Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

போர்க்குற்ற விசாரணை - ஒருங்கிணையும் சிங்களம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ranil-mahinda-gadaffi-moonதற்போது சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் சிங்கள தேசம் எவ்வாறு தனது வியுகங்களை வகுத்துவருகின்றது என்பதை புரிந்துகொள்வது தமிழர் தேசத்திற்கு முக்கியமானதாகிவிட்டது.

சனல் 4 தொலைக்காட்சியினால் காட்சிப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் பிரித்தானியாவில் ஆரம்பித்து - ஜெனிவாவில் முக்கிய இராசதந்திரிகளை கண்கலங்கவைத்து - அவுஸ்திரேலியாவில் பலரையும் அதிரவைத்து - சிங்கள தேசத்தினால் மறைக்கப்பட்ட உண்மைகளை உலகம் புரிந்துகொள்ளதொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.

சிறிலங்காவின் நண்பராகவும் இக்கட்டான நேரத்தில் தோள் கொடுத்த தோழனாகவும் கருதப்பட்ட பிரித்தானிய பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ், அண்மையில் கதிர்காமர் நினைவுப்பேருரையாற்ற கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு உரையாற்றிய பொக்ஸ், சர்வதேச மனித உரிமைமீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பான குற்றசாட்டுக்கள் நிச்சயமாக கவனத்திற்கொள்ளப்படவேண்டும் எனவும், உண்மையான சமாதானம் என்பது பயங்களிலிருந்து விடுதலையும் தமது எண்ணங்களை வெளியிடுவதற்கான ஒவ்வொருவரின் சுதந்திரமான தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

உலகபோக்கில் ஏற்பட்டுவரும் மாற்றம் என்பது தனது உற்றநண்பனின் போக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டிருக்கும் என்பதை எதிர்பார்த்திராத சிங்களதேசத்திற்கு, இது சங்கடமான நிலையை ஏற்படுத்திவிட்டதாக கொழும்பு ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை சிங்களதேசத்தின் இன்னொரு உற்றநண்பனாக கருதப்பட்ட லிபிய தலைவர் கடாபிக்கு ஏற்பட்ட நிலையென்பது, மகிந்த இராசபக்சவுக்கு நிம்மதியான நித்திரையை கொடுக்கக்கூடிய விடயமல்ல என்பதும் அவர்களுக்கு இடையே காணப்பட்ட உறவுநிலையை அறிந்துகொண்டவர்களுக்கு தெளிவான விடயமாகும்.

ரசியாவுடனும் சீனாவுடனும் உறவுகளை வைத்துக்கொண்டாலே மேற்கைத்தைய அழுத்தங்களை சமாளித்துவிடலாம் என அறிவுரை கூறிய லிபிய தலைவருக்கு ஆதரவளிக்காமல், கடைசிநேரத்தில் ரசியாவும் சீனாவும் கைகழுவிவிட்ட நிலையை பார்க்கின்றோம்.

அதற்கு மேலதிகமாக லிபிய தலைவர் மீதும் அவரது பிள்ளைகள் மீதும் சர்வதேச நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையானது, மகிந்த இராசபக்சவுக்கு அதேமாதிரியான ஒரு நிலைக்கே இட்டுச்செல்லக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதை கோடிகாட்டி நிற்கின்றன.

எவ்வாறு சூடான் தலைவர் மீது போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றசாட்டுக்களை முன்வைத்து - நிலையான தீர்வுத்திட்டம் ஒன்றை நோக்கி சூடானை இழுத்துச்சென்று இன்று - தென் சூடான் என்ற சுதந்திர நாட்டை உலகத்தில் பிரசவிக்கமுடிந்ததோ அதற்கு இணையானதோர் மாற்றத்தை தென் ஆசியாவில் ஏற்படுத்துவது என்பது உலகஒழுங்கை பேணுவற்கு அவசியமானதாகிவிட்டது.

ஆசிய தேசங்களை கடந்து, ஆபிரிக்க தேசங்களை நோக்கி பரந்துவிரியும் சீனாவின் நீளும் கரங்களுக்குள் தமது நலன்கள் விழுங்கப்படுவதை மேற்கைத்தைய அரசுகள் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. இந்தியாவுக்கும் கூட சீனாவின் இந்த அகன்ற கரங்கள் அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகின்றது.

pic7

இந்தவேளையில் கட்சி வேறுபாடுகளை களைந்து சிறிலங்கா என்ற ”இறையாண்மைமிக்க நாட்டின்” மீதான எந்த வெளிநாட்டு அழுத்தமும் தமது சிங்கள மேலாதிக்கவாதத்தை உடைத்துவிடும் என்பதை, சரத் பொன்சேகா தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை புரிந்துகொண்டு, அதற்கெதிராகவே இன்னமும் செயற்பட்டுவருகின்றார்கள் என்பதை புரிந்துகொள்வது அவசியமானது என கருதுகின்றோம்.

அண்மையில் அவசரசுற்றுப்பயணம் மேற்கொண்ட சிங்கள தேசத்தின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐநா செயலாளர் பான் கீ முனை சந்தித்தார். அமெரிக்கா மற்றும் முக்கிய பல அரச தலைவர்களை சந்திப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டிருந்தபோதும், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் என்ன கதைப்பார்கள் என்பதை புரிந்துகொண்டதாலோ என்னவோ, அவ்வாறான சந்திப்பை அவர்கள் வேண்டும்  என்றே தவிர்த்துக்கொண்டதாகவே தற்போது வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த இராசபக்சவின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ரணில் விக்கிரமசிங்க இப்பயணத்தை மேற்கொண்டதாகவும், சர்வதேச அழுத்தங்கள் ஊடாக சிங்கள மேலாதிக்கவாதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அதனை தாங்கள் அனைவரும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும் என்பதில் சிங்கள தேசத்தின் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகவே நிற்கின்றன.

போர்க்குற்றசாட்டுக்கள் தொடர்பில் அனைத்து சிங்கள தேசத்தின் கட்சிகளும் இணைந்தே நிற்கின்றன. ஆனால் தமிழர் தரப்பில் இன்னும் சில அடிவருடி கட்சிகள் சிங்கள தேசத்தின் அடிமைகளாகவே வாழவிரும்புகின்றார்கள் என்பது தமிழர் வரலாற்றின் கசப்பான பக்கங்களாகும்.

ஆனாலும் பேச்சுவார்த்தை மேசையில் காண்டீபத்தை இழந்துநிற்கும் தமிழர் தரப்பிற்கு சர்வதேச ரீதியாக சிறிலங்கா மீது மேலெழுந்துவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான கோரிக்கை முக்கியமானதாகும்.

இதனை சிங்கள தேசமும் தமிழர் தேசமும் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றன என்பதில்தான் தமிழர்களுக்கான எதிர்காலம் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது.

 

- கொக்கூரான்

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 14 ஜூலை 2011 00:07 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "ஈழம்"

darling.vj@gmail.com ஈழத் தமிழரை மறந்த மன்மோகன்!
result for tamil ealm சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
speed சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
கற்க வேண்டிய பாடங்கள் சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
please சத்தியவேள்விக்கு சவால்விடும் "தமிழ்த்தேசியம்"
குட்டித் தீவும் மனித வாழ்வும் குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை!
உலகத் தமிழர் அமைப்புகள உலகத் தமிழர்களை உசுப்பி விடும், சிங்களப் பேரினவாதம்!
சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு?
புரிதலின் ஆரம்பம்..... சரியில்லாமல் போன மகிந்தவின் ‘ரைம்‘

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 157 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை