Flash Image

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

3 இடியட்ஸ் திரைவிமர்சனம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

3-idiotsஅனைவருமே வெற்றிக்கான  பாதையில் தான் செல்ல விரும்புகிறோம். ஆனால் வெற்றியை குறிக்கோளாகக்  கொண்டு செயல்படுகிற போது போட்டி, பொறாமைகள், பிரச்சனைகள், தோல்விகள், மனக்கசப்புகள்  என்று படிப்படியாக பல தடைகளும் துன்பங்களும் நேரிடுகிறது. வெற்றியின் பின்னால் ஓடாமல்  ஒரு நல்ல செயலை எடுத்துக்கொண்டு நல்ல திட்டமிடுதலும் அதை சரியான வழியில் செயல்படுத்தலும் வெற்றியை தன் பின்னால் ஓடிவரச் செய்யக்கூடியதாக மாற்றுவதும் ஒரு புத்திசாலியின் வழியாகும்.

 

’உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்’ என்பது போல பல சொற்றொடர்களைக் கேள்விப்பட்டிருப்போம் நேர்மறை எண்ணங்களின் அலைவரிசை நமக்கு வெற்றியைப் பெற்றுத்தரவல்லது. அதையே ‘ஆல் இஸ் வெல்’ என்று சொல்லிக்கொண்டு  முட்டாள் பட்டம் கட்டப்பட்ட மூவர் வெற்றிபெற்ற கதை 3 இடியட்ஸ்- ஹிந்தி திரைப்படம்.

சேத்தன் பகத்தின் ’5 பாயிண்ட் சம் ஒன்’ என்கிற நாவலைத் தழுவி அமைக்கப்பட்ட கதை. ’முன்னாபாய் ’எம் பிபி எஸ்’ மற்றும் ’லகே ரஹோ முன்னாபாய்’ போன்ற வெற்றிப்படங்களை அளித்த ராஜ்குமார் ஹிரானி மற்றும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவின் கூட்டணியில் மூன்றாவது படம் 3 இடியட்ஸ். படம் வெளிவந்த வேகத்தில் வசூலை கொட்டிக்கொண்டிருக்கிறது. படத்தின் மையக்கருத்தைப் போலவே அமீர்கான் மற்றும் ராஹ்குமார் ஹிரானியின் வெற்றியைச் சென்றடையும் வழி சிறப்பானது. தேர்ந்தெடுக்கின்ற கதையை நேர்மறையாகவும் ( பாஸிட்டிவ்) திரைக்கதையை அமைக்கும்  வகை சிறப்பானதாகவும் இருந்தால் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு நின்று விடுகிறது. வெற்றி அவர்கள் பக்கம் தானே இருந்தாக வேண்டும். அமீர்கான் தன்னை ரசிகர்களின் அடிமை என்று உருவகப்படுத்திக்கொள்கிறாராம். அடிமை உங்களை மகிழ்ச்சியூட்ட வருகிறார். ஹிரானியால் எதிர்மறையான கதாபாத்திரங்களைக்கூட மிக கொடூரமாக சித்தரிக்கமுடியாது என்கிறார் அமீர். உண்மையில் வாழ்க்கையும் அது தானே. நியாயங்கள் வேறுபடலாம் ஆனால் அவர்களும் மனிதர்கள் தானே.

நம் நாடுகளின்  கல்வி முறைகள் இன்னமும் ஒரு அலுவலக குமஸ்தாவை உருவாக்கும்  வண்ணமே இருந்துகொண்டிருக்கிறது. மதிப்பெண்களுக்கான முக்கியத்துவத்தின் அழுத்தத்தால் தற்கொலைகள் அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் சரியான ஒரு கருத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மிகச்சிறந்த கல்லூரியில் இஞ்சினியர் படிப்புக்காக இணைந்திருக்கும் இளைஞர்கள் மூவரைப் பற்றிய கதை. அமீர்கான் ( ராஞ்சோ) மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக வருகிறார் . அவருக்கு கல்வி ஒரு பிடித்தமான விசயம். மாதவன் மற்றும் ஷர்மானுக்கு  சராசரிக் குடும்பத்தின் உயர்வை அவர்களின் படிப்பு நிர்ணயிக்கப்போகும் அழுத்தம். எதையும் ஆல் இஸ் வெல் என்றபடி தன் என்ணத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும் அமிர்கானின் வழிமுறையைப் பின்பற்றி நண்பர்கள் வாழ்வில் ஜெயிக்கிறார்கள்.

பொமன் இராணி (வீரு சகஸ்ரபூதே) மிகச்சிறந்த  நடிகர் என்பதை இன்னொருமுறை  நிரூபித்திருக்கிறார். தன் மகனை தன் இஞ்சினியர் வாரிசாக நினைத்து ஏற்படுத்திய அழுத்தத்தால் பறிகொடுத்துவிடும் பொமன் இரானி கல்லூரியின் டைரக்டர். முதல் நாள் கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் எத்தனை பேரின் கல்லூரிக் கனவினை பின் தள்ளி இங்கே இணைந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். அமீர்கானின் துடுக்கான புத்திசாலித்தனமான கேள்விகளால் கோபமுற்று அவரையும் அவர் நண்பர்களையும் முட்டாள்கள் என்றும் அவர்கள் வாழ்வில் செயிக்கப்போவதில்லை என்றும் சொல்லி வருகிறார். அவரை வைரஸ் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள் நண்பர்கள். அமீர்கானுக்கும் அவருக்குமான காட்சிகளில் பொறி பறக்கிறது

சதூர் ராமலிங்கமாக  வருகின்ற ஓமி வைத்யா அமெரிக்காவில்  வளர்ந்தவர் எனினும் ஒரு  ஹிந்தி தெரியாத  பாகத்து  இந்தியனின் அனைத்து குணாதிசயங்களையும் மிகச்சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் முக்கியமானதும் கதையோட்டத்துக்கு தூண் போன்றதும் கூட . மனப்பாடம் செய்து வெற்றி பெறுபவர்களின் உதாரணமாக வருகிறார். படம் முடிந்த பின்னும் ‘சதூர்’ நினைவில் நிற்கிறார்.

ஷர்மானின் (ராஜூ) குடும்பம் ஒரு சினிமாத்தனமான குடும்பம் என்கிற அறிமுகம் அருமையானது. கருப்பு வெள்ளையில் இருமிக்கொண்டிருக்கும் அம்மா , கைகால் விளங்காத அப்பா, கல்யாணம் செய்யவேண்டிய தங்கை என அவருக்கு வாழ்க்கையில் பயத்தையும் அழுத்தத்தையும் உண்டு பண்ணக்கூடிய பிண்ணனி. ஷர்மான் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.

கதாநாயகி கரீனாவுக்கான வேடம் மிகச்சிறியதே. ஆனால்  அமீர்கானுக்கும் அவருக்குமான  ஜோடிப்பொருத்தம்  மனதை அள்ளுகிறது. அவருடைய கல்யாணத்தை உடைக்கும்  விதமான அமீரின் அத்தனை காட்சிகளும்  யதார்த்த நகைச்சுவைகள். சின்னத்திரை நடிகை மோனாசிங்கின் (கரீனாவின் அக்கா) முதல் திரைப்படம். ஒவ்வொரு சிறு பாத்திரமும் கண்களில் நிற்கிறார்கள். பள்ளிப்படிப்பை படிக்க ஏழைச்சிறுவனுக்கு அமீர் கூறும் வழிமுறை முதலிலேயே சிறுகுறிப்பாகச் சுட்டப்படுகிறது.

மாதவன் படத்தின் தொடக்கத்திலிருந்தே கலக்குகிறார். ஃபரான் (மாதவன்) க்கு அவருடைய படிப்பைக்காட்டிலும் வனவிலங்குகளின் புகைப்படக்காரராக வரவேண்டும் என்கிற ஆசை. அவரை தன் அப்பாவை சம்மதிக்க வைத்து வாழ்வில் சரியான பாதையைத் தேர்தெடுக்கவைப்பது ராஞ்சூ. ஷர்மான் பொமன் இராணியின் சதிக்கு உடன்படாமல் தற்கொலைக்கு முயன்று நண்பனைக் காப்பாற்றுகிறான். அதற்கு பின் வாழ்வில் ராஞ்சூவின் வழிமுறையான எதையும் நேர்மறையாக , தைரியமாக செய்கின்றவனாக மாறுகிறான். அவனுடைய தைரியமான , நேர்மையான வழிமுறை அவனுக்கு நேர்முகத்தேர்வில் வேலைப் பெற்றுத்தருகிறது.

சதுர் தான் வாழ்க்கையில் ஜெயிக்க மற்றவர்களைத் தோற்கடிக்கவேண்டும் என்கிற போக்கு கொண்டவராக வருகிறார். அமீரின் பதில் தாக்குதலால் அதுவும் ஹிந்தி பாஷையை புரியாமல் மனப்பாடம் செய்து மேடையில் பேசி அவமானம் அடைவதால் ஒரு  சபதம் செய்கிறார். இன்ன தேதியில் நாம் நால்வரும் இதே இடத்திற்கு வருவோம் அப்போது  உங்கள் எல்லாரைக்காட்டிலும் நானே சிறந்தவனாய் வளர்ந்திருப்பேன் என்கிறார். அன்றைய தேதியில் நல்ல வேலையும் காசுமாக அவர் வரவும் செய்கிறார். ஆனால் ராஞ்சோ அமீர் மட்டும் திரும்பவில்லை. நிஜமான அறிவாளி என்ன செய்கிறான் என்பதைக் காண நண்பர்கள் அவரைத்தேடிச் செல்கிறார்கள். ஜாவீத் ஜாஃப்ரியை சந்திக்கிறார்கள். அவரிடமிருந்து அமீர்கானின் இருப்பிடம் அறிந்து கொண்டு கரீனாவையும் அழைத்துக்கொண்டு பயணப்படுகிறார்கள். இக்காலகட்டத்தில் ராஞ்சோவின் வழிமுறையிலேயே அவர்கள் எல்லா விசயத்தையும்  கையிலெடுத்து ஜெயிப்பது அவர்களுக்கு நண்பனின் தாக்கம் எந்த அளவுக்கு என்று துல்லியமாகக் காட்டுகிறது.

3 இடியட்ஸ் உடன்  எதாவது ஒரு நல்ல தமிழ்  திரைப்படத்தை ஒப்பிட நினைத்தால் ‘பசங்க’ படத்தை ஒப்பிடலாம். இருந்தாலும் தமிழில் மறுஆக்கம்  வர இருக்கிறது. இக்கூட்டணியின்  முதல் இரு படங்களைப்போலவே  இதிலும் மிக அதிக உருக்கமான  காட்சிகள் வருகிறது. மழை நாளில் மோனாவுக்கு அமீரே குழந்தை பிரசவிக்கச் செய்வது போன்ற காட்சிகள். மற்ற கமர்சியல் படங்களில் வரும் பத்து பேரை அடித்து ஒடுக்கும் ஒரு ஹீரோவின் இன்னோரு அற்புதமே.  சினிமாத்தனங்கள் இணையாத கமர்சியல் படமாக இருப்பது இயலாத காரணமாக இருக்கலாம். சொல்ல வந்த விசயம் காரணமாக மக்கள் மனதில் இடம்பிடித்து வசூலில் குவிப்பதில் சாதனைப் படைத்திருக்கிறது 3 இடியட்ஸ். இன்று  ஆல் இஸ் வெல் என்பது அனைவரின் வாயிலிருந்து அன்றாடம்  வெளிப்படுவது படத்தை சரியாக விளம்பரம் செய்கிறது.

அபீஜீத் மற்றும்  ராஜ்குமார் ஹிரானியின் வசனங்களின் கச்சிதம் வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது. லடாக் வரை கண்களை கொள்ளை கொள்ளச்செய்யும் காட்சிகளை விரித்திருக்கிறார் . c.k.முரளீதரன் இசை துள்ளல். ஷூபி தூபி ரபப்பா..

ரசியுங்கள் , சிரியுங்கள் , உருகுங்கள். ஆல் இஸ் வெல். எல்லாம் நன்மை பயக்கட்டும்.                                            -கயல் லக்ஷ்மி

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010 18:15 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
நல்ல விமர்சனம்
1 புதன்கிழமை, 10 பெப்ரவரி 2010 03:47
தமிழ் பிரியன்
நானும் படம் பார்த்து விட்டேன். நல்ல காமெடி காட்சிகள். மொழி தெரிந்து பார்க்கும் போது துள்ளலாக இருக்கும்.

வாசகர் கருத்துக்கள், category: "சினிமா"

comments குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்
கொச்சை படுத்தப் பட்ட ராவணன் ராவணன் - ஒரு பார்வை
Non-Missable Film in Life ராவணன் - ஒரு பார்வை
அஙகடி தெரு....சிறந்த விமர்சனம் அங்காடித்தெரு - ஒரு பார்வை
நல்ல விமர்சனம் 3 இடியட்ஸ் திரைவிமர்சனம்
ஈர‌ம் ஈரம் - திரைப்பார்வை
ஜோவுக்கான மறுமொழி உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
நகைச்சுவை படங்கள் உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
மிக நன்று நாடோடிகள் - விமர்சனம்
அருமை குறும்படம் விமர்சனம்

உணர்வுகள்

unarvukal

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 சிறை 1 சிறை 2 சிறை 3

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 67 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க