகப் பயன்படுத்தி விடுவது நலம்.
இப்பொழுது சொல்லுங்கள். இத்தனை பலன்களைத் தரும் வெங்காயத்தை 'என்ன பெரிய வெங்காயம்?' என்று ஒதுக்க முடியுமா?








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















Wow! super onion
நல்ல கட்டுரைகளை எழுதும் உங்களுக்கும், வெளியிடும் ஈழ நேசனுக்கும் என் நன்றி.