Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

சர்வதேசம் மீண்டும் கைவிட்டு விடுமா?

மின்னஞ்சல் அச்சிடுக PDF

mullivaikkal7509_9ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்த்தவர்கள் பலருக்கும் ஏமாற்றம்.

இன்னமும் மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடியவில்லை.

ஆனாலும் இனிமேல் இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பில்லை என்றே பலரும் கணித்துள்ளனர்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்குழு அறிக்கையை அனுப்பி விட்டாரே, இனி எதற்குப் பொறுக்க வேண்டும்? என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.

மொத்தத்தில் தமிழர்கள் பலரிடமும் இந்த விடயத்தில் ஒரு நம்பிக்கையீனம் இன்னும் இழையோடிக் கொண்டிருக்கிறது.

எங்கே சர்வதேச சமூகம் எம்மைக் கைவிட்டு விடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டிருக்கிறது.

2009 மே மாதம் சர்வதேச சமூகம் வந்து காப்பாற்றும் என்று நம்பியிருந்தவர்களுக்கு, இப்போதைய நகர்வுகளில் நம்பிக்கை ஏற்பட்டிருக்க நியாயமில்லை.

ஆனால் இப்போதைய சூழலில் முக்கியதொரு விடயம் குறித்த தெளிவுக்கு வர வேண்டியுள்ளது.

சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உறுதியுடன் இருக்கிறதா, அல்லது அவர்களுக்கு வேறேதும் உள்நோக்கம் இருக்கிறதா என்பதற்கு முதலில் விடை தேட வேண்டும்.

இந்தக் கேள்விக்கான விடையில் தான் சர்வதேச சமூகம் குறித்த எமது எதிர்பார்ப்புகள் மிகையானவையா என்ற தீர்மானம் ஒன்றுக்கு வர முடியும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை என்ற விடயத்தில் நான்கு விதமான நிலைப்பாடுகள் சர்வதேச சமூகத்திடம் உள்ளன.

முதலாவது - நம்பகமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர், ஐ.நா நிபுணர் குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனிதஉரிமை அமைப்புகள் இதனையே வலியுறுத்துகின்றன.

இந்தக் கோரிக்கைக்கு நாடுகள் என்றளவில் இன்னமும் ஆதரவு இல்லை என்றே கூறலாம்.

இரண்டாவது- நம்பகமான, உள்ளக விசாரணைகளை சிறிலங்கா நடத்தத் தவறினால், சர்வதேச விசாரணை அவசியம் என்ற நிலைப்பாடு.

இது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் நிலைப்பாடாக உள்ளது.

பெரும்பாலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வந்த பின்னர் அல்லது இந்த ஆண்டு இறுதிக்குப் பின்னர் தான் இந்த நிலைப்பாட்டில் உள்ள நாடுகள் அடுத்து என்ன செய்யப் போகின்றன என்று தெரிய வரும்.

இந்த நாடுகளைப் பொறுத்தவரையில் நம்பகமான விசாரணையை வலியுறுத்துகின்றனவே தவிர, சிறிலங்காவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ கிடையாது.

மூன்றாவது - நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரை பொறுத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு.

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கின்றன.

உலகம் முழுவதும் ஓடித்திரிந்து அழுது கண்ணீர் வடித்து, சிறிலங்கா அரசு இந்த நிலைப்பாட்டுக்கு சில நாடுகளை இணங்க வைத்துள்ளது.

இது தவிர நான்காவது தரப்பு ஒன்று உள்ளது.

சிறிலங்கா போர்க்குற்றம் எதையும் செய்யவில்லை, எதுவானாலும் அதுவே பார்த்துக் கொள்ளட்டும், வெளியார் தலையிடக் கூடாது என்று கூறும் தரப்பே அது.

சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான் அதற்குள் அடக்கம்.

போரில் மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை உலகில் எல்லா நாடுகளும் அறிந்தேயுள்ளன.

சிறிலங்கா அரசை நியாயப்படுத்தும் நாடுகளுக்குக் கூட அது நன்றாகத் தெரிந்திருக்கும்.

ஆனால் சிறிலங்கா விடயத்தில் அந்த நாடுகள் ஏதாவதொரு அரசியல் நிலைப்பாட்டுக்குள் நின்று கொண்டு முடிவுகளை எடுத்துள்ளன.

இப்போது ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை மனிதஉரிமைகள் பேரவைக்கு வந்து விட்டாலும், அதை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள எந்தத் தரப்பும் தயாராக இல்லை.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

ஏற்கனவே மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் விவாதத்துக்கு வந்தபோது அது தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்தமுறை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரப்பட்டு தீர்மானத்தைக் கொண்டு வந்து விட்டு, பின்னர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்ள எந்தவொரு நாடும் தயாராக இல்லை.

இந்தநிலையில் அமெரிக்கா நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்க்கிறது.

அதை வைத்துக் கொண்டே, அதிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, முதலாவது வகைக்குள் நுழைய முனைகிறது அமெரிக்கா.

அதேபோல உரிய விசாரணைகள் நடத்துவதற்கு சிறிலங்காவுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள டிசம்பர் வரையிலான காலக்கெடுவுக்குள் எதுவும் நடக்காது போனால், அதுவும் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் அணியுடன் இணையும்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து கொண்டால், மேற்குலகம்  அந்த வழியைப் பின்பற்றும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைக் காரணம் காட்டி சிறிலங்கா தப்பித்துக் கொள்வதற்கு மேற்குலகம் அனுமதிக்காது.

எனவே உடனடியாக இந்த விவகாரத்துக்கு அமெரிக்காகவோ மேற்குலகமோ முடிவு கட்ட வாய்ப்பில்லை.

மெல்ல மெல்ல இறுக்கிக் கொள்வதும் பின்னர் விட்டுப் பிடித்துக் கொள்வதுமாக ஒரு இழுபறி ஆட்டம் தான் நடக்கும்.

இதற்கிடையே சிறிலங்கா அரசை அதிகாரப்பகிர்வு ஒன்றுக்கு இணங்க வைக்கும் முயற்சியிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது.

இதற்கும் இந்த போர்க்குற்ற விசாரணையைத் தான் அமெரிக்கா ஆயுதமாக வைத்துள்ளது.

இப்போதைய நிலையில் அமெரிக்காவுக்குத் தண்ணி காட்டவே சிறிலங்கா முனைகிறது.

ஆனால் சிறிலங்காவை எப்படியெல்லாம் மடக்கலாம் என்று கணக்குப் போடுகிறது அமெரிக்கா.

மறைமுகமாக இருதரப்பு ஒரு இராஜத்திரப் போரையே நடத்திக் கொண்டிருக்கின்றன. இது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல.

இந்த இழுபறிகளினால் தான் இம்முறை மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா பற்றிய விவாதம் வரவில்லை.

இந்தக் கூட்டத் தொடர் முடிவதற்குள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன.

ஆனால் அதற்காக ஐ.நாவோ மனிதஉரிமைகள் பேரவையோ போர்க்குற்ற விசாரணைகளை மறந்து போய் விட்டதாகவோ, சிறிலங்கா பக்கம் சாய்ந்து விட்டதாகவோ கணக்குப் போட்டு விட முடியாது.

ஏனென்றால் இது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடொன்றின் விவகாரம்.

இதற்குள் சீனா, இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகள் மட்டுமன்றி ரஸ்யா, அமெரிக்கா போன்றனவும் தொடர்புபட்டுள்ளன.

இந்தச் சிக்கலை அவசரப்பட்டு தீர்க்க முனைந்தால் சிக்கல்கள் தான் இறுதிக் கொள்ளுமே தவிர அவிழ்ந்து போகாது.

இதனால் சர்வதேச சமூகம் மெல்ல மெல்ல காய்களை நகர்த்துகிறது.

அது மெதுவான நகர்வாக இருந்தாலும், ஒவ்வொரு நகர்வுகளும் உறுதியானவையாக தெரிகின்றன.

தமிழர்கள் மத்தியில் நீதி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே உள்ளது.

சர்வதேசம் மீண்டும் எம்மை ஏமாற்றி விடுமோ என்ற ஏக்கம், அச்சம் இன்னமும் தொடர்கிறது.

ஆனால் இன்றில்லா விட்டாலும் என்றோ ஒருநாள் வன்னியில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு சிறிலங்கா பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அதற்கான பூகோள அரசியல் சூழல் ஒருபோதும் வாய்க்காமல் விடப் போவதில்லை.

அது ஒரு ஆண்டிலும் வரலாம், இன்னும் சில ஆண்டுகளிலும் வரலாம்.

அது எப்போது என்பதை விட, அந்த நாள் வரும் என்ற நம்பிக்கை தான் தமிழர்களுக்கு முக்கியமானது.

அதன் மூலம் தான் சர்வதேசத்தை தமிழர்களின் பக்கம் திருப்ப முடியும்.

 

- முகிலன்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011 01:03 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "ஈழம்"

darling.vj@gmail.com ஈழத் தமிழரை மறந்த மன்மோகன்!
result for tamil ealm சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
speed சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
கற்க வேண்டிய பாடங்கள் சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
please சத்தியவேள்விக்கு சவால்விடும் "தமிழ்த்தேசியம்"
குட்டித் தீவும் மனித வாழ்வும் குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை!
உலகத் தமிழர் அமைப்புகள உலகத் தமிழர்களை உசுப்பி விடும், சிங்களப் பேரினவாதம்!
சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு?
புரிதலின் ஆரம்பம்..... சரியில்லாமல் போன மகிந்தவின் ‘ரைம்‘

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 154 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை