Flash Image

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை

மின்னஞ்சல் அச்சிடுக PDF

அண்மையில் வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு படமிது. ஆகா ஓகோ என்று பெருவாரியான பாராட்டுக்களையும் புகழாரங்களையும் சூடிக்கொண்ட அதேநேரம் திரைப்படம் சொல்லவரும் கருத்து, அவற்றின் பின்னணி தொடர்பாக மிகக் கடுமையான விமர்சனங்களையும் சில தரப்புக்களிலிருந்து பெற்றுக்கொண்ட படம்.

சந்தேகமேயில்லாமல் தமிழ்த் திரையுலகில் இப்படம் ஒரு மைல் கல்லேதான். திரைப்படக் கலை என்றளவில் இது மிக நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்ட ஒரு திரைப்படம். அவ்வகையில் இப்படத்துக்குரிய இடம் முக்கியமானதே. ஆனால் இதன் கருவாக, போதனையாக, அறிவுரையாகச் சொல்லப்படும் விடயம் தமிழ்த் திரையுலகிற்குப் புதியதன்று. ஏற்கனவே விஜயகாந்த், அர்ஜுன் போன்றவர்களின் படங்களிற் சொல்லப்பட்டவைதாம்.


அதிலும், ஓரிடத்தில் கமல் ‘ஜெய்ஹிந்த்’ என்று சொல்லும்போது இன்னும் சுத்தம். இறுதியில் கமலைக் காட்டிக் கொடுக்க முன்வராத காவல்துறை அதிகாரி, ‘அவர் பெரிய மேதையில்லை, இன்னுமொருமுறை தொடர்பெடுத்தால் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவேன்’ என்று சொல்லி, பிறகு கண்டும்பிடித்துவிட்ட நிலையில் ‘அவர் மேதைதான்’ என்று சொல்லி கமலைக் காட்டிக் கொடுக்க நினைக்காத நுட்பக் கலைஞன் போன்ற பாத்திரங்களும் சம்பவங்களும் வழமையான ‘மசாலா’ப் படத்துக்குரிய அங்கங்களே.

unnai-pol-oruvan-1

இருந்தும்கூட இப்படத்தை மற்றவற்றிலிருந்து வித்தியாசப்படுத்தியும் இறுதிக்கணம் வரை விறுவிறுப்பாகவும் இரசிக்கத்தக்கதாகவும் மாற்றி வைத்திருப்பவை திரைக்கதை நேர்த்தி, கலைஞர்களின் முறையான பங்களிப்பு, மிகைப்படுத்தப்படாத இசை போன்றவற்றோடு வழமையான தமிழ்த் திரைப்படத்திலிருக்கும் சில அம்சங்கள் இப்படத்தில் இல்லாததும் ஒரு காரணம்.

திரைக்கதை மிகச் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் பின்னப்பட்டுள்ளது. தொடக்கக் கணத்திலிருந்து முடிவுக்கணம் வரை ஒரே நேர்கோட்டில் கதை பயணிக்கிறது. மீள் நினைவுகளென்று எந்தத் தாவலும் ‘காட்சி வடிவில்’ திரைக்கதையிலில்லை. அப்படி வரும் மீள்நினைவுகள் பாத்திரங்களூடாக வசனங்களாகவே சொல்லப்படுகின்றன.

எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு எவையெவை தேவையோ அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு பயணிக்கிறது திரைப்படம். இதுவே இப்படத்திலுள்ள மிகமுக்கியமான வெற்றி. ‘கதா நாயகி’ என்ற ஒரு பாத்திரமில்லாமலேயே முழுத் திரைப்படமும் நகர்கிறது. தமிழில் இப்படி முயற்சிக்க அசாத்திய துணிவு தேவை. ஒருவரே பத்துப் பதினைந்து பேரை தூக்கியெறியும் ‘மயிர் கூச்செறியும்’ சண்டைக்காட்சி ஒன்றுகூட இப்படத்திலில்லை.

இக்காட்சி இடம்பெற்றிருக்காவிட்டால் கமலின் நேர்த்தித் தன்மையாவது காப்பாற்றப்பட்டிருக்கும் என்று சொன்னதற்குக் காரணம், தீவிரவாதியாற் சொல்லப்படும் சம்பவம் நிகழ்ந்தது கோவைக் குண்டுவெடிப்புக்குப் பிற்பட்ட காலப்பகுதியில்.

தமிழ்த் திரையுலகிற்குச் சாபக் கேடாகவே இருந்துவரும் இரு விடயங்கள் இந்தப் படத்தில் இருக்கவில்லை. முதலாவது நகைச்சுவைக்கென தனியான – அசட்டுத்தனமான ஒழுக்கு; இரண்டாவது பாடல்கள்.

இங்கே நகைச்சுவை சாபக்கேடெனச் சொல்லவருவது, திரைப்படத்தில் தொடர்பேயில்லாமல் நகைச்சுவைக்கென தனியொரு நடிகரோ ஒரு கூட்டமோ புகுத்தப்பட்டு கதையோட்டத்தோடு ஒட்டாமல் தனியாக அதுவொரு பக்கமாகக் காட்சிகள் போய்க்கொண்டிருக்கும். அவை அக்குறிப்பிட்ட திரைப்படத்தில் வருவதற்கு எந்தக் காரணமும் இருப்பதில்லை. அப்படி வரும் நகைச்சுவைக் காட்சிகளை இன்று தனியொரு DVD இல் தொகுத்துவிட்டுப் பார்த்து இரசித்துக் கொள்ள முடிகிறது எங்களால் எனும்போது அக்காட்சிகள் குறிப்பிட்ட திரைப்படத்தில் எவ்விதத்திலும் முக்கியத்துவமற்றவை என்றுதானே பொருள்? இப்படியான நகைச்சுவைப் புகுத்தல்கள் நிச்சயமாக திரைப்படக் கலை என்றளவில் சாபமே. இம்முறை ஒருபோதும் சிறந்த திரைப்படமொன்றைத் தராது, ‘மாசாலா’க் களை மட்டுமே தந்துகொண்டிருக்கும். எல்லையில் போராடும் இராணுவ வீரர்களின் வாழ்க்கையைச் சொல்ல வந்த படத்தில் எப்படி நகைச்சுவையைத் திணிப்பதென்று ‘ROOM’ போட்டு யோசித்து கஞ்சாக் கறுப்பையும், ரமேஷ் கண்ணாவையும் ‘சீனா தானா’ ரகசியாவையும் புகுத்தி அபத்தமாக வெளிவந்தது தான் ‘அரண்’ என்ற திரைப்படம். இப்படியான புகுத்தல்களால் பாழாய்ப்போன படங்கள், கதைகள் ஏராளம். மாறாக இரசிக்கத் தக்கதான முழுநீள நகைச்சுவைப் படங்களை முயற்சிக்க தமிழ்த் திரையுலகம் தவறியே வந்திருக்கிறது. தமிழ்த் திரையுலகில் முழுநீள நகைச்சுவைப் படமென்று வெளிவந்தவை மிகமிகக் குறைவே, அப்படி வந்த சிலபடங்கள்கூட தோல்வியையே சந்தித்துள்ளன என்பது வருத்தத்துக்குரிய விடயமே.

இப்படியான அசட்டுத்தனமான நகைச்சுவைப் புகுத்தல்கள் (சந்தானபாரதி பேசும் ஓரிடம் தவிர்த்து, அதுகூட அசட்டுத்தனமில்லை; அயோக்கியத்தனமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது) இல்லாமல் கதையின் இயல்போடு பயணிக்கும் நகைச்சுவைத் துணுக்குகள், நையாண்டிகளே இப்படத்திலுள்ளன. எம் போன்றவர்களைக் கவரும் விதத்தில் இந்த ஒழுக்கு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnaipoloruvan2அடுத்ததாக இசை. திரைப்படத்துக்கான இசை என்றதும் எம்மவர்களிடம் முதலில் நினைவுக்கு வருவது படத்தில் வரும் பாடல்களே. பாடல்களைக் கொண்டே இசையமைப்பாளர் ஒருவரின் தகுதியையும், ஒரு திரைப்படத்தில் இசையமைப்பாளரின் பங்கையும் தீர்மானிப்பது தமிழ்த் திரையுலகச் சூழலில் பரவிக்கிடக்கிறது. அடிப்படையில் பாடல்கள் என்பவை குறிப்பிட்ட படத்துக்குப் பலமாக இருக்கவேண்டுமேயொழிய பலவீனமாகவல்ல. ஆனால் மிகப்பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் பலவீனமே. திரைப்படத்துறை, இசைத்துறை என்ற இருபெரும் – அதேநேரம் தனித்தனியாக இயங்கும் துறைகளை ஒருங்கே சீரழித்துக் கொண்டிப்பவை இந்தத் திரைப்படப் பாடல்களே என்றால் மிகையில்லை. நாம் திரைப்படங்களும் ஒழுங்காகக் கொணர்ந்ததில்லை; திரைப்படத்துறைக்கு வெளியே பாடல்களையும் (பக்தித் துறைமட்டும் ஏதோ பரவாயில்லை) நாம் பெருக்கியதில்லை.

பாடல்கள் மூலமே படத்தின் கதையோட்டம் சொல்லப்படும் படங்களும் வந்ததுண்டு. சிலபடங்களில் பாடல்களே அப்படத்தின் கதையோட்டத்துக்கான அச்சாணியாக இருப்பதுண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் பாடல்கள் அப்படியான தேவைக்குப் பயன்படுத்தப்படுவது மிகமிகக் குறைவே. எப்படியாவது ஐந்தோ ஆறோ பாடல்கள் செருக வேண்டுமென்ற நிலையில்தான் இப்போது படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒருபடத்துக்குப் பாட்டெழுத அப்படத்தின் கதையில் ஒருவரிகூட அறிந்திருக்க வேண்டியதில்லை; ஏன், நேரம் கிடைக்கும்போது முன்னேற்பாடாகவே முப்பது நாற்பது பாடல்கள் எழுதியோ இசையமைத்தோ வைத்துவிட்டு கேட்கக் கேட்கக் கொடுத்துக் கொண்டிருக்கலாம் என்ற நிலையிலேயே பாடல்கள் இருக்கின்றன.

இப்படியாக இருந்துவரும் சாபக்கேடு ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. பாடல்கள் இல்லாத தமிழ்ப்படம் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அத்தி பூத்தாற்போல் இப்படியேதாவது படம் வந்து ஆறுதலளிக்கிறது. ஒரு திரைப்படத்தில் இசையமைப்பாளரின் பணி என்னவோ அதைச் சரிவரச் செய்திருக்கிறார் சுருதி கமலஹாசன். மிக இயல்பாகவும் அருமையாகவும் பொருந்திப் போகிறது பின்னணி இசை. அவருக்கு நல்ல எதிர்காலமுண்டு எனலாம். இப்படத்துக்கு முன்னர் நான் மனதார இரசித்த பின்னணி இசைக்குரிய படங்கள் ஆளவந்தானும் ஹேராமும். அவையும் கமலின் படங்களாகவே அமைந்துவிட்டன.

கலைஞர்களின் பங்களிப்பு மிக அருமையாகக் கையாளப்பட்டுள்ளது. யாரும் மிகையாகவோ குறைவாகவோ செய்யாமல் அளவோடு பங்களித்திருக்கிறார்கள். கமலைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. மோகன்லாலின் நடிப்பு மிகவும் கவர்ந்தது. ஆர்ப்பாட்டமில்லாத மனிதராக வந்து தனக்குரிய பங்கைச் சரிவரச் செய்கிறார்.

பாத்திரத் தேர்வில் தீவிரவாதிகளாக வந்த நால்வரின் பாத்திரத்துக்கும் ஏற்கனவே அறிமுகமில்லாதவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். ஏற்கனவே படங்களில் அடியாளாகப் பார்க்கப்பட்டவர்களை அத்தீவிரவாதப் பாத்திரத்தில் பொருத்தாமல் புதுமுகங்களைப் பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

unnaipol-oruvan‘திரைப்படம்’ என்றளவில் அந்தக் கலையைச் சரிவரவும் சிறப்பாகவும் கையாண்டு நல்லதொரு படத்தைத் தந்திருக்கிறார்கள் என்றளவில் இப்படக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால் இதன் மறுபக்கமென்றும் ஒன்றுள்ளது. அது திரைப்படக் கலைக்கு வெளியே நின்று பார்க்க வேண்டிய ஒருபக்கம். திரைப்படத்துக்குள்ளால் சொல்லவரும் சேதிகள், காட்சியமைப்பு முறைகள் மூலம் மறைமுகமாகச் சொல்லப்படும் விடயங்கள், பக்கச்சார்பான கருத்துவாக்கம் என்பன இவ்வாறு கவனத்திலெடுக்கப்பட வேண்டியவை. அதுவும் பொழுதுபோக்கு, மசாலாப் பட வகைக்குள்ளின்றி அறிவுரை சொல்கிறேன் என்ற தொனியோடு வெளிவரும் இப்படங்கள் மிக நுணுக்கமாக ஆராய்ந்து விமர்சிக்கப்பட வேண்டியவையே. அவ்வகையில் உன்னைப் போல் ஒருவன் என்ற இத்திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய பக்கங்கள், பாகங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் மீதான ஆழமான விமர்சனங்கள் விலாவாரியாக வைக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக தமிழ் வலைப்பதிவுகளில் இவை காரசாரமாக வைக்கப்பட்டுள்ளன. எல்லாக் குற்றச்சாட்டுக்களும் எனக்கு ஏற்புடையவையல்ல என்ற போதும் பெரும்பாலாவை சரியான விமர்சனங்களே. இவ்விடத்தில் மிகச்சுருக்கமாக சிலவற்றைப் பார்க்கலாம்.

குண்டு வைப்பவர்கள் பக்கமும் நியாயமிருக்கக் கூடும் என்ற கருத்தை கமல் தனது திரைப்படத்தில் முற்றாகத் தவிர்த்திருக்கிறார். அதுவும் ராஜீவ் காந்தி மீதான குண்டுத் தாக்குதலையும் திரைப்படத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில் கமல் பொத்தாம் பொதுவாக, தீவிரவாதம்… கரன்பான்பூச்சிகள்… நசுக்க வேண்டும்… சிறைகூடாது… போட்டுத்தள்ள வேண்டும்… என்று உபதேசித்துவிட்டுப் போய்விட முடியாது.

முதலில், தீவிரவாதத்தைத் தீவிரவாதத்தால் ஒழிப்பது என்பதை திரைப்படத்தில் தனது பாத்திரத்துக்குள்ளால் கமல் சொல்கிறார். கமல் திரைப்படத்துக்கு வெளியே தனது கருத்தாக அதைச் சொல்லாதவரை அக்கருத்தைக் கொண்டு கமலைச் சாடமுடியாது; ஆனால் படத்தைச் சாடலாம். பிறகு வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கமல் அக்கருத்தைத் தனது கருத்தாகச் சொல்வதாகத் தெரிகிறது. அதையும்கூட தேர்ந்த கலைஞனாக வார்த்தை ஜாலங்களுக்குள்ளால் பூசி மழுப்பிச் சொல்லி முடிக்கிறார். ஒரே நிகழ்ச்சியில் இன்னோரிடத்தில் தீவிரவாதத்தைத் தீவிரவாதத்தால் ஒழிப்பது தனது கருத்தில்லை என்றும் சொல்கிறார். ஆனால் மேலோங்கித் தெரிவது திரைப்படத்தில் தனது பாத்திரத்தின் கதையையே வெளியிலும் தனது கருத்தாகக் கமல் கொண்டிருக்கிறார் என்ற தோற்றப்பாடே. கமல் வெளிப்படையாகவே ‘நான் வன்முறையில் நம்பிக்கையற்றவன், காந்திய வழியே எனது விருப்பவழி’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மறையான நிலைப்பாட்டையே உன்னைப்போல் ஒருவன் படத்திலும், அதைத்தொடர்ந்த தொலைக்காட்சி ‘வியாபார’ நிகழ்ச்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதே கருத்தோடு ஏற்கனவே தமிழ்த்திரைப்படங்கள் வந்துவிட்டாலும் அவற்றையெதிர்க்காமல் கமலின் திரைப்படத்தை எதிர்க்க வேண்டிய தேவை நிச்சயமுள்ளது. ஏனென்றால் இது முற்போக்கு முலாம் பூசிய ஒருவரால் செய்யப்படுவது என்பதோடு, மக்களுக்கு அறிவுரை சொல்லும் தோரணையில் விளம்பரப்படுத்தப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படத்திற் சொல்லப்படுவது.

அடுத்ததாக முஸ்லீம் சமூகத்துக்கெதிரான கருத்தோட்டம் இப்படத்தில் இருப்பதாக, இது முழுக்க முழுக்க முஸ்லீம் விரோதப் படம் என்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவற்றில் உண்மையில்லாமலில்லை. தெரிந்தோ தெரியாமலோ பல குளறுபடிகளூடாக அந்தக் கருத்து மேலோங்கும் வகையிலேயே திரைப்படம் செதுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளைக் கொல்வதற்குரிய காரணங்களாக கமல் தனது தரப்பிலிருந்து நியாயங்களைச் சொல்வதற்குத் திரைப்படம் அனுமதிக்கும் அதேவேளை, தாம் குண்டுவைத்ததற்கான நியாயங்களை தீவிரவாதிகள் சொல்வதற்குப் படம் அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதிக்கிறது, அந்த ஜனநாயம் படத்தில் பேணப்படுகிறது என்பதற்காக ஒரு காட்சி படத்தில் வருகிறதுதான். ஆனால் அக்காட்சியை வைத்ததிலும்பார்க்க அதை வைக்காமலே விட்டிருக்கலாம். கமலின் ‘நேர்த்தித் தன்மை’ யாவது காப்பாற்றப்பட்டிருக்கும்.

unnaipoloruvan3தான் குண்டுவைத்த காரணத்தை தீவிரவாதி நியாயப்படுத்தும் சந்தர்ப்பமொன்றை வழங்கிவிட்டு, அதை அயோக்கியத்தனமான நையாண்டிக் கதையொன்றின்மூலம் கேவலமாக்கிவிட்டார்கள். படம் பார்க்கும் எவருக்குமே அதுவொரு நியாயக் கதையென்ற எண்ணம் ஏற்படாமல் ‘கொல்’லென்று சிரிக்கத்தான் முடிகிறது. தனது நியாயமாக கமல் சொல்லும் ‘கருவறுத்த’ சம்பவத்துக்கு எவ்விதத்திலும் குறைச்சலற்ற (கமலுக்கு அவர் சொல்லும் நியாயக்கதை மூன்றாந்தரப்புச் செய்தியாக இருக்கும்போது தீவிரவாதிக்கு அவனது சொந்த அனுபவமாக –மனைவியும் பிள்ளையும் கொல்லப்பட்ட சம்பவமாக இருக்கிறது. இந்நிலையில் கமலின் நியாயத்தைவிடவும் தீவிரவாதியின் நியாயம்தான் கூடுதலாக மனதைப் பிழிந்திருக்க வேண்டும்.) உணர்வுபூர்வமான நியாயக்கதைதான் தீவிரவாதியுடையது. ஆனால் அதை சந்தானபாரதி மூலமாக நையாண்டியாக்கி எள்ளிநகையாடிய அயோக்கியத்தனமான அணுகுமுறை இவ்விடத்திற் கடைப்பிடிக்கப்பட்டதென்றே சொல்ல வேண்டும்.

இக்காட்சி இடம்பெற்றிருக்காவிட்டால் கமலின் நேர்த்தித் தன்மையாவது காப்பாற்றப்பட்டிருக்கும் என்று சொன்னதற்குக் காரணம், தீவிரவாதியாற் சொல்லப்படும் சம்பவம் நிகழ்ந்தது கோவைக் குண்டுவெடிப்புக்குப் பிற்பட்ட காலப்பகுதியில். ஆனால் தீவிரவாதி கைது செய்யப்பட்டதும், அவன் நியாயப்படுத்திக் கொண்டிருப்பதுமான சம்பவம் கோவைக் குண்டுவெடிப்பே. பின்வந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவத்துக்குப் பழிவாங்க எப்படி அவன் கோவைக்குண்டுவெடிப்பைச் செய்திருப்பான் என்ற கேள்வி வருகிறது. You too Kamal? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆக தீவிரவாதி தனது நியாயத்தைச் சொல்ல வழங்கப்பட்ட சம்பவம் உண்மையில் அந்நோக்கத்துக்காக வழங்கப்படவில்லை. மாறாக அப்படி வழங்கப்பட்டது என்று பூச்சாண்டி காட்டுவதற்காக ஏனோ தானோவென்று வைக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம். ஆனால் சந்தான பாரதியின் நையாண்டிக்கதை சொல்லவரும் சேதி இதுவொரு திட்டமிட்ட அயோக்கியத்தனமென்பதாகவே கருதத் தோன்றுகிறது.

இதற்கு இன்னும் ஒருபடி மேலேபோய் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் தொடர்பாக தொலைக்காட்சிகளில் நிகழ்ந்துவரும் நிகழ்ச்சிகளில் கமல் உதிர்க்கும் முத்துக்கள் மேற்கூறிய விமர்சனங்களை இன்னும் மெய்ப்பிப்பவையாகவே அமைகின்றன. திரைப்படத்தை மட்டுமன்றி கமலையும் சேர்த்தே விமர்சிப்பது சரியான போக்கே என்பதை திரைப்படத்தின் பின்னராக கமலின் தொடர் செயற்பாடுகள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

குண்டு வைப்பவர்கள் பக்கமும் நியாயமிருக்கக் கூடும் என்ற கருத்தை கமல் தனது திரைப்படத்தில் முற்றாகத் தவிர்த்திருக்கிறார். அதுவும் ராஜீவ் காந்தி மீதான குண்டுத் தாக்குதலையும் திரைப்படத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில் கமல் பொத்தாம் பொதுவாக, தீவிரவாதம்… கரன்பான்பூச்சிகள்… நசுக்க வேண்டும்… சிறைகூடாது… போட்டுத்தள்ள வேண்டும்… என்று உபதேசித்துவிட்டுப் போய்விட முடியாது. இப்படியான கருத்துக்களைப் பின்னணியாகக் கொண்டுவரும் சிறந்த திரைப்படங்கள்கூட காரசாரமாக விமர்சிக்கப்பட வேண்டியவையே. அதுவும் திரைத்துறைக்குள்ளிருந்து – குறிப்பாக நடிகர்களிடமிருந்து தலைவர்களையும் வழிகாட்டிகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் – ஒரு நடிகரையே தமக்கான வாழ்க்கையின் முன்மாதிரியாகக் கொண்டு வாழத் தயாரான ஒரு சமூகத்தில் – நடிகனுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த முரட்டுத்தனமாக இரசிகர் கூட்டத்தைக் கொண்ட சமூகத்தில் இத்திரைப்படங்களின் தாக்கமும் அதிகமிருக்கும் என்றளவில் இவை விமர்சிக்கப்பட வேண்டியவையே.

முடிவாக, திரைப்படக் கலை எனும்போது மிகச்சிறப்பாக செதுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்றளவில் இப்படம் மிகமுக்கியமான ஒரு மைல்கல். இன்னும்பல சிறந்த படங்கள் வெளிவர இது மிகப்பெரும் உந்துசக்தியாக இருக்குமென்பதில் ஐயமில்லை. அதேநேரம் படத்தின் பின்னணியிலிருக்கும் வன்மம், போதனை, கருத்துருவாக்கம், பக்கச்சார்பான வெளிப்பாடு என்பவை கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவையே.

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 07 அக்டோபர் 2009 11:59 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (2)
ஜோவுக்கான மறுமொழி
2 திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2009 06:09
காந்தன்
நண்பர் ஜோ,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறிப்பிட்ட அவ்வாக்கியம் எழுதப்பட்டது 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தை மனத்தில் வைத்து. மற்றும்படி நீங்கள் மேற்சொன்ன படங்கள் வியாபார ரீதியில் வெற்றி பெற்றவையேதான்.
நகைச்சுவை படங்கள்
1 புதன்கிழமை, 07 அக்டோபர் 2009 16:06
ஜோ
//தமிழ்த் திரையுலகில் முழுநீள நகைச்சுவைப் படமென்று வெளிவந்தவை மிகமிகக் குறைவே, அப்படி வந்த சிலபடங்கள்கூட தோல்வியையே சந்தித்துள்ளன என்பது வருத்தத்துக்குரிய விடயமே.//
அப்படியா ? கமல் படங்களையே எடுத்துக்கொள்ளுவோம் .. மைக்கல் மதன காமராஜன் ,சதி லீலாவதி ,மகளிர் மட்டும் ,தெனாலி ,அவ்வை சண்முகி இவையெல்லாம் வெற்றி இல்லையா?

வாசகர் கருத்துக்கள், category: "சினிமா"

comments குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்
கொச்சை படுத்தப் பட்ட ராவணன் ராவணன் - ஒரு பார்வை
Non-Missable Film in Life ராவணன் - ஒரு பார்வை
அஙகடி தெரு....சிறந்த விமர்சனம் அங்காடித்தெரு - ஒரு பார்வை
நல்ல விமர்சனம் 3 இடியட்ஸ் திரைவிமர்சனம்
ஈர‌ம் ஈரம் - திரைப்பார்வை
ஜோவுக்கான மறுமொழி உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
நகைச்சுவை படங்கள் உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
மிக நன்று நாடோடிகள் - விமர்சனம்
அருமை குறும்படம் விமர்சனம்

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 90 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை