Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

தொடரினுள் புகு முன் சில வார்த்தைகள்…..

[சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், மலேசியாவின் முன்னணிப் பத்திரிகை ஒன்றில் “குட்டித்தீவைக் குலுக்கும் குமுறல்கள்” என்னும் தலைப்பில் ஈழத்  தமிழர்களது அரசியல்-ஆயுதப் போராட்டம் குறித்த எனது கட்டுரைத் தொடர் வெளியாகி இருந்தது.  1986 ஆம் ஆண்டு அது ,நூலாகவும் வெளியீடு கண்டது.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் எழுதப்பட்ட அக் கட்டுரைத்தொடரில் குறிப்பிடப் பட்டிருந்த ஈழத் தமிழர்களது எந்தவொரு உரிமைக் கோரிக்கையும் நிறைவேற்றப் படாமலேயே… அந் நீண்ட உரிமைப்போர் முடித்து வைக்கப்பட்டு மேலும், இரண்டு வருடங்கள் உருண்டோடியும் விட்டது!

ஆம், ஈழத்தமிழர்களது இதயக் குமுறல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந் நேரத்தில்…….. இந்தத் தலைப்பில் மற்றுமோர் தொடரினை எழுதுவது பொருத்தமானது என நினைக்கிறேன்]

மூன்றாயிரம் அமெரிக்கப் பொதுமக்களைப் பலி கொண்ட ஒசாமா-பின்-லாடனைக் கொன்று தனது நாட்டு மக்களுக்கு நீதியினை அளித்து விட்டதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறது அமெரிக்கா! அதற்கு ஆதரவாக உலக நாடுகள் பலவும் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன……..

ஒசாமாவின் இயக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன் கூட்டணியில் செயலாற்றும் மேற்கு நாடுகளுக்கும் எதிராக இஸ்லாமியப் புனிதப் போரினைப் பிரகடனஞ்செய்து அதனை நிறைவேற்றும் பொருட்டு வன்முறையினைத் தன் வழிமுறையாகக் கொண்டது!

அவ்வியக்கத்தின் பின்னணியில் ‘அமெரிக்க எதிர்ப்பு’ என்னும் உணர்வே மேலோங்கி இருந்தது. உலக நாடுகளின் உள் விவகாரங்களில் தன் மூக்கை நுழைத்துக் கொண்டு அதன் மூலம் தனது வர்த்தக மற்றும் ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்கு அடித்தளமிடும் அதன் போக்கினுக்குப் பதிலடி தரும் நோக்கத்தோடு செயல்பட்டது ஒசாமாவின் ‘அல்கைடா’.

அதுமட்டும் அன்றி, இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு ஆதரவாக இயங்குவதாக உலகின் இஸ்லாமிய அரசுகள் சிலவற்றாலும் புறந்தள்ளப்பட்ட இயக்கமாகவும் அது இருந்தது.

அவ் இயக்கத்தின் இலக்குகளாகப் பெரும்பாலும் பொதுமக்களே இடம் பெற்றிருந்தார்கள். பொது மக்கள் பயணம் செய்யும் விமானங்கள்; பொது மக்கள் வேலைபார்க்கும் இடமாகவும் வர்த்தக நிலையமாகவும் இருந்த உலக வர்த்தக மையம் இவ்வாறு அமெரிக்க/மேற்குலக நாடுகளின் இராணுவக் கட்டமைப்புகளைக் கைவிட்டுவிட்டு அப்பாவி மக்களின்மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்த அந்த இயக்கமும் அதன் தலைவனும் பயங்கரவாத முத்திரை குத்தப்படுவதில் தவறேதும் கிடையாது.அவ்வாறு செயல்படும் இயக்கங்கள் அடக்கப்படவும்,அழிகப்படவும் வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் எழுவதற்கும் இடமில்லை!

ஆனால், ஓர் அரசினால் தொடர்ந்து முதல் முப்பது வருடங்கள் அரசியல் ரீதியாயும்; அதன் பின்னர் இராணுவ நடவடிக்கைகளாலும் பழிவாங்கப் பட்ட ஓர் இனத்தின் விடுதலைக்காக, நிர்ப்பந்தம் காரணமாக ஆயுதம் ஏந்திய தமிழர்களுக்கு எதிராக உலக நாடுகள் யாவும் அதனைப் பயங்கரவாத முத்திரை குத்தி அழித்துவிட்டு…….. இப்போது  அவ்வாறு அழிதொழித்த அரசு மீது மனித உரிமை மீறல்கள் என்னும் போர்வையில் அறிக்கைப் போர் ஒன்றினை ஆரம்பித்து விட்டிருக்கின்றன.

உண்மையில் இந்த உலக அரசுகளுக்குப் பயங்கரவாதத்துக்கும், விடுதலைப் போராட்டத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாதா ? அல்லது, இப்போது சுதந்திர நாடுகளாக இருக்கும் தேசங்கள் ; தாம் சுதந்திரம் பெற எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது ஆயுதத்தின் உதவியினை நாடவில்லையா..?

பாலஸ்தீன மண்ணில் அறுபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் என்னும் ஓர் நாட்டினை உருவாக்கிய அமெரிக்கா, அப்போது அகிம்சைப் போரில் ஈடுபட்டிருந்த யூத மக்களுக்காகவா, அங்கு ஓர் நாட்டினை உருவாக்கிக் கொடுத்தது?

இதே வரலாறு தானே இன்றைய தென் சூடான் வரை தொடர்ந்து வருகிறது……?

இது இவ்வாறிருக்கையில்……. ஈழத் தமிழர்கள் விடயத்தில் மட்டும், சர்வதேசம்  முரணான போக்கினைக் கடைப்பிடிப்பதுதான் ஏனென்று புரியவில்லை.

ஓர் இனத்தையே திட்டமிட்டு அழிக்கும் அரசின் செயல்பாடுகளை மூடிமறைத்து, நடை பெற்றிருப்பது ‘மனித உரிமை மீறல்கள்’ என்று ஒப்புக்கு ஓர் அறிகையை வெளியிடுவதால், அந் நாட்டில் தொடர்ந்தும் தமிழினம் பாதுகாப்புடனும், அதற்குரிய உரிமையுடனும் வாழ வழி கிட்டும் எனச் சர்வதேசம் நம்பினால்…அது வெறும் பகல் கனவே!

ஆங்கிலேயர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் அங்கு இடம்பெற்று வந்த அரசியல்/சமூக நடைமுறைகளை ஊன்றிக் கவனிப்பவர்கள் , அந் நாட்டின் இரு தேசிய இனங்களும் உரசல்கள் ஏதுமின்றி வாழ வேண்டுமாயின் அவர்கள் தங்கள் தங்கள் பிரதேசங்களில் தங்களுக்கான அரசியல்/சமூக நிர்வாக உரிமையினைப் பெற்றிருத்தல் அவசியம் என்பதைப் புரிந்து கொள்வர்.

இதற்கு, அந் நாட்டில் வாழும் தமிழர்-சிங்களர் இவ்விரு இனத்தினதும் வரலாறு, மனோபாவம், அதன் தலைவர்களால் தூண்டப்படும் இன பேதம் என்பன பற்றிய அடிப்படை அறிவு அவசியமாகிறது.

இவ் விபரங்களோடு, சிங்களப் பெரும்பான்மை இனம் பெற்ற சுதந்திரத்தை ஈழத் தமிழினமும் அனுபவிப்பதற்காய் அவ்வினம் மேற்கொண்ட முயற்சிகள்;  ஆறு தசாப்தங்களாகக் [ 60 வருடங்களாய்] கானல் நீராய்த்  தொடர்வதை ஓர் ”பறவைப் பார்வை”யில் அளிக்கும் தொடர் இதுவாகும்.

 

[வரும் வெள்ளியன்று சந்திப்போம்……]

“சர்வசித்தன்”

[www.sarvachitthan.wordpress.com]

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
குட்டித் தீவும் மனித வாழ்வும்
1 திங்கட்கிழமை, 09 மே 2011 08:03
jeya
ஈழமண்ணின் விடுதலை என்பதும் மனிதவாழ்வின் பக்கங்களிலும் ஆண்டவனிடம் கூட பதில் இருக்குமா?என்பதற்கு அப்பால் ஈழத்தில் இல்லை . என்பதன் புரிதல் அன்றாகவும் ஈழத்திற்கு வெளியில் கூட இல்லை என்ற புரிதல் இன்றாகவும் உள்ளது . ஆயிரம் உறவுகளை நாம் தேடலாம் அவை எல்லாமே அற்ப வாழ்விற்கான காட்சிக்காக .மட்டும்தான்; எதை வெறுத்தாலும் இறுதியாத்திரை ஒன்றே உண்மை என்று யாருமே நினைப்பது கிடைக்காத போது . எதையுமே வேண்டாம் என்றால் கூட துரத்தும் வாழ்ககை ஒன்று இனி எதற்கு என்பதல்ல . இவற்றைப் பார்த்தாவது மனம் கொண்டதே மாளிகை என்பதைப் போன்றதுதான் வாழ்க்கையின் நின்மதியும். வாழ்க்கையை எதிர்த்து போராட வேண்டியதே மனித வாழ்க்கையின் அர்த்தம் என்றால் ஈழத்தின் விடுதலையும் உலகையே எதிர்கவேண்டியதே உண்மை என்பதை தமிழினமாகிய நாம் உணர்ந்து தான் ஆக வேண்டும்.

வாசகர் கருத்துக்கள், category: "ஈழம்"

darling.vj@gmail.com ஈழத் தமிழரை மறந்த மன்மோகன்!
result for tamil ealm சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
speed சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
கற்க வேண்டிய பாடங்கள் சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
please சத்தியவேள்விக்கு சவால்விடும் "தமிழ்த்தேசியம்"
குட்டித் தீவும் மனித வாழ்வும் குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை!
உலகத் தமிழர் அமைப்புகள உலகத் தமிழர்களை உசுப்பி விடும், சிங்களப் பேரினவாதம்!
சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு?
புரிதலின் ஆரம்பம்..... சரியில்லாமல் போன மகிந்தவின் ‘ரைம்‘

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 146 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை