உளவியல், இயற்கைக்கு மீறிய ஒரு விசயத்தை கதையின் கருவாகக் கொண்டு , தண்ணீரையும் ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து, காட்சி நேர்த்தியால் அதனை உங்களை நம்பவைக்கும் ஆச்சரியத்தை நிகழ்த்தி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன். இவர் சங்கரிடம் பணியாற்றி வந்தவர். தயாரிப்பு சங்கரின் "Sப்ரக்டஷன்ஸ்". இயக்குனர் சங்கர் தன்னுடைய நீண்ட நீண்ட படங்களுக்கு இடையில் இது போன்ற திறமையான புதியவர்களை அறிமுகப்படுத்துவது வழக்கமே. இதுவரை காதல், வெயில், 23 ஆம் புலிகேசி போன்ற நல்ல திரைப்படங்கள் அவர் தயாரிப்பில் வெளிவந்து சங்கரின் தயாரிப்புப் படங்களுக்கென ஒரு முத்திரையைத் தந்திருக்கின்றன.
ஐந்து பேரின் வார்த்தைகள் தான் எத்தனை வீரியமானது! கிசுகிசுக்களும் புனைவுகளும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அடியோடு குலைத்துப் போடும் வல்லமை படைத்திருக்கிறது. அபார்மெண்ட் முழுக்க என்ன? அவள் சாவிற்கு பின்னும் ஊரும் உலகமும் கூட நம்பும் படியாக அழுத்தம் திருத்தமாக பொய்க்கதை புனைகிறார்கள். அவள் ஒழுக்கமற்றவள் என்று நிரூபிக்கப்படுவதால் தன் கெட்ட ஒழுக்கத்தை மறைக்கும் இளம்பெண்ணொருத்தி, தான் வந்து போக வசதியாக ஒரு முகவரியைத் தர நினைக்கும் அப்பெண்ணின் காதலன், அவள் ஒழுக்கமற்றவள் என்று நிரூபிக்கமுடியாமல் வீட்டை விற்றுவிட்டு சென்றால் தன் மகளுக்கு அந்த ப்ளாட் கிடைக்குமே என்று ஆசைப்படும் பக்கத்துவீட்டுப் பெண்மணி, தன் தவறை மறைக்க அவதூறு பரப்ப நினைக்கும் பக்கத்துவீட்டு வயதானவர், வாட்ச்மேன் என்று அத்தனைபேரும் கட்டம் கட்டி கதாநாயகியை சாவிற்குத் தள்ளுகிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக வரும் கதாநாயகன் தன் பழைய காதலியின் இறந்த உடலைப் பார்க்கிறான். அது தற்கொலைதான் என்று அவளே எழுதிய குறிப்பு இருந்தாலும் அவள் அப்படிப்பட்டவள் அல்லள் என்று அவனின் உள்மனம் நம்புவதால் அது கொலைதான் என நிரூபிக்க விழைகிறான். அதற்காக அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியின் போதும் தன் சாவுக்குக் காரணமானவர்களை ஈரத்தின், தண்ணீரின் உதவியால் கதாநாயகி கொலை செய்வதைக் கண்டுகொள்கிறான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் சில குறிப்புக்களை அவன் காதலி விட்டுச் செல்கிறாள். குறிப்புக்களைக் காட்டுவதும் பழிவாங்கும் காட்சிகளும் திரில்லர் படங்களுக்குரிய வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் நடந்தது என்ன என்பதை கதாநாயகி தன் தங்கையின் மூலமாக கதாநாயகனுக்குத் தெரிவிக்கின்றாள். கொலை தான் என்பதும், செய்தது யார் என்பதும் தெரிந்த பின் கதையில் சற்றே ஒரு தொய்வு. நாயகியின் கணவன் தன் நண்பனின் போதனைகளாலும் தன் உள்மனப் போராட்டங்களாலும் மனைவி மீது சந்தேகப்பட்டு செய்த விசயத்தை மக்கள்முன் தன் வாயால் ஒத்துக்கொள்ளவில்லை. அவனுக்குள்ளும் புகுந்து கதாநாயகியே அவன் கொலைசெய்ததாக வாக்குமூலம் அளிக்க வைக்கிறாள். கடைசிக் காட்சிக்கு முன்பாக வரும் சைக்கோத்தனத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
நிறைவில் கொலைகளுக்கான அர்த்தம் முழுதும் வீணாகிப்போகிறது. பொய் சொன்னவர்கள் அனைவரும் இறந்து போவதால் அவளுடைய உண்மைதன்மையை எங்கும் நிறுவமுடியாமலே போகிறது. அதனை கதாநாயகனும் ஒரு முறை குறிப்பிடுகிறான். ஆனால் ஆத்திரத்தில் இருக்கும் அந்த ஆத்மாவுக்கு இறந்து போனபிறகு உண்மையை விளக்கவேண்டியது அவசியம் என்று தோன்றவில்லை போலும்.
கதாநாயகன் ஆதி மிருகம் படத்திலேயே தன் நடிப்பாற்றலைக் காட்டி அசத்தியவர். அப்படத்தில் கதைக்கேற்ற தோற்ற வேறுபாடுகளைக் காட்டி மிரட்டியவர். இப்படத்திலும் அவ்வாறே வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞன் தோற்றத்திலும் பின் காக்கிச் சட்டையிலுமாக கனக்கச்சிதமாக வேறுபாட்டைக் காட்டுகிறார். வயதின் முதிர்ச்சியையும் அதற்குரிய நிதானத்தையும் காக்கிச்சட்டையில் காண்பிக்கிறார்.
கதாநாயகி சிந்துமேனன் கல்லூரிப்பெண்ணாக, புதுமணப்பெண்ணாக கண்களால் கவிதை பேசிக்கொண்டு எளிமையான குடும்பத்துப் பெண்ணாக வளைய வருகிறார். பக்கத்து வீட்டுக்காரர்களால் அவர் மனம் புண்பட நேர்கையில் முகபாவங்கள், மென்மையாக அதே சமயம் அழுத்தமாக தன் கருத்துக்களை அவர் எதிராளிகளிடம் பேசும் எல்லா காட்சிகளிலும் சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். வில்லனாக நந்தா. சைக்கோ வில்லன்களுக்கு என்ற சிறந்த வில்லன்கள் வரிசையில் இவரையும் சேர்க்கலாம்.
சரண்யா மோகன் சிறுபாத்திரமென்றாலும் அக்காவின் வார்த்தைகளைப் பேசும்போது வித்தியாசத்தை அழகாகக் காட்டி நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காட்சிகளின் துல்லிய அழகு காட்டி அசத்தி இருக்கிறார். காட்சிகளுக்கேற்ற வண்ணங்களும் ஈரத்தின் பளபளப்பும் கண்ணைக் கவர்கின்றன. பிண்ணனி இசைக்கே அதிகம் கவனத்தை வைத்துவிட்டார் போல இசையமைப்பாளர் தமன். ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும் ஆங்கிலப்படத்தினைப் பார்த்த உணர்வைத் தருகிறது.
ஈரம் - சுவாரசியத் திகில்.
-கயல் லக்ஷ்மி







கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















