Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

உள்ளிருப்போர் வர்த்தகம் - பங்கு வர்த்தக மோசடி

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இன்று அமெரிக்காவின் பங்குச்சந்தையை, தவறு - அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டிருப்பது கல்லியான் ஹெட்ஜ் ஃபண்ட் (Galleon Hedge Funds) நிறுவனர் திரு ராஜ் ராஜரத்தினம் என்பவரும் மேலும் ஐந்து நபர்களும் செய்ததாகக் கூறப்படும் ஏறத்தாழ 20 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பங்குச்சந்தை தொடர்பான மோசடி. இவர்கள் மீது பிற நிறுவனங்களின் அந்தரங்கமான தகவல்களைத் திரட்டி, அந்தச் செய்திகளைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை Insider Trading என்பர். இதனைத் தமிழில் 'உள்ளிருப்போர் வர்த்தகம்' எனக் கூறலாம்.


உள்ளிருப்போர் வர்த்தகம் அதாவது Insider Trading என்றால் என்ன? அதைக்குறித்து, இந்தப் பங்குச்சந்தைப் பகுதியில் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

Raj-Rajaratnamபங்குச்சந்தைகளில் ஏற்படும் ஊசலாட்டத்திற்கும், பங்குகளின் விலை ஏறி இறங்குவதற்கும் நிறுவனங்கள் குறித்த தகவல்களும் காரணம் என்று முன்பே பார்த்தோம். நல்ல விதமான தகவல்கள் விலை உயர்விற்கும், எதிர்மறையான தகவல்கள் விலைச்சரிவிற்கும் காரணமாகிவிடும் என்பதையும் தெரிந்துகொண்டோம். ஆனால், பிறருக்கு, அதாவது பொதுமக்களுக்கு இத்தகவல்கள் தெரிவதற்கு முன்பாக யாருக்கெல்லாம் தெரிய வாய்ப்புண்டோ அவர்கள் அத்தகவல்களைப் பயன்படுத்தி சந்தையில் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்பது பொதுவான விதி. உதாரணமாக X என ஒரு நிறுவனம் இருப்பதாகக்கொள்வோம். அந்நிறுவனம் Y என்ற மற்றொரு நிறுவனத்துடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறது எனில், அந்தச் செய்தி வெளியில் தெரிந்த உடனேயே, X நிறுவனத்தின் பங்குகளின் விலை மளமளவென்று உயரத்தொடங்கும். ஆனால், இந்த ஒப்பந்தம் வரப்போகிறது என்பதை அதன் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இச்செய்தி தெரியுமுன்பே அறிந்திருப்பார்கள் அல்லவா? இச்செய்தி வெளியில் பரவுமுன்பே அவர்கள் குறைந்த விலையில் அப்பங்குகளை வாங்கி இலாபம் பார்ப்பது, அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நபருக்கு இந்த இரகசியத்தகவலைக் கசியவிட்டு அவர்கள் இலாபம் பெற உதவுவது, அல்லது, பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்று X நிறுவனத்தில் உள்ள, இத்தகவல்களுக்கு அணுக்கமான (Persons with Potential Access) நபர்களிடம் இருந்து (கையூட்டு முதலியவற்றைக்கொடுப்பதன்மூலம்) இத்தகைய அந்தரங்கமான, இரகசியமான தகவல்களைத்திரட்டி தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்துவது இவை எல்லாமே Insider Trading தான்.

இப்பொழுது Galleon Hedge Funds என்ற இந்த அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் திரு ராஜ் ராஜரத்தினம் மற்றும் இவருடைய கூட்டாளிகள் (இதில் ராஜிவ் கோயல் மற்றும் அனில் குமார் என்ற இரு இந்தியர்களும் அடக்கம்) , IBM, Google உட்பட்ட ஏறத்தாழ ஏழு நிறுவனங்களில் இருந்து, முக்கியமான இரகசியத்தகவல்களைத் திரட்டி அத்தகவல்களைத் தமக்கு / தமது நிறுவனத்திற்கு முறைகேடாக லாபம் பெறப்பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2006 முதல் 2008 வரையான காலகட்டத்தில் இவர்கள், மற்ற பல பெரிய நிறுவனங்களில் இருந்து, அந்த நிறுவனங்களின் ஆதாய விவரங்கள், அவர்கள் மேற்கொள்ளவிருந்த கூட்டு வர்த்தகங்கள் (Business Tie-Ups) முதலியன குறித்த பல தகவல்களைப் பரிமாறிக்கொண்டு அதன் மூலம் பல மில்லியன் டாலர் தொகை லாபம் அடைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

உள்ளிருப்போர் வர்த்தகம், அதாவது, முக்கிய அதிகாரிகள், பணியாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்குவர்த்தகம் செய்வதைக்குறித்து சட்டங்கள் பல, பெரும்பாலான நாடுகளில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் Employee Stock Option மூலம் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தவறாகக் கருதப்படமாட்டாது. ஆனால், ஒரு நிறுவனத்தின் வருடாந்திர, அல்லது காலாண்டுக் கணக்குகள் முடிவடைந்தபின், அத்தகவல்கள் வெளியில் பரவுவதற்குமுன் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், குறிப்பாக அத்தகவல்களைக் கையாளக்கூடியவர்கள் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பது சட்டப்படி குற்றமாகக்கருதப்படுகிறது. அதே போல், அத்தகவல்களைக் கையாள்பவர்கள், பிற வெளியாட்களுக்கு அத்தகவல்களைக் கசிய விடுவதும் பெரிய குற்றமே ஆகும்.

அமெரிக்க நாட்டின் பங்குச்சந்தை குறித்த சட்டமாகிய Securities and Exchange Act of 1934 (USA) பிரிவு 16 இன் படி, உள்ளிருப்போர் என வரையறுக்கப்பட்ட பணியாளர்கள், இயக்குனர்கள் மற்றும் 10% சதவீதத்துக்கு அதிகமாகப் பங்குகளை வைத்திருப்பவர்கள், அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி ஆறு மாதத்திற்குள் விற்றுவிடுவார்களேயானால் அந்தப் பரிவர்த்தனையால் வரும் ஆதாயம் முழுவதையும், நிறுவனத்திற்குக் கொடுத்துவிடவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ள எவரும், அந்நிறுவனத்தின் பங்குகளில் வர்த்தகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் Securities Exchange Board of India வும், உள்ளிருப்போர் வர்த்தகத்தைத் தடுக்க பல வித வரையறைகளையும் விதிகளையும் நிர்ணயித்துள்ளது.

ஆனால், ஹென்றி மான் (Henry Manne) ,மில்டன் ஃப்ரீட்மன் (Milton Friedman) முதலிய பல பொருளாதார நிபுணர்கள், இந்த உள்ளிருப்போர் வர்த்தகம் சட்டவிரோதமானது என்ற நிலையை மாற்றி அதனை சட்ட பூர்வமாக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர். உள்ளிருப்போர் வர்த்தகம் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பயனுள்ளதே என்று அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில், உள்ளிருப்பவர்கள் தமது நிறுவனத்தின் பங்குகளை பரிவர்த்தனை செய்கையில், விலை ஏற்றம் (அல்லது இறக்கம்) ஏற்படுமானால் அது சந்தையில் பிரதிபலிக்கத்தான் செய்யும் எனவும் அது அனைத்து முதலீட்டாளர்களுக்குமே நல்லதுதான் என்பதும் இவர்கள் கருத்து. மற்ற சந்தைகளில், குறிப்பாக நிலம் தொடர்பான வர்த்தகங்களில், உள்ளிருப்போர் வர்த்தகம் தவறாகக் கருதப்படாதபொழுது, பங்குவிற்பனையில் மட்டும் இந்தத் தடை எதற்கு என்பது இவர்கள் வாதம்.

ஆயினும் பங்குச்சந்தையைக் கண்காணிக்கும் நிறுவனங்கள், (e.g. Securities and Exchange Commission (USA), Securities Exchange Board of India ) முதலியவை உள்ளிருப்போர் வர்த்தகத்தை "மோசடி" என்றே கருதுகின்றன. இங்கிலாந்து, ஜப்பான் முதலிய நாடுகளிலும் உள்ளிருப்போர் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. சொல்லப்போனால், 1988ம் வருடம் ஜப்பான் நாடுதான் முதலில் உள்ளிருப்போர் வர்த்தகத்திற்கு எதிரான சட்டத்தை இயற்றியது. 1998ம் ஆண்டில் 'International Organisation of Securities Commission' (IOSCO) என்ற சர்வதேச நிறுவனம் இயற்றிய, சந்தை தொடர்பான அடிப்படைக்கொள்கைகளில் முதலாவதாக, முதலீட்டாளர் பாதுகாப்பு விளங்குகிறது. உள்ளிருப்போர் வர்த்தகம் முதலீட்டாளர்களை ஏமாற்றவல்லதாகவும், ஒரு சாரார் மட்டும் நியாயமற்ற முறையில் பலன் பெறுவதாகவும் இருப்பதால் உள்ளிருப்போர் வர்த்தகம் தவறானது எனவும், வணிக நெறிமுறைகளுக்கு (Business Ethics) எதிரானதாகவும் கருதப்படுகிறது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2009 11:29 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
Insider trading
1 ஞாயிற்றுக்கிழமை, 25 அக்டோபர் 2009 15:46
gouthaman K G
sirappaana katturai - ubayoga karamaana thagavalgal. Nandri.

வாசகர் கருத்துக்கள், category: "வணிகம்"

detail of A toZ பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
SPECULATION பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
about broking office பங்குச் சந்தையின் வகைகள்
பஙுசந்தை பங்குச் சந்தையின் வகைகள்
basic about thepanku santhai பங்குச் சந்தையின் வகைகள்
use ful பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்குச் சந்தையில் முதலீடு சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
best stock brockers company பங்குச் சந்தையின் வகைகள்
Stock Market-How to win? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 80 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை