Flash Image

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

ராவணன் - ஒரு பார்வை

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ravanan2நேற்று ராவணன் படம் பார்த்தோம், சொல்ல வார்த்தைகளே இல்லாத படைப்பு. யாரையும் விட்டுப் புகழ வாய்ப்பில்லை. மொத்தத்தில் மணிரத்தினம் அவர்களுக்கே அத்தனை பாராட்டுக்களும் உரியது. இசையிலிருந்து, ஒளிப்பதிவிலிருந்து, இடம் தேர்விலிருந்து, அலங்காரத்திலிருந்து, நடிப்பிலிருந்து, வசனத்திலிருந்து ... அப்பப்பா... காலம் மாறிப் போச்சின்னு சொல்லி குத்துப் பாட்டு போட்டால் தான் படம் ஓடும் என்பவர்களுக்கு புத்தியிலுரைக்கும் படம்.

பெருசா நவீன படம் எடுத்துவிட்டேனென பீத்திக் கொள்பவர்கள் மணிரத்தினத்திடமிருந்து பாடம் பயின்றுக் கொள்ளலாம். வெளியில் கேட்டிடாத புன்னகையாக ஒருபுறம் புத்தியை பிரண்டாமல் உள்நுழைகிறது படம். மறுபுறம் நம் இன்ப தமிழில் கலப்படமில்லா பிரம்மாண்ட படைப்பாக புருவம் உயர்த்த வைக்கிறது. ஒடுக்கப் பட்ட மக்களின் கர்ஜனையை நடிப்பில் பிரதிபலித்து அம்மக்களுக்காய் இறக்கம் கொள்ள செய்கிறார் விக்ரம்.

அழகான பெண்ணை பார்க்கையில் மதி மயங்கும் மனிதனின் கட்டுப்பட்டிடாத இயல்பு குணமும், அதையும் மீறி தனக்குரியவள் அவளில்லையென ஒதுங்கி நின்று காயப்படுத்தாமல், கொச்சையுறாமல் அன்பினை மட்டுமே தனக்குள் வளர்த்துக் கொள்ளும் ஒரு சாமானியனின் யதார்த்தத்தையும், அதை உணர்ந்து, மறுக்காமலும் ஏற்காமலும் தன்னிலை மாற்றிக் கொண்டிடாமலும் அவனை புரிந்து, அனுதாபத்தை அன்பாக மனதில் நிறைத்துக் கொள்ளும் ஒரு பெண்ணின் உணர்வும் விக்ரம் ஐஸ்வர்யா ராயினாலும், ஒளிப்பதிவாலும், இசையாலும், இயக்கிய திறனாலும் மிக அழகாக உணர்த்தப் பட்டுள்ளது படத்தில்.

ravanan1

ஒரு பக்க நியாயமாக மண்ணில் புதைந்துள்ள வரலாற்றை; யாரையும் உறுத்தாமல் சொல்கிறது படம். காட்டில் வாழ்ந்த வீரப்பனின் கோபத்திற்கு நியாயத்தையும், உலகிற்கு தெரியாமல் போன அவர் செய்த நல்லவைகளையும் படம் நினைவு படுத்துகிறது. யாரோ ஒரு (காவலாளியை) லட்சிய இளைஞனை அழைத்து அவன் ஒரு குற்றவாளி அவனை பிடிப்பதே நம் தேசத்திற்கு நல்லதென தன் பக்க தவறுகளை மறைத்து, ஒரு நல்லவனை வைத்தே நல்லவனையும் அழிக்கும் அரசியலை நினைவுறுத்துகிறது படம்.

பாடலை பற்றி நிறைய சொல்லலாம். இது தான் வைரமுத்து எனும் பாடல் வரிகள். ஆட்டமும் பாட்டமும் கும்மாளமுமாக வாழ்ந்தாலும் இடையே நீதிக்கும் நியாயத்திற்கும் அன்பிற்கும் கட்டுப் பட்டு எதற்குமே குறையாதவன் தமிழன் எனும் பாங்கை ஆங்காங்கே காட்சிகளிலும் நிறைய பாடலிலும் உணர வைக்கிறார்கள் படக் குழுவினர்.

பாடலும் இசையும் வரியும் படத்தின் முழு பலம். அவசியத்திற்குரிய இடத்தின் பாடல்கள் அல்லது பாடல்களுக்கேற்ற சலிப்பில்லாத கதையமைப்பு ரசனை குறையாமல் படம் பார்க்க வைக்கிறதெனலாம். உசுரே போகுதே.. உசுரே போகுதே.. பாடல் கேட்கையில் உயிர் மென்று தின்கிறது பாடல் வரிகள் அத்தனையும்.

சொல்லவும் பாராட்டவும் வாழ்த்தவும் நிறைய உள்ளது ராவணா படத்தில். குறிப்பாக இசையும், பாடல் வரிகளும், ஒளிப் பதிவும், பாத்திர தேர்வும் சிறப்பு. ஒரு ஆங்கிலக் கலப்பில்லாத ஆங்கிலப் பட தரத்தில் ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வு. அந்த 'யாத்தே...' அப்படியே மனதில் ஒட்டிக் கொண்டது. படம் பார்த்து விட்டு வெளியேறுகையில் இப்படி ஒரு படத்தை எடுக்கும் அளவிற்கு தமிழன் எத்தனை சுத்தமான உயர்வான மனதை கொண்டுள்ளானென, தமிழரை நினைத்து பெருமை கொள்ள வைக்கிறது படம்.

கள்வரே.. கள்வரே.. பாடலில் ஒரு தம்பதியரின் முந்திய வாழ்க்கையை அழகிய பாடலும் நடனமுமாக காட்டி முடிக்கும் உத்திக்கு இயக்குனரை பாராட்டுவதா, ஐஸ்வர்யா ராயை பாராட்டுவதா அல்லது திரைக்கு பின்னால் இயங்கிய இப்பாடலுக்கான நடன ஆசிரிய சோபனாவை பாராட்டுவதா என வியக்க வைக்கிறது.

இசைப்புயல் படத்திற்கென உழைத்திருக்கிறார். அவரின் மெனக்கெடல் அவர் மனதை போலவே படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. இசை இசை இமாலய அளவு உயர்ந்துள்ள ரசனை மிக்க இசையின் நகர்வுகளே படமெங்கும் வியாபித்து நம் இதயம் பிடித்து கசக்கிப் பிழிகிறது. இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துக் கொள்கிறது.

ஒளிப்பதிவு பெட்டி திமிறி, சுழன்று காட்சிகளை அள்ளி கண்களில் புகுத்தாமல், ரசனையில் மனம் உள்வாங்கிக் கொள்ளும் விதமும், அதை இசையில் கோர்த்தெடுத்த விதமும், அதற்கு முகபாவம் காட்டும் விக்ரமும் ஐஸ்வர்யா ராயும்.. பிரபு கார்த்திக் பிரிதிவி இன்னும் பிற அத்தனை பேரும் அப்பப்பா... இது தான் மணிரத்தினமென சொல்லாமல் சொல்கிறது படம்.

ஒவ்வொரு பாத்திரமும் படத்தை இரண்டு மூன்று நாளைக்காக நினைக்க வைக்கும் என்பது உறுதி. மொத்தத்தில்... வைரமுத்துவின் தண்ணீர்தேசம் நாவல் படித்து முடித்து சில நாட்கள் கடலில் கிடந்த கதையாய், ராவணின் ஒழுக்கத்தை ஒரு பக்க நியாயத்தை எண்ணி அத்தனை பேரின் உழைப்பிற்குள்ளும் நனைகிறது மனசு!!

வெளியில் தெரியாமல் திரைக்குப் பின் உழைத்த, இதர பல படைப்பாளிகளுக்கு, இத்திரைப்படக் குழுவிற்கு பாராட்டவும் வாழ்த்தவும்.. உலகளாவி நிறைய பேர் இருப்பார்கள்.. நன்றி சொல்லவே நான் கடமை பட்டேன்!

பெரு நன்றிகளுடன்..

வித்யாசாகர்

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (2)
கொச்சை படுத்தப் பட்ட ராவணன்
2 செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2010 19:38
Siva
கொச்சை படுத்தப் பட்ட ராவணன்
வழக்கமாக பீஃப் சாப்பிடும் பாய் கடையில் நல்ல சுவையான மாட்டு வறுவலை நண்பர்களோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது பெரியார் தி.க. தோழர் ஒருவர் “ஏனுங் ராவணன் படம் பாத்திங்ளா படம் “நமக்கு’ ஆதரவாக இருக்கிறது ,மணிரத்தனம் பரவாலிங் நல்ல ஆளாட்டந்தான் தெரியுதுங்” என்றார். ராவணன் என்ற டைட்டிலை வைத்து அதுவும் மணிரத்னம் எடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா இருந்தது. ஏனென்றால் மணிரத்னம் ரோஜா படத்திலேயே தான் யார் என்பதை காட்டியவர் அடுத்தடுத்து வந்த பம்பாய் உட்பட அவரது படங்களும் அவர் யாருடைய பிரதிநிதி என்பதை நிருபித்தன. ஆனால் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் இராவணனை பார்ப்பது தடைபட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வழியாய் மணிரத்ணத்தின் ராவணனை பார்த்தேன்.

******************

திருடனாக இருந்த வால்மீகி எழுதிய இராமாயணத்தை காலத்திற்கேற்றார் போல் புதுசு பண்ணி வெளியிட்டிருக்கிறார் மணிரத்னம். சரி அன்று திருடனாயிருந்த வால்மீகி ஏன் இரமாயணம் எழுதினான்? என்று தெரியவேண்டுமென்றால் நமக்கு புஷ்யமித்திர சுங்கன் என்கிற பார்ப்பன அரசனை பற்றி தெரியவேண்டும். அதேபோல் மணிரத்னம் ஏன் இரமாயணத்தை புதியதாக ராவணன் என்று ஏன் வெளியிட வேண்டுமென்றால் நாம் புஷ்யமித்திரனின் வாரிசுகளை இனங்காண வேண்டும். சரி படத்திற்குள் கொஞ்சம் போய் பார்ப்போம்.







வீரா என்ற பெயரில் ராவணனனையும். தேவ் என்ற பெயரில் இராமனையும். ராகிணியாக சீத்தா தேவியையும் புதுசு பண்ணியிருக்கிறார்கள். மற்றபடி கார்த்திக்கை குரங்காகவும் வையாபுரி ஐயரை அலியாகவும் காட்டியிருக்கிறார்கள். அது தேவையில்லாத் மேட்டராக இருப்பதால் அவர்களை விட்டு விட்டு கதைக்கு தொடருவோம். ராவணன் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவன் போலிசால் தேடப்படும் குற்றவாளி அவன் அரசுக்கெதிரான காரியங்களில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள்


ராவணன் ஏன் கலகம் செய்கிறான்?

ராவணன் குழுவாக இயங்குவது போல காட்டியிருக்கிறார்கள். சரி அவன் எதற்காக குழுவாக இயங்குகிறான்? அந்த குழுவின் நோக்கம் என்ன? அது போராட்டக் குழுவா? அல்லது கூலிப்படையா? என்று கேள்விகள் கேட்டால் அதற்கான பதில் அங்கு இல்லை. மொத்தத்துல ராவணன் அரசுக்கு எதிரானவன் என்று குழப்புகிறார் மணி. குழப்புபவர் குழம்பி போயிருப்பதாக கருத்க்கூடாது அவர் தெளிவாகத்தான் இருக்கிறார் நம்மதான் தெளிவாக குழப்புகிறார். ராமாயணத்தில் கூட ராவணன் இலங்கையை ஆண்ட அரசன் என்ற செய்திகள் இருக்கும் ஆனால் ராவணனில் அப்படி விவரங்களை காணமுடியவில்லை ஏன்? இராமயணத்தை நவீன படுத்திய மணி ராவணனன் எதற்காக போராடுகிறான் என்பதை நவீன படுத்தாமல் பொத்தாம் பொதுவாக அரசாங்கத்துக்கெதிராக செயல்படுவான் அவ்ளவுதான் என்றளவோடு முடித்துக்கொண்டது ஏன்?

ஒரு ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் இருக்கும் கானகப் பகுதியை காட்டுகிறார்கள் அரசின் வளர்ச்சி திட்டங்களான கல்வி உட்பட் பிற வசதிகள் இல்லாத இடத்தில் ராவணன் அரக்கெதிராக கலகம் செய்கிறான் என்றால் அது வாழ்வாதார பிரச்சனயைல்லவா? அல்லது விடுதலைப்போர் அல்லவா? அப்படி காட்டினால் என்னாகும் படம் பார்ப்பவர்களுக்கு இந்திய அரசின் காட்டுவேட்டையல்லவா நினைவு வரும் அப்படி காட்டாமல் இருக்க ராவணன் ஒரு காட்டான், பழங்குடியினத்தை சார்ந்தவன் அவன் தேவையில்லாமல் பிரச்சனைகளை வலிய செய்து கொண்டிருந்ததால் அரசு ராமனை (அதுவும் என் கவுன்டர் ஸ்பெலிஸ்ட்) அனுப்புகிறது. அவனுடைய பணி கிளர்ச்சியை ஒடுக்குவது மட்டுமே அதன் கண்ணியான ராவணனை ஒழிக்க முயல்கிறான், அதன் ஒருகட்டமாக ராவணனின் தங்கை சூர்ப்பநகை திருமணத்திற்கு சென்று என்கவுன்டர் செய்ய முயலுகிறான் குண்டு ராவணனின் தொண்டையில்பட்டு தப்பிக்கிறான். இதற்கிடையே சூர்ப்பநகையை கடத்தி செல்லும்போலிசு (இங்கு ராமன் எஸ்கேப்) பாலியல் வன்முறையை ஏவி கொடுமைபடுத்துகிறது. பிறகு சூர்ப்பநகை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

இதன் மூலம் மணி சொல்லுவது என்ன? ராவணனின் வீண் வம்பு சண்டையால்தான் அவன் குடும்பத்துக்கும் பிரச்சனை, போலிசு சூர்ப்பநகையை மட்டும் கடத்தி செல்வதாக காட்டுவதே கேப்மாரித்தனம். போலிசு இருக்கும் பெண்களையயல்லாம் கடத்தி கொண்டு பாலியல் வன்புணர்ச்சி செய்து சித்திரவதை செய்வது என்பது வீரப்பன் பிரச்சனை உட்பட நாம் பார்க்கும் உண்மை. இதை மறைத்து ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கும் போலிசுக்கும் இடையேயான பிரச்சனையாக காட்டி உண்மையை மறைக்கிறார் மணி, அரசுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையேயானவை தனிப்பட்ட பிரச்சனையாக என்றும் இருந்ததில்லை, அது அடிப்படையில் மக்களின் விடுதலை போராட்டமாகவே இருந்திருக்கிறது இதை குடும்ப பிரச்சனையாக சுருக்கி தான் யாருடைய பிரதிநிதி என்பதை காட்டியிருக்கிறார்.

நல்லவனுக்குள் கெட்டவன், கெட்டவனுக்குள் நல்லவன்.








எஸ்.பியாக வரும் ராமன் நல்லவன் கடவுளை போன்றவன் என்று சீத்தா காட்டில் புகழ்கிறாள் அப்படி பட்ட நல்லவன் ஏன் ராவணனை கொலை செய்கிறான் என்றால் அவன் சூழல் அப்படி என்பதை அவனுடைய பதவி, அரசின் பிரதிநிதி என்பதை தெளிவாக விளக்கும் மணி. சூர்ப்பநகையை கடத்தி செல்லும்போது ராமனை எஸ்கேப் ஆக்கிவிடுகிறார். முப்பது போலீசு குண்டர்கள் சூர்ப்பநகையை வன்புணர்ச்சி செய்யும்போது குழுவின் பொறுப்பாளனான ராமன் எங்கே என்றால் அவன் அப்போது மணிரத்தினத்தின் குடுமியில் மறைந்து கொள்கிறான். ராமனை எஸ்கேப் ஆக்கியதன் மூலம் ராமனின் புனிதன்மையையும் கடைநிலை போலிசு மட்டும்தான் பாலியல் வன்புணர்ச்சி செய்வான் அதிகாரிங்க எல்லாம் ரொம்ப டீசண்டு என்கிற கடைந்தெடுத்த பொய்யையும் பாதுகாக்கிறார். ராமன் நல்லவன் அவன் தன் கடமையை செய்கிறான் அவன் நல்லவனுக்குள் கெட்டவன்


ராவணன் ஏன் கிளர்ச்சியாளனாக இருக்கிறான்? அதற்கான அவனுடைய சூழ்நிலை என்ன? என்பதை காட்டாமல் ராவணன் பழங்குடியினத்தை சேர்ந்தவன், அவன் சாதி இயல்பே அப்படித்தான் என்று தனது பார்ப்பன குருரத்தை காட்டுகிறார் மணி. குரங்காக வரும் கார்த்திக்குடன் ராமன் பழங்குடியின மக்களிடம் ராவணன் எப்படி பட்டவன் என்று கேட்கும்போது ”நல்லவன்தான் ஆனா தேவையில்லாம வம்புக்கு போகும்” குடி கூத்தியானு எல்லா பழக்கமும் இருக்கு” ”சிரிக்க சிரிக்க பேசும்’ என்று பலரும் சொல்லுவது போல்காட்டியிருக்கிறார்கள். ராவணன் கெட்டவனுக்குள் நல்லவன்

தூது செல்லும் குரங்கு கார்த்திக் ராவணனிடம் நான் அவிங்க (ராமன்)ஆளுதான் ஆனா என் ஓட்டு உனக்குத்தான் ஏனா உனக்காக எவ்வளவு பேரு இருக்காங்க பாரு என்கிறான்.

இப்படி காட்சி வைத்திருக்கும் மணி, நெல்லிக்காயும், வெங்காயமும் தின்று வாழும் மக்கள் ஏன் ராவணனுக்காக உயிரையும் கொடுக்க தயாரயிருக்கிறார்கள்? ”சிரிக்க சிரிக்க பேசும்’

ராவணனின் குணத்திற்காகத்தான் உயிரையும் கொடுக்க தயாரயிருக்கிறார்கள் என்று நாம் சொன்னால் குச்சி ஐஸ் திங்கற பாப்பா கூட வேலைய பார்டா என்று சொல்லிவிடும்.

சீத்தா தேவியும், கொச்சை படுத்தபடும் பழங்குடியின தலைவனும்

சீதையை ரொம்ப நல்லவளாக காட்டியிருக்கிறார் மணி . வீரமான மேட்டுகுடி பெண்ணாககாட்டி தனது வர்க்க பாசத்தை கழிந்து வைத்திருக்கிறார் மணி. ஜெயமுண்டு பயமில்லை மனமே என்று மேட்டு குடி சீதை பாடும்போது நமக்கு வரும் சிரிப்பை அட்க்க முடியவில்லை. பஃப்பில் திரிவதும் அரை குறை ஆடைகளோடு ஆணாதிக்கத்தின் பெண் பிரதிநிதிகளாய் வரும் இவர்களின் வீரத்தை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். மேட்டுகுடி பெண்ணாக ஃபுல் மேக்அப்பில் வரும் சீதையை பார்த்து ராவணன் மனம் சஞ்சலப்படுகிறான்

இங்கயே இருந்திரு என்று சீதையிடம் கேட்கிறான் ஆனால் கை கூட படாமல் பார்த்துக் கொள்ளும் ராவணன் சீதையிடம் பொறாமையாக இருக்கிறது என்று கூறுகிறான் இறுதிக்காட்சியில் சீதை சொக்க தங்கம் என பிதற்றுகிறான் வாடுகிறான் . சொக்க தங்கம் என எதை வைத்து ராவணன் முடிவு செய்கிறான் அவளது குணநலன்களை வைத்தா என்று பார்த்தால் அப்படியும் காட்சிகள் இல்லை. சீதையின் முகத்தை ரசிப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றன. அதாவது ஒரு மேட்டுக்குடி பெண்ணின் அழகில் மயங்கிவிடுகிறான் ராவணன்.

அந்த அழகும் இளமையும் அவனை கலங்கடிக்க வைக்கிறது, அதற்காக தனது தங்கையின் மரணத்திற்கு காரணமான ராமனையும் மன்னித்து விடுகிறான் பிறகு சீதையை பார்த்து கொண்டே மகிழ்ச்சியாக நாயை போல் ராமனால் சுட்டு இறக்கிறான். ஆனால் சீதையோ ராவணனை பார்த்து சஞ்சலபடவுமில்லை மயங்கவுமில்லை அவனுள் நல்லவனை பார்க்கிறாள் அவனுக்காக இரக்கம் கொள்கிறாள். இதன் மூலம் மேட்டுக்குடி நாட்டிய பேரொளியை ஒழுக்கமானவளாகவும் , நியாயமான குணங்களை உடையவளாகவும் காட்டியிருக்கிறார் மணி ஆனால் ராவணன் மனதுக்குள் சீதையை நினைக்கும் அலைஞ்சானாக காட்டி ஒடுக்கபட்டவன் மேல் மேட்டுகுடி சீதைகள் இரக்கம் காட்டினால் ஒடுக்கப்பட்ட ராவணன்கள் மேய பார்ப்பார்கள் என அக்கிரகாரத்துக்கு மணி அடிக்கிறார் ரத்னம்.

அன்று ராமயணத்தில் தமிழர்களை குரங்காகவும். காட்டுமிராண்டிகளாகவும் காட்டி மகிழ்ச்சியடைந்தன பார்ப்பன கும்பல்

இன்று ஒடுக்கப்பட்ட ராவணனையும் அவனை சார்ந்தவர்களையும் காட்டுமிராண்டிகளாக காட்டியிருக்கிறது மணிரத்னம் பார்ப்பன கும்பல்.

இந்திய அரசின் காட்டு வேட்டை நடக்கும் சமயத்தில வந்திருக்கும் இப்படத்தில் மணிரத்னம் சொல்லுவது ‘அரசாங்கத்துகிட்ட வெச்சுக்காதீங்க போட்டு தள்ளிருவாங்க உங்களாள ஒண்ணும் பண்ண முடியாதுலே’ என்று பத்து தலை கொண்ட ராவணனை “எடுத்திருக்கிறார்.

உள்ளங்கை நெல்லிக்கனி

படத்தை பார்க்கும் நோக்கர்க்கு இப்படம் எப்படிப்பட்ட அலைகளை ஏற்படுத்தும்?

போலீசு மேல் கோபமும்,பழங்குடியின போராளிகள் மீது ஆதரவும் ஆர்வமும் ஏற்படுகின்றதா என்றால் அதுதான் இல்லை ! ராவணன் கதையில் சீதை ஏன் நாயகியாக இருக்க வேண்டும்? பொதுவாக கதையின் நாயகனாக தன்னை உணருவது அதனூடாக நாயகனின் கோபத்தையும், ஆசைகளையும் உணருவது பெரும்பான்மையான படம் பார்ப்பவர்களின் உணர்வு. இப்படம் அப்படி நாயகனாக நோக்கரை உணரவைக்கவில்லை. ஏனென்றால் கதையின்நாயகி வில்லனின் மனைவி. கதையின்நாயகி நாயகனுக்கு ஜோடியில்லை. எனவே நோக்கர்களுக்கு நாயகனின் உணர்வு வருவதில்லை. மாறாக அது அழகு சீதையின் ஜோடியும் வில்லனுமான ராமனாக தன்னை உணர செய்கிறது. (இல்லையயன்றால் எட்டி நின்று பார்க்க வைக்கிறது) இதன் மூலம் ராமனின் பீத்தல் பெருமையை பாதுகாத்த மணி, ராவணனை தீண்டத்தகாதவனாக காட்டி பழம்பார்ப்பன பெருமையை பாதுகாக்கிறார். ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாய் நடக்கும் ஆரியபார்ப்பன யுத்தத்தில், இது போன்ற எத்தனை மணிரத்னங்களை மனித சமுதாயம் கண்டிருக்கும் , அது சரி ஒரு வகையில் மணிரத்னம் இந்த கால வால்மீகி என்றால் வால்மீகி அந்த கால மணிரத்னம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி அல்லவா !.சரி இப்போது புஷ்யமித்ர சுங்கனின் வாரிசுகள் யாரென்று புரிந்து கொண்டீர்கள் அல்லவா?

அறிமுகம்

இந்த திரைப்பட மதிப்புரையை எழுதியது தோழர் விடுதலை. விடுதலை எனும் பெயரில் ஒரு வலைத்தளம் நடத்திவருகிறார். அதில் அரசியல் விழிப்புணர்வுக்கான கருத்து படங்களை, ஆசான்களின் படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

வலைத்தள முகவரி: http://vitudhalai.wordpress.com/
மின்னஞ்சல் முகவரி: vitudhalai@gmail.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

http://senkodi.wordpress.com/
Non-Missable Film in Life
1 ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூன் 2010 00:12
boopathi
Please go and watch the movie. A Nice Make from Tamil Team.

வாசகர் கருத்துக்கள், category: "சினிமா"

comments குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்
கொச்சை படுத்தப் பட்ட ராவணன் ராவணன் - ஒரு பார்வை
Non-Missable Film in Life ராவணன் - ஒரு பார்வை
அஙகடி தெரு....சிறந்த விமர்சனம் அங்காடித்தெரு - ஒரு பார்வை
நல்ல விமர்சனம் 3 இடியட்ஸ் திரைவிமர்சனம்
ஈர‌ம் ஈரம் - திரைப்பார்வை
ஜோவுக்கான மறுமொழி உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
நகைச்சுவை படங்கள் உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
மிக நன்று நாடோடிகள் - விமர்சனம்
அருமை குறும்படம் விமர்சனம்

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 94 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை