Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

சிறிலங்காவின் மோதகமும் கொழுக்கட்டையும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

Shavindra-de-Silva-and-fonsekaகடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் கடந்த மாதம் 30ம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்பட்டு விட்டது.

அவசரகாலச்சட்டத்தை இனிமேல் நீடிக்கப் போவதில்லை,அது இனிமேல் தேவையில்லை என்றெல்லாம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவசரகாலச்சட்டம் தேவைப்பட்டது. இப்போது எல்லாமே முடிந்து போய்விட்ட நிலையில் அவசரகாலச்சட்டம் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கமே வலிந்து போய் அதை அகற்ற முன்வந்திருப்பது போன்றிருந்தது அவரது கதை.

இனிமேல் அவசரகாலச்சட்டமோ, அதன் விதிகளோ தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்த சிறிலங்கா ஜனாதிபதியே, அவசரகாலச்சட்டப் பின் விளைவுகள் ஏற்பாட்டுச் சட்டமூலத்தை தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் புதிய விதிகளை சேர்க்கவும் அவர் கையெழுத்திட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இப்போது அவசரகாலச்சட்டத்தின் சத்துகள், சாறுகள் அனைத்தையும் உறுஞ்சிக் கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் அதிகபலத்துடன் நிற்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம், இப்போது அதிக அதிகாரங்களை முப்படையினருக்கும், பொலிசாருக்கும் வழங்குகின்ற அளவுக்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் இதை சட்டரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டால், உயர் பாதுகாப்பு வலயங்களை வைத்திருக்க முடியாது, அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது- விடுவிக்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையைத் தொடரவும், அவசரகாலச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தொடர்ந்து தடுத்து வைக்கவும், உயர் பாதுகாப்பு வலயங்களை தொடர்ந்து பேணவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இப்போது கொழுக்கட்டை, மோதகமாக மாறியிருப்பது தான் வித்தியாசம்.

வடிவங்கள் தான் வேறுபடுகிறதேயன்றி இரண்டும் ஒன்றாகத் தான் இருக்கிறது.

உயர் பாதுகாப்பு வலயங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக வழிதேடியுள்ளது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தான் இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம் செய்யப்பட்டன.

போரைக் காரணம் காட்டியே உயர் பாதுகாப்பு வலயங்களை அரசாங்கம் உருவாக்கியது,

இப்போது போரும் இல்லை, அவசரகாலச்சட்டமும் இல்லை. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் தேவைப்படுகின்றன.

இந்த உயர் பாதுகாப்பு வலயங்களை நாட்டின் எங்காவது ஒரு மூலையில் பிரகடனம் செய்திருந்தால் பரவாயில்லை.

ஆனால் பொதுமக்களின் நிலங்களைப் பறித்தே இவை உருவாக்கப்பட்டுள்ளன.

மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் வகையிலேயே இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் செயற்படுகின்றன.

இந்த நிலையில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதன் பலனை உயர் பாதுகாப்பு வலயங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவசரகாலச்சட்டம் போனாலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அவர்களின் சொந்த மண் மீதான உரிமையை மறுக்கிறது.

இந்த உயர் பாதுகாப்பு வலயங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் தான்.

அதனால் தான் இந்த விடயத்தை சிறிலங்கா அரசாங்கம் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது.

தெற்கிலும் சில உயர் பாதுகாப்பு வலயங்கள் இருந்தாலும், அவற்றினால் சிங்கள மக்களின் அன்றாட இயல்பு வாழ்வுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்கள் தான் இந்த உயர் பாதுகாப்பு வலயங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் இவர்களின் அவலங்கள் தீரப்போவதில்லை.

அதற்கு அப்பாலும் பயங்கரவாத தடைச்சட்டம் இவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், முன்னாள் பேராளிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தாலும் அதுபற்றி குழப்பங்கள் தான் மிஞ்சியுள்ளன.

அவசரகாலச் சட்டம் நீக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதுமே, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார 6000 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று கூறினார்.

ஆனால் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஸ, சட்டமா அதிபர் மொகான் பீரிஸ், அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த போன்றோர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரைக் கூட வெளியேவிட முடியாது என்கின்றனர்.

அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1200 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும், மேலும் 1000 இற்கும் அதிகமானோர் மீது வேறொரு புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

ஆனால் அரசாங்கம் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தொடர்ந்து தடுத்து வைப்பதற்கென்ற சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வரவுள்ளது.

அதன் கீழ் தான் அவசரகால சட்டத்தின் கீழ் கைதானவர்களை அரசாங்கம் தடுத்து வைக்கவுள்ளது.

ஆக சட்டங்கள் தான் மாறப் போகின்றனவே தவிர,சிறையில் உள்ளவர்களின் விடுதலை சாத்தியமாகப் போவதில்லை.

அதுமட்டுமன்றி அவசரகாலச்சட்ட நீக்கம் தொடர்பாகவும் சரி, அதன் விதிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தில் சேர்ப்பது பற்றியும் சரி அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

ஏனென்றால் இந்த விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டிருந்தால், அமைச்சர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளியிட்டிருப்பார்கள்.

ஆனால் ஒரு தரப்பு சொல்கிறது ஒருவரைக் கூட விட முடியாது என்று, இன்னொரு தரப்பு சொல்கிறது ஒரு பகுதியினர் விடுவிக்கப்படவுள்ளனர் என்று இதில் எது சரி, யார் சொல்வது உண்மை?

எல்லோரும் அமைச்சர்களாகவும், உயர் அரச அதிகாரிகளாகவும் இருக்கும் நிலையில் எவரது கருத்தை நம்புவது என்று குழப்பங்கள் மக்களுக்கு மிஞ்சியுள்ளது.

அவசரகாலச் சட்டம் இப்போது பெயரளவில் தான் நீக்கப்பட்டுள்ளது.

அது வேறொரு வடிவத்தில்- பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயரால் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கப் போகிறது.

அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு கோரி வந்த நாடுகள், ஜனாதிபதி மகிந்த ராஜஸபக்ஸவின் முடிவை வரவேற்றிருந்தன.

ஆனால் அந்த நாடுகளுக்கு அவசரகாலச்சட்டத்தை நீக்குகிறோம் என்று கூறிக் கொண்டு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பலப்படுத்தியுள்ளது அரசாங்கம்.

சிறிலங்கா என்னதான் அழுத்தங்கள் கொடுத்தாலும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

அதுபோல,சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையை சர்வதேச சமூகமும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

சர்வதேச சமூகத்தின் இந்தப் போக்கு சிறிலங்கா அரசுக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

- முகிலன்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( செவ்வாய்க்கிழமை, 06 செப்டம்பர் 2011 01:36 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "ஈழம்"

darling.vj@gmail.com ஈழத் தமிழரை மறந்த மன்மோகன்!
result for tamil ealm சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
speed சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
கற்க வேண்டிய பாடங்கள் சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
please சத்தியவேள்விக்கு சவால்விடும் "தமிழ்த்தேசியம்"
குட்டித் தீவும் மனித வாழ்வும் குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை!
உலகத் தமிழர் அமைப்புகள உலகத் தமிழர்களை உசுப்பி விடும், சிங்களப் பேரினவாதம்!
சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு?
புரிதலின் ஆரம்பம்..... சரியில்லாமல் போன மகிந்தவின் ‘ரைம்‘

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 155 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை