குழுகூடி முடிவுசெய்யும்போது சிறப்பான முடிவுகள் வருமா?
குழுகூடி முடிவு செய்யும் போது சிறப்பான முடிவுகள் வருமென பொதுவாக எதிர்பார்க்கலாம் எனத்தோன்றுகிறதா? பல சமயங்களில் அவ்வாறு நடப்பதில்லை. என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.
குழுவின் பலங்கள்:
* குழுக்கள் முழுமையான தகவல்களைக் கொண்டதாகவும் துறைசார்ந்த புலமையின் அடிப்படையிலும் உருவாகும் முடிவுகளை தர இயலும்.
* குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தருவதால் மிக அதிகமான தகவல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்க முடியும்.
* உறுப்பினர்கள் தம் தம் கோணங்களின் அடிப்படையில் பிரச்சனைகளை அனுகுவதால் வித விதமான இடுபொருள்கள் பெறப்பட்டு முடிவுகள் புதிய அனுகுமுறைகளையும் செயல்திட்டங்களையும் உருவாக்கலாம்.
* குழுக்கள் எடுத்த முடிவுகள் என்பதால் முடிவுகள் செயல்படுத்தும்போது எதிர்ப்புத்தோன்றுவதற்கு வாய்ப்பு குறைவு.
மேலும் சிந்தித்துப் பார்த்தால் குழுவுக்கு ஆதரவாக மேலும் பல கருத்துக்கள் கிடைக்கலாம். ஆனால் குழுமுடிவுகளில் பல அடிப்படையான குறைபாடுகள் உள்ளன. அவற்றை கூர்ந்து நோக்கும் முன்னர் சில வெளிப்படையான குறைகள் இதோ:
குழுவின் பலவீனங்கள்:
* குழுக்கள் மிக அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.
* குழுக்களை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்வதற்கும் அதிகமான செலவு செய்ய வேண்டி உள்ளது.
* குழு உறுப்பினகள் தங்களுக்குள் உட் குழுக்களாகப் பிரிந்து செயல்படுவதால் குழு அரசியல் உருவாகிறது. அது சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
முடிவுகள் இருவகை. 1. பொருத்தமான் முடிவுகள், 2. சிறப்பான முடிவுகள்.
குழுக்களின் முடிவுகள் தனியருடைய முடிவுகளைவிட பொருத்தமான முடிவுகளாக இருப்பது கண்கூடு. ஆனாலும் குழுவில் உள்ள கூர்த்த சிந்தனையாளரைவிட பொருத்தமான முடிவுகளை குழுவினால் எடுக்கமுடியவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் புதியன புனைதலில் முதலில் வரும் குழு முடிவுகள் விரைவாக எடுப்பதில் தனியருக்குப் பின் தங்கிவிடுகிறது.
சிறப்பாக செயல் படுவதில் அதாவது முடிவுசெய்வதற்கு எவ்வளவு செலவாயிற்று என்று பார்த்தால் தனியரே முதலில் வருகிறார். அதிகமான தகவல்கள் சேகரிக்கவேண்டுமெனில் மட்டும் குழு குறைந்தசெலவில் செயல்படுகிறது எனவும் கண்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது குழுக்கள் முடிவுசெய்வதற்குத் தேவையான பல கட்ட நடவடிக்கைகளுக்கு குழு மிக ஏதுவாகவும் அதிகமான தகவல்களை தந்து உதவுவதில் முன்னணியிலும், முடிவுகளைச் செயல் படுத்துவதில் உதவிகரமாக இருப்பதிலும் முன்னணியிலும் உள்ள குழு சச்சரவுள் ஏற்படுவதிலும் அதிகமான நேரமும் செலவும் ஆவதிலும் இன்ன பிற குறைபாடுகளைக் கொண்டுள்ளது.
குழு முடிவுகளில் மேலே குறிப்பிடப்பட்ட குறைகளல்லாமல் மிக ஆபத்தான குறைகள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஒத்த குழுச் சிந்தனை மற்றும் குழுகளம் மாறுதல்
ஒரு குழுவில் ஆறு பேர் இருப்பதாகக் கொள்வோம். கூட்டம் துவங்கிய பின்னர் சில நிமிடங்களில் ஆறு பேரும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கூறுகிறார்கள் அல்லது ஓரிருவர் மட்டும் பேசுகிறார்கள் மற்றவர்கள் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அங்கே குழுச்சிந்தனை ஏற்பட்டுவிட்டதென்று பொருள். ஆறு பேருக்கும் தனித் தனியே சிந்திக்கும் திறன் இருந்தும் தங்கள் சிந்தனையைப் பலபேர் மூட்டை கட்டிவைத்து விடுவதால் குழுவிற்கு ஒரே சிந்தனை இருப்பது போல் தோன்றும். இந்த நிலை தான் ஒத்த குழுச்சிந்தனை(group think) எனப்படுகிறது. இது ஒரு நோய். இதே போல் குழுகளம் மாறுதலும் ஒர் நோயே. களம் மாறுதல் என்றால் குழு ஆரம்பத்திலிருந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி மிக பழமையான நிலைப்பாடு அல்லது மிகப் புதுமையான நிலைப்பாடு என எதிர் முனைகளுக்கு மாறிவிடுவது (Group shifting from one extreme position to another extreme position). இவ்விரண்டினையும் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
குழுச்சிந்தனை
எப்போதாவது ஒருகூட்டத்தில் இருந்த போது உங்கள் கருத்தைக் கூற நினைத்த நீங்கள் பின்னர் வாளாது இருந்துவிட்டீர்களா? ஒரு வேளை நீங்கள் அவைக்கூச்சம் உள்ளவராக இருக்கலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நீங்கள் ஒத்த குழுச்சிந்தனையால் பாதிக்கப்பட்டு உள்ளீர்களென்று பொருள். குழுவில் ஒருவர் பங்குகொள்ள ஆரம்பிக்கிற நிலையிலேயே குழு ஒற்றுமையைக் காத்தலில் ஆர்வம் மேலிட ஒத்தகருத்தே குழு ஒற்றுமையை காட்டுவதாகும் எனக்கொண்டும் குழுஒற்றுமை மிகப்புனிதமானது எனவும் கருதுவதால் தனக்கென்று ஒரு கருத்துத் தோன்றினாலும் அதை வெளியிடாமல் இருந்துவிடுகிறார். இப்படியே ஒவ்வொருவரும் இருந்துவிடும் நிலையில் குழுவின் நோக்கம் நிறைவேறாமல் போகிறது. குழு ஒற்றுமை என்பது எழுதப்படாத சட்டம் போல் செயல்படுகிறது.
ஒத்தக் குழுச்சிந்தனையின் அறிகுறிகள்
* முன்னெடுத்துப் பேசும் உறுப்பினர் தன்னுடைய கருத்துக்கு எதிர் கருத்து வருமேயானால்(ஆரம்பத்தில் வரும், பிறகு ஒத்தக் குழுசிந்தனை வேலை செய்வதால் நின்று விடும்) அதை புள்ளிவிவரங்களுடன் அறிவியல் ரீதியில்எதிர்கொள்ளாமல் வரட்டுசித்தாந்தத்திற்கு(rationalization) உட்படுத்துவார்.
* சில சமயங்களில் உறுப்பினர்கள் குழுவின் ஒத்த கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நேரடியாகவே மற்ற உறுப்பினரைத் தாக்கிப்பேசுவார். அவருக்கு குழுத்தலைவரின் அசீர்வாதம் இருக்கக்கூடும்!
* சில உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும் குழுவின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் தன் கருத்தினைக் கூறாது இருந்துவிடவும் கூடும். மிகவும் விசயம் தெரிந்தவர்கள் பேசுகிறார்கள். நமக்கு அவர்களைவிட அதிகமாகத் தெரிந்துவிடபோகிறதா என்ன? என நினைக்கும் அவர்கள் வாளா இருந்துவிடுவார்கள்.
* ஒத்தகருத்து இருப்பதைப் போன்று ஒரு பிரமையும் சில நேரங்களில் ஏற்படும். அதற்காவே காத்திருக்கும் ஒரு உறுப்பினரோ அல்லது தலைவரோ உடனே கூட்டம் நிறைவு பெற்றுவிட்டதாக அறிவித்துவிடுவார்.
சில சுவையான சரித்திர நிகழ்சிகள்
பேர்ல் ஹார்பரில் ஜப்பான் எதிர்பாரத வகையில் தாக்கியபோது அதைப்பற்றிய தகவலிருந்தும் தாக்கப்படும் சாத்தியக்கூற்றினை கணிக்க அமேரிக்க கடற்படைத் தளபதி தவறியது, வட கொரியாமீது போர் தொடுக்கும் தவறான முடிவினை எடுத்தது, வியட்னாம் மீது போரினை உக்கிரப்படுத்தியது, சேலன்ஞ்சர், மற்றும் கொலம்பியா ஸ்ஃபேஸ் ஷட்டில் விபத்திற்கான காரணங்களை ஆரம்பக்காலத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது அண்மைக்காலத்தில் பயங்கரவாதிகள் மற்றும் சரிவராத நாடுகளை முன்னேற்பாடாக அழித்தல் என்ற (preemptive use of military force against terrorists and rogue nations) அவசர முடிவினால் நட்பு நாடுகளுடன் சரியாக கலந்து ஆலோசிக்காமல் போரில் ஈடுபட்டு அவதியுறும் முடிவு எனப் பல முடிவுகளை ஆராய்ந்து ஜேனிஸ் என்ற அறிஞர் எவ்வாறு ஒத்தகுழுச்சிந்தனை செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளார். இதே போன்று வணிக உலகத்திலும் நடக்கும் குளறுபடிகளுக்கு குறிப்பாக பிற நிறுவனங்களை வாங்கும் போது நடக்கும் தவறுகளை குழுச்சிந்தனை அடிப்படையில் ஆராய்ந்துள்ளனர்.
குழுச்சிந்தனைக்கு மருந்து
1. தலைவர் ஒவ்வொரு உறுப்பினரும் கூட்டத்தில் கூறப்படும் கருத்தை அக்குவேறு அணிவேறாக அலசி ஆராயும் படி வலியுறுத்த வேண்டும்
2. ஆரம்பத்தில் தலைவர் தன்னுடைய எதிர்பார்ப்புகளையும் சிந்தனையையும் வெளிப்படுத்தக்கூடாது.
3. ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பரிடம் குழுவின் முடிவுகளைக் கூறி அவர் கருத்தினை அறிந்து அதனைக் குழுவிற்கு கூறவேண்டும்.
4. வெளியே இருந்து நிபுணர்கள் வரவழைக்கபட்டு அவர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகக் கூற அனுமதிக்கவேண்டும்
5. சொல்வளமும், நா வளமும் உள்ள ஒருவரை சட்டவாளாராக செயல்பட வைக்கவேண்டும் ( அதாவது அவர் ஒரு முடிவின் அடிப்படைகளையும் அனுமானங்களையும் குறித்து கேள்விகளை எழுப்பவேண்டும்) 6. தலைவர் குறிப்பிடும் அளவுக்கு நேரத்தை ஒதுக்கி எதிராளிகளிடமிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளை ஆராய வேண்டும். அதற்கான மாற்று வழிகளை கண்டறியவேண்டும்
குழு களம் மாறுதல்
பல சமயங்களில் உறுப்பினர்களை விடத் தீவிரமான முடிவுகளை குழு எடுப்பதைக் காணாலாம். அதாவது கூட்டம் முடிந்தபின் ”என்னங்க மிகமுக்கியமான முடிவை எடுத்துவிட்டீர்களே இந்த முடிவு உங்களுக்குச் சம்மதம் தானா” எனக்கேட்டால் இல்லை இது எனக்கு உடன்படில்லாத முடிவென்று ஒரு உறுப்பினர் கூறுகிறார் என வைத்துக்கொள்வோம் உடனே நீங்கள் பிற உறுப்பினர்களைக் கேட்க அவர்களும் அவ்வாறே கூற என்ன தலை சுற்றுகிறதா? அதுதான் குழு பெரும்பாலான உறுப்பினர்களுடைய கருத்திலிருந்து மாறுபட்டு முடிவுகளை மேற்கொள்வதான குழு களம் மாறும் நோய் ஆகும். என்ன நடக்கிறதென்றால் குழு விசயங்களைக் குறித்துப் பேசும் போது உறுப்பினர்கள் சிலர் தங்களுடைய நிலையை அவர்களையும் அறியாமல் கடுமையாக்கிக் கொள்வார்கள். உதாரணமாக ஒருவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் வெளியே நண்பர்களிடமிருந்து வரும் தொலை பேசிகளுக்கு பதில் அளிக்கக் கூடாது எனக்கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். மற்றவர்களும் அதை ஆதரிக்க அவர் நண்பர்களிடமிருந்து மட்டுமில்லாமல் குடும்பத்தினரிடமிருந்தும் வரும் அழைப்புகளையும் தவிர்க்கவேண்டும் எனக்கூறும் அளவிற்குச் சென்று விடுவார்.
இதைத் தவிர்ப்பது எப்படி?
குழுச்சிந்தனையை தவிர்க்கப் பயன்படும் உத்திகள் இதற்கும் ஏற்றவையே. உறுப்பினர்களை அவ்வப்போது யாராவது confront அதாவது குறுக்குக் கேள்வி கேட்க வேண்டும். இந்த ஏற்பாடு இருப்பதை முன்கூட்டியே எல்லோரிடமும் கூறி அவர்கள் சம்மதத்தைப் பெறவேண்டும். குறுக்குக் கேள்வி கேட்பது என்றால் என்னவெனில் ஒருவருடைய இரு நிலைகளுக்கு இடையே உள்ள முரண்பாட்டினைச் சுட்டிக்காட்டுவதாகும். இவ்வாறான ஒரு ஏற்பாடு இருந்தால் தீவிரமான முடிவுகளை நோக்கி குழு செல்லும் போது குறுக்குக்கேள்வி கேட்பவர் செயல் பட்டு தீவிரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















