தாய் தமிழகமே ! எங்கள் கண்ணீர் கொஞ்சம் துடைக்க இன்றாவது முன் வருகிறீர் !! அதற்கு எம் நன்றிகள் ! தாய் தமிழகம் வேட்டிக்கும் பணத்துக்குமாய் ஒட்டு போட்டு எங்கள் குழந்தைகளை கருவிலேயே சிங்களம் கொல்ல வைத்துவிட்டீரே என்று உங்களை அன்று திட்டி தீர்த்தவன் நான் !
உலக நாடுகள் எல்லாம் எங்களை பார்த்து பரிதாபப்பட, நீங்கள் மானாட மயிலாட பார்த்து மயங்கி கிடந்த பொது, எப்படி எங்களை பொறுத்து கொல்ல சொல்வீர் ? ஒரு ஆயிரம் அமெரிக்கர் இறந்ததற்காய் ஈராக் , ஆப்கானிஸ்தான் , என்று மத்திய கிழக்கே இன்று அடக்க பட்டதே ! ஒரு யூதன் கொல்லபட்டால் உலக போறே வெடிக்கும் அளவுக்கு ஒரு அரசியல் உருவாக்க பட்டதே ! இவை எல்லாம் எப்படி ? ஆம் ஒரு தேசிய இனம் , நாடுகளை கடந்து தம் இனத்துக்காக குரல் கொடுக்கவும் , அரசியலில் செல்வாக்கு செலுத்தி அந்த நாடுகளை தம் பக்கம் இழுக்கவும் முயற்சிக்க வேண்டும் !
தமிழ் இனத்தின் தாய் நாடான தமிழ் நாட்டில் என்னதான் நடந்தது ? ஒன்றல்ல இரண்டல்ல நாப்பதினாயிரம் உடன் பிறப்புகள் ரத்த வெள்ளத்தில் குளிக்க நீங்கள் திரைப்பட கதா நாயர்களுக்கு பால் ஊத்தி நின்றீர் ! இந்தியாவை தவிர எல்லா நாட்டையும் எங்களுக்காக குரல் கொடுக்க வைத்தோம் ! ஒரு பக்கம் எங்கள் வாக்கு வங்கி அடுத்த பக்கம் அவர்கள் மனதின் நியாயத்தை தட்டி எழுப்பி , எதனை வழிகளில் என்றும் போராடுகிறோம்! போராடுவோம் !
ஈழதமிழனாய் புகலிடம் தேடி போன நாடெல்லாம் வெறும் நூறாயிரம் பேர் சேர்ந்து தெருவெல்லாம் முடக்கினோம் ! பிரித்தானியா , பிரான்ஸ் , கனடா , அமெரிக்கா , நெதர்லாந்து , டென்மார்க் , ஸ்வீடன் …என்று பல நாடுகள் தமிழருக்கு குரல் கொடுக்க முன் வர , ஆறு கோடி மக்கள் இருந்தும் எல்லா நாடுகளுக்கும் தடையாய் நின்றது பாரதம் !
உம்மால் வெறும் இலங்கை துணை தூதரகத்தை கூட அகற்ற முடியவில்லை ! இந்திய அரசியலை கொஞ்சம் மாற்ற முன்வரவில்லை ! புலிகளை மீறி தமிழர்களை ஒட்டு மொத்தமாக சிங்கள கொன்ற பொது நாங்கள் கடும் பணியில் தெரு எல்லாம் முடக்கி வெறும் பத்தாயிரம் பேர் நாங்கள் எங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லாத நாடுகளையே நிர்பந்திக்க , எமக்கே அழிவு செய்து சிங்களத்துக்கு பக்க பலமாக நின்ற இத்தாலிய அரக்கியை உம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை !
முள்ளி வாய்காலில் இந்திய கொடியையும் சேர்த்து பிடிக்கும் அளவுக்கு தமிழ்நாடு பிணமாகி கிடந்தது ! அன்றைய தளபதி சரத் பொன்சேகா தமிழ்நாடு வெறும் கோமாளி கூட்டம் என்று கூறும் போதும் , முதல்வர் என்று தனை கூறிகொள்ளும் அந்த முதுகெலும்பற்ற மனிதனுக்கு கொஞ்சம் கூட சூடு வரவில்லை ! அவரின் நாடகத்தை பார்த்தும் தமிழ்நாடு பொங்கி எழவில்லை ! அன்று நீர் பொங்கி இருந்தால் , நான்கு மாதம் டெல்கி நகரை முடக்கி இருந்தால் தமிழ்நாடே கொந்தளித்து இருந்தால் நிச்சயம் ஒரு பெரும் இனப்படுகொலை தடுக்க பட்டு இருக்கும் ! முடியவில்லை என்னால் திட்டி திட்டி உங்கள் நாடே அழியட்டும் என்று கொதித்து இருந்தேன் !
இன்று எங்கள் கண்ணீரில் கொஞ்சம் நிறத தோன்றுகிறது ! தமிழ்நாட்டின் புதிய புரட்சியை பார்த்து இலங்கை கொஞ்சம் யோசிக்க தொடக்கி இருக்கிறது ! ஆனால் அண்மையில் மீண்டும் இலங்கையின் ஊடக அமைச்சர் உங்கள் எழுச்சியை ஒரு தற்காலிக உணர்ச்சி என்றும் . கொஞ்ச நேரத்தில் கொதி அடங்க வீடு சென்று விடுவார்கள் என்றும் ஊடக மாநாட்டில் கூறி உள்ளார் !
புலி புலி என்று எங்களை பார்த்து ஓடியவர் இன்றுவரை புலத்தில் நடக்கும் போராட்டங்களை பார்த்து ஒன்றுமே கூறுவதில்லை . புலம் பெயர் தமிழரை பற்றி ஏதேனும் கூறினால் அதையே பெரும் அரசியல் சிக்கலாக்கி இனவாதத்தின் கூற்றை உலகெங்கும் கொண்டு சென்று இன்னமும் பலம் சேர்த்து விடுவோம் என்று சிங்களவன் பயப்படுகிறான் ! முள்ளிவாய்க்கால் முடிவல்ல இது தமிழீழ போராட்டத்தை பெரும் சமுத்திரங்களில் சேர்த்து விட்டது என சிங்கள தேசம் உணர தொடக்கி விட்டது . உள்ளூரில் ஈழத்தில் ஒரு தமிழன் மேல் கைவைக்க முடியாத படி புலம் பெயர் தமிழர் பலம் இருக்கிறது . இன்றும் பெரியதொரு இனவாதம் தன்னை மூடி மறைத்து தமிழர்களோடு சேருவோம் என்று கூறி போராட்டம் அடக்க பட்ட பின்னும் தமிழரை முற்றும் முழுதாக அழிக்க முடியாமல் கைகளை கட்டி நிற்கின்றது என்றால் அது புலம் பெயர் தமிழர் பலமே !
ஆனால் எத்தனை நாளைக்குதான் இனவாதம் பார்த்து கொண்டு இருக்கும் என்பது அண்மையில் நடக்கும் கொலைகள் மூலம் நிரூபணம் ஆகிறது. என்பது மூன்றில் வெலிக்கடை படுகொலைகளின் பின்னர் புல்களுக்கு பயத்தில் தமிழ் சிறை கைதிகளை தொட பயந்தவர்கள் இன்று மீண்டும் தொடங்கி விட்டனர் ! அன்று கொழும்பு இன்று அனுராதபுரம் , ஏன் இனி யாழ் மண்ணிலே வைத்தே கொள்ளபடுவர். எங்கும் சிங்களம் , எதிலும் சிங்கள இராணுவம் என்று அடிமைப்பட்ட தேசத்தில் இனி எதுவும் நடக்கலாம் ! புலம் பெயர் தமிழர்கள் போராட்டத்தின் பலத்துக்கு ஒரு எல்லை உண்டு …அந்த எல்லை இந்திய அரசின் அதிகார எல்லை !
நாங்கள் எப்படி எடுத்து கூறினாலும் கத்தி கூறினாலும் கெஞ்சி பார்த்தாலும் அமெரிக்காவோ பிரித்தானியவோ எண்ணை இல்ல எங்கள் ஊரை பற்றி கவலை படபோவதில்லை . நாங்கள் ஆயுத போராட்டத்தை மீண்டும் தொடங்கினால் அன்றி வேறு தீர்வை யாரும் தர போவதில்லை . சரி ஆயுத போர் என்றால் , எங்கே போராடுவது ? ஒரு பெரும் வராலாற்று நாயகம் கேழ் நடந்த போறே தொற்ற்கடிக்க பட்ட பொது , பாதி மக்கள் வெளிநாடு என்று ஓடிவிட்ட பிறகு , மனித வாழ்வின் காணக்கூடாத கொடூரத்தை கண்ட பிறகு எப்படி எங்கள் மக்களை இன்னமும் போராட எதிர்பார்க்கலாம் ? அப்படிதான் போராட நினைத்தாலும் வெல்வோம் என்பதற்கு என்ன இன்று மாறி விட்டது ? என்ன மாற வேண்டும் ?
அங்கேதான் ஒட்டு மொத்த சுவராக பெரும் தடையாக இந்தியா நிற்கிறது ! தர்மத்தை நிலைநாட்ட முன்வருவோம் ! இன்று தமிழீழ கொடுமைகளை நிறுத்தும் ஒரே பலமாக தமிழ்நாடு இருக்கிறது ! தமிழ்நாட்டில் வரும் அரசே இந்திய அரசின் நிலைப்பாட்டை மற்ற வேண்டும் ! அப்போது புலம் பெயர் நாட்டில் நடக்கும் அரசியலால் முன்னகர்தபடும் நாடுகளுடன் இந்தியாவும் இணைத்து வைக்கப்பட்டு சிறீ லங்கா தனிமை படுத்த பட்டு , தமிழர்களுக்கான தனாட்சி உரிமையை வென்றெடுக்கும் தேர்தலை நடாத்தப்பட வேண்டும் ! புலத்தில் , தமிழர் பெரவைகளாக , நாடு கடந்த அரசாங்கமாக , தமிழ் இளையோர் அமைப்பாக , அரசியல் கட்சிகளுக்கான தமிழர் என்ற பெயரில் , சகலரும் தமிழீழ பயணத்தை தொடங்கி உள்ள நிலையில் தமிழ் நாடும் தன் பொறுப்பை அற்ற முன் வரவேண்டும் !
இலங்கை துணை தூதரகம் மூடப்படவேண்டும் ! செவ் தமிழ் , மே பதினேழு இயக்கம் , நாம் தமிழர் , சீமான் , வைகோ , வேல்முருகன் , திர்மாழவன் …என்று சகலரும் இணைந்து தமிழன உணர்வுள்ள ஒரு அரசை அமைக்க முன்வரவேண்டும் ! அந்த அரசு இந்திய அரசின் பலத்தை இலங்கைக்கு எதிராக திருப்ப வைக்க முனைய வேண்டும் ! தமிழ்நாட்டின் அரசு என்று இல்லாமல் மக்கள் போராட்டமாக இது வளர்த்தெடுக்க பட வேண்டும் !
எங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லாத நாடு எல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசை இயங்க அனுமதிக்க , ஆறு கோடி ஊமையர் வாழும் நாட்டில் மட்டும் எங்களுக்கு உங்களோடு பேச ஒரு அலுவலகம் திறக்க வழியில்லை ! அனால் சிங்களவனுக்கு தூதரகம் உங்கள் மண்ணிலேயே ! என்ன கொடுமை இது ? எந்த நாட்டில் எந்த இனம் இதை பார்த்து கொண்டு இருக்கும் ! நாடு கடந்த தமிழீழ அரசுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றால் இணைகி தூதரகமும் இழுத்து மூட படவேண்டும் ! இத்தாலி அரக்கி அசையமாட்டாள் …காங்கிரசை வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே அந்த கொட்டத்தை அடக்க முடியும் ! ஒரு எம் ஜி ஆர் , போல ஒரு உரிமைக்காக வாழும் மனிதர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் !
தாய் தமிழகமே தூக்கம் விடு! தமிழர் துயர் துடைக்கும் தாயாக புலம் பெயர் பலத்துடன் இனி மற்றம் நிகழும் ! தமிழக இளையோர் இனி புலம் பெயர் இளையோரோடு இணைந்து போராடுவர் ! பேசி ஏமாற்றி எம்மை ஆண்டவர் அடங்கட்டும் ! கொள்ளையடித்தவர் விரட்டப்படட்டும் !
தமிழீழம் நிச்சயம் விடியும் ! அன்று தமிழ் நாட்டில் போராடும் அத்தனை உள்ளங்களும் தெய்வத்தின் இடத்தில வைக்கபடுவர் ! உயிர்னும் மேலான தாய் நாட்டை சுடு காடாய் மாற்றிய இலங்கைக்கு எதற்கு சென்னையில் தூதரகம் ? இளயோர் இணைந்து இதை அகற்றின் அது எங்கள் முதல் படி !
— ராஜ்சுதன் - மீனகம்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















