வாய் நிறைய தேசியத்தை மந்திரித்தவாறு தோளில் துப்பாக்கிகளை மாட்டியவாறு அரசியல் வாசலில் காலடி வைத்த பலருக்கு இப்போ பெருங்குழப்பம்! அன்று ஆதர்ச ஒலியாக விளங்கிய தேசியம் இன்று அர்த்தம் இழந்து விட்டதாக அங்கலாய்ப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுவிசில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது தேசியம், சுயநிர்ணயம் பற்றி கேட்டபோது கோபமாக தேசியத்தைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றாராம்! ஈபிடியின் ஊடகச்செயலாளர் யோசெப் ஸ்டாலினோ இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு வானொலிப் பேட்டியின்போது தேசியம் என்பது வெறும் மாயை என்றுவிட்டார்.
என்னவென்றே தெரியாத ஒன்றின் பின்னும் ஒரு மாயையின் பின்னுமா இது காலவரை தமிழ் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்? இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்!
சரி! அது தான் ஒரு புறமிருக்க – அண்மைக்காலம் வரை விடுதலைப்புலிகளின் குடைநிழலில் நின்று தேசியத்திற்காக ஓங்கிக்குரல் கொடுத்த சிலருக்கும் கூட அமைச்சரின் நந்தவனத்தின் வாசனையை நுகரத் தொடங்கிய பின்பு தேசியம் ஒரு புரியாத புதிராகிவிட்டது!
கேள்விகள் எழுப்பப்படுகின்றன? தமிழ் தேசியம் என்பது தமிழர்களின் தேசியமா? அல்லது முஸ்லிம் மலையக மக்களை உள்ளடக்கிய தேசியமா? இது வரை கேட்கப்படாத கேள்விதான்!
இக் கேள்விக்கான பதில் இவர்களுக்கு தெரியவில்லை எனில் நாம் இவர்களிடம் கேட்பது ஒரு கேள்வி! நீங்கள் இதுவரை கொடிபிடித்ததும், கொதித்துஎழுந்ததும் எந்தத் தேசியத்திற்காக? ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதும் ஆயுதம் எடுத்துப் போராடியதும் எந்தத் தேசியத்திற்காக? ஒரு முறை உங்களை நீங்கள் கேட்டுப்பதில் தேடலாம் அல்லவா?
ஒரு தொன்மை வாய்ந்த இலக்கியப் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி, தனித்துவமான கலாசாரம், பொதுவான பொருளாதாரம், ஒரு தொடர்ச்சியான வாழ்நிலப்பகுதி இவற்றைக் கொண்டதுதான் ஒரு தேசிய இனம்!
இது உலகம் ஏற்றுக்கொண்ட வரை முறை! ஒரு தேசிய இனத்தின் உணர்வுரீதியான அடையாளம் அதாவது உயிர் மூச்சு தான் தேசியம்! கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் என்போர் தமது மதங்களுக்குரிய தனித்தனி பண்பாட்டு அம்சங்களைக் கொண்டிருந்த போதும் பொதுவான தமிழ் பண்பாட்டு அம்சங்களால் பிணைக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக பொதுவான கலை இலக்கிய விழுமியங்கள் உள்ளன. இப்படியான நிலையில் தமிழ் தேசியம் பற்றிய குழப்பம் இவர்களுக்கு ஏன் ஏற்படுகிறது? இவர்கள் குழம்புகிறார்களா அல்லது இவர்கள் குழம்புவது போல் நடித்து மற்றவர்களையும் குழப்ப முற்படுகிறார்களா? இலங்கையில் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தமிழ் கலை இலக்கியப் பரப்பில் வகிக்கும் காத்திரமான பங்கு ஏனோ இவர்களின் கண்களில் படவில்லை.
ஆனால் இவர்களுக்கு தமிழ் தேசியத்தில் சந்தேகம் வந்தமைக்கு இவர்கள் சொல்லும் காரணம் வன்னியில் மீள்குடியேறியுள்ள தமிழ் மக்களுக்கும் ஏனைய பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களோ புலம் பெயர்ந்த மக்களோ உதவி செய்யவில்லை என்பது தான்! கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதால் இவர்களுக்கு உலகம் இருண்டு போய் விட்டது – பாவம்!
வடக்கின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அங்கு சென்று மக்களை அடிக்கடி சந்திக்கின்றனர். தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தும், சொந்த நிதியிலிருந்தும் அம் மக்களுக்குப் பல உதவிகளைச் செய்கின்றனர். புலம் பெயர் உறவுகள், நிறுவனங்கள் கூட இவர்களுடாக பல உதவிகளை வழங்குகின்றன.
இதை இவர்கள் புத்திசாலித்தனமாக கண்டு கொள்ள மாட்டார்கள்! ஆனால் – இவை அம் மக்களின் பிரமாண்டமான தேவைகளின் முன் வெறும் தூசு என்து உண்மை தான்! அதை விட அவை ‘முடிந்தளவு‘ என்பதும் உண்மை!
இந்த முடிந்தளவு மிகவும் குறைந்தளவு இருப்பதற்கும் காரணமே அரசும் அரசைச் சார்ந்து நின்று மற்றவர்களுக்கு எதிராக விரல் நீட்டும் இந்த அடிவருடிக் குழப்பங்களும் தான்!
புலம் பெயர் உறவுகளின் உதவிகள்,ஏனைய தரப்பினரின் உதவிகள் இவையெல்லாம் நிறுவனமயப்படுத்தப்பட்டு திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படும் போது மேலும் திறமையாகவும் அதிகமாகவும், கூடுதல் பயனுள்ளதாகவும் செய்ய முடியும். ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இன்று கொடுக்கப்படும் நெருக்கடிகள் அவை சுயமாகவும் பயனுள்ள வகையிலும் செய்ய முடியும். ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இன்று கொடுக்கப்படும் நெருக்கடிகள் அவை சுயமாகவும் பயனுள்ள வகையிலும் இயங்க முடியாமல் தடுப்பு சுவராக நிற்கின்றன. அரசின் அடிவருடிகளும் அதற்கு ஆதரவு தான்!
இந் நிலையில் திட்டமிடப்பட்ட வகையில் பயனுள்ள உதவிகளை எப்படி வழங்க முடியும்!
தடுப்பவர்களும் இவர்கள்! குற்றம் சுந்தவர்களும் இவர்கள்! தேசியம் பற்றிய சந்தேகம் எழ இது ஒரு காத்திரமான காணரம் அல்ல! ஆனால் காரணமாக இவர்கள் காட்ட ஒரு முக்கிய காரணம் உண்டு!
தமிழ் தேசியக் கூட்டமைப்போ, புலம் பெயர்ந்த தமிழர்களோ வன்னி மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை! தேசியம் என்ற பேரில் தமிழ் தேசியக் கூட்மைப்பு தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்க முடியாது! இவர்கள் உணர்த்த முயல்வது இது தான்! ஆனால் இவர்களின் நோக்கமோ வேறு?!
மகிந்தராஜபக்சவின் ஒரே நாடு, ஒரே இனம் என்ற கோசத்திற்கு வக்காளத்து வாங்குவது! அதாவது தமிழ்த் தேசியத்தை தமிழினத்தின் தனித்துவத்தை மறுப்பது!அதற்கு காரணங்கள் தேடியவலைவதில் கண்டுபிடிக்கப்பட்டு கிளிஞ்சல்கள் தான் இவை.
மாநிலத்தில் சுயாட்சி ,மத்தியில் கூட்டாட்சி என்பது தற்சமயம் காணாமல் போய்விட்டது! வீணை மெல்ல மெல்லக் கரைந்து வெற்றிலையுடன் கலந்து விட்டது! இவர்கள் கண்ணுக்கு தேசியம் எப்படித் தெரியும்!? அற நனைந்தவனுக்கு கூதலென்ன; குளிரென்ன!
- சரிதம்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















