Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

பரஸ்பர நிதிகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பரஸ்பர நிதிகள் என்றால் என்பது ஒரு வித முதலீட்டு நிறுவனங்களே! 'சிறு துளி பெருவெள்ளம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவன இந்தப் பரஸ்பர நிதிகள். நீங்கள் எத்தகைய முதலீடு செய்யவேண்டும் என்று விரும்பினாலும் அதற்கேற்ற ஒரு முதலீட்டுத் திட்டத்தை(Investment Scheme), பரஸ்பர நிதியங்கள் வழங்குகின்றன.ஏறத்தாழ இருபது வருடங்களாகப் பிரபலமாக இருக்கும் இந்தப் பரஸ்பர நிதியங்களுக்கான தொடக்கம் 1774ம் ஆண்டே ஹாலந்து நாட்டில் ஏற்பட்டது. இன்று பங்குச்சந்தைக்கு இணையாக பரஸ்பர நிதியங்கள் பல வந்துவிட்டன.


mutual-fundபரஸ்பர நிதியங்கள் எப்படிச் செயல்படுகின்றன? ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட லட்சக்கணக்கான தொகையை, பங்கு நிறுவனங்களில் உள்ள நிதி நிர்வாகிகள் பல விதமான பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றனர். பங்குகளுக்குக் கிடைக்கும் பங்காதாயமும், கடன் பத்திரங்களில் கிடைக்கும் வட்டியும் முதலீடு செய்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. அது மட்டுமின்றி, நிதியங்கள் தம்மிடம் இருக்கும் பங்குகளை விற்பதால் கிடைக்கும் லாபம், முதலீட்டாளர்கள் தங்கள் பரஸ்பர நிதி முதலீடுகளை நிகர சொத்து மதிப்பினை(Net Asset Value-NAV) விடக் குறைவான விலையில் (Discount) செய்வதால் கிடைக்கும் லாபம் இவையும் பரஸ்பர நிதியங்களில் செய்யும் முதலீடுகளை கவர்ச்சிகரமாக மாற்றுகின்றன.

பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால் என்ன பயன்?

சாதாரணமாக நாமே நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால் கீழ்க்கண்ட பயன்கள் விளைகின்றன.

பயன் ஒன்று: அபாயக்குறைவு. எந்த முதலீடாக இருந்தாலும் அதில் கொஞ்சம் ஆபத்து (Risk) இருக்கத்தான் செய்யும். ரிஸ்க் என்பதே இல்லாத முதலீடு எதுவுமே கிடையாது. ஆனால், நீங்கள் பங்குகளில் முதலீடு செய்கையில் பல்வேறு விதமான பங்குகளில் உங்களால் ஈடுபட முடியாது. அதாவது பரவல் (Diversification) குறைவு. அது ரிஸ்க்கை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் பரஸ்பர நிதியங்களில் நீங்கள் முதலீடு செய்யும்பொழுது, உங்கள் பணமும், உங்களைப் போன்ற பல முதலீட்டாளர்களின் பணத்துடன் சேர்ந்து பல வகை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இதன் காரணமாக உங்கள் பணத்தின் மீதான ரிஸ்க் குறைகிறது

பயன் இரண்டு: திறமையும் அனுபவமும் மிக்க நிதி நிர்வாகம். நீங்கள் உங்கள் பணத்தை எந்தப் பங்கில் முதலீடு செய்வது என்று தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தை சிறந்த, லாபம் தரக்கூடிய, நம்பிக்கைக்குரிய பங்குகளில் முதலீடு செய்வது பரஸ்பர நிதி நிறுவனங்களில் உள்ள நிதி நிர்வாகிகளின் பொறுப்பாகி விடுகிறது.

பயன் மூன்று: சிறிய அளவு முதலீடுகள். சிறிய முதலீடாக இருப்பின் பல விதமான பங்குகளில், பல நிறுவனங்களில் முதலீடு செய்ய இயலாது. அதற்கு நிறையப் பணம் தேவைப்படும். பரஸ்பர நிதியங்களில் நீங்கள் எவ்வளவு சிறிய அளவு தொகையையும் முதலீடு செய்ய இயலும். அத்துடன் சில பரஸ்பர நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது

பரஸ்பர முதலீடுகளின் வகைகள்:

பரஸ்பர நிதியில் செய்யப்படும் முதலீடுகளைப் பொதுவாக இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை - சமபங்கு நிதி (Equity Share Funds), நிலையான வருமானம் தருபவை (Fixed Income Funds)
சமபங்கு நிதி என்பது பல நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்யப்படுவது. இப்பங்குகள் கொஞ்சம் அபாயகரமானவை எனினும், இதன் பரவல் (Diversification) காரணமாக, பொதுவாக நல்ல இலாபமீட்டக் கூடியவையாகவே திகழ்கின்றன. இவற்றின் இரண்டு உட்பிரிவுகள் சமநிலைப்பங்கு (Balance Fund) மற்றும் சிறப்பம்சப் பங்குகள் (Speciality Fund). சமநிலைப்பங்கு என்பது, சரியான விகிதத்தில் பங்குகளிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வதாகும். சிறப்பம்சப் பங்குகள் என்பது ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கில் மட்டும் முதலீடு செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது. சில பரஸ்பர முதலீடு நிறுவனங்கள், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் மட்டும் முதலீடு செய்வது, புகையிலை, மது முதலியவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருப்பது என்று சமூக உணர்வுடன் இணைந்த முதலீடுகளை மேற்கொள்கின்றன.

நிலையான வருமானம் தரும் பரஸ்பர நிதி முதலீடுகள்: பங்குகளில் முதலீடு செய்யாமல், திரட்டிய நிதியை அரசு மற்றும் தரமான நிறுவனங்களில் கடன் பத்திரங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. இதனால் கிடைக்கும் வட்டியானது மாதாமாதம் இத்தகைய முதலீடுகளில் பணம் போட்ட முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது.

இவை தவிர, குறுகிய கால கருவூல வரைவு (Treasury Bill), பணச்சந்தை முதலீடுகள் (Money Market Instruments) குறியீட்டு நிதி (Index Fund ) என்று மேலும் வகைகள் உள்ளன.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் குறைபாடுகள்:

கட்டணங்கள்: நேரடியாக நாமே முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கையில் லாபம் குறைவது உண்டு. ஏனெனில், நாம் பலவிதமான கட்டணங்களைச் செலுத்த நேரிடுகிறது.
நிதி நிறுவனங்களில் உண்மையாகவே அனுபவமும் திறனும் நிறைந்த நிதி நிர்வாகிகள்தான் இருக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது.சரியான முறையில் நிர்வகிக்கப் படாத பரஸ்பர நிதிகளில் செய்யப்படும் முதலீடுகள் சரியான அளவு லாபத்தைக் கொடுப்பதில்லை. எனவே நல்ல தரமான, அனுபவமுள்ள நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்வது அவசியம். பரஸ்பர நிதிகள் குறித்து மேலும் சில தகவல்களைத் தொடரும் கட்டுரைகளில் காண்போம்.

 

- பாலகார்த்திகா

குறிப்பு: இக்கட்டுரையில் இயன்றவரை தமிழ்ப்படுத்திய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய அல்லது சரியான வேறு தமிழ்ச்சொற்கள் சுட்டிக்காட்டப்படுமிடத்து அவை பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2009 20:56 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
பரஸ்பர நிதிகள் குறித்து
1 சனிக்கிழமை, 05 டிசம்பர் 2009 12:18
குருத்து
கட்டுரை எளிமையாக புரியும் படி இருக்கிறது. மற்றபடி, சில கூடுதலான விவரங்களும் சொன்னால், உதவியாய் இருக்கும். பரஸ்பர நிதிகள் மூழ்காது என வாத்துப்படம் போடுகிறார்களே! உண்மையா! இந்த மாபெரும் பொருளாதார நெருக்கடியில்... உலகம் முழுவதும் பங்குச் சந்தை அடிவாங்கியது. இதில் பரஸ்பர நிதிகளின் நிலை என்னவாயிற்று? தொடர்ந்து எழுதுங்கள். நானும் தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.

வாசகர் கருத்துக்கள், category: "வணிகம்"

detail of A toZ பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
SPECULATION பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
about broking office பங்குச் சந்தையின் வகைகள்
பஙுசந்தை பங்குச் சந்தையின் வகைகள்
basic about thepanku santhai பங்குச் சந்தையின் வகைகள்
use ful பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்குச் சந்தையில் முதலீடு சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
best stock brockers company பங்குச் சந்தையின் வகைகள்
Stock Market-How to win? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 82 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை