Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

பங்கு வணிகத்தில் செய்யும் பொதுவான தவறுகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள்

தமக்கென ஒரு செயல் திட்டம் வகுக்காமை, தாம் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமை, அளவுக்கு அதிகமான துணிகரமான முதலீடுகளில் ஈடுபடுதல், யாராவது ஏதாவது கூறுவதை நம்பி சந்தையில் இறங்குவது முதலிய பல தவறுகளைப் பற்றி சென்ற கட்டுரையில் கண்டோம். நாள் வணிகத்தில் (Day Trading) ஈடுபடுபவர்கள் தொடக்கத்தில் செய்யும் தவறுகள் பற்றி மேலும் கொஞ்சம் பார்க்கலாம்.


அனுபவமும், பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் புதிதாக பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள், எளிதில் நட்டமடைந்து விடுகின்றனர். ஏன் தெரியுமா?

எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளாமை: நாள் வணிகத்தில் (Day Trading) 'Stop Loss' என்று ஒன்று உண்டு. இந்த இந்தப் பங்குகளை வாங்கலாம்/விற்கலாம் என்று ஆலோசனை கூறும் மையங்கள், பங்குகள் இந்த அளவு வரை விலை ஏறலாம் (கரடிச் சந்தைப் போக்கின்பொழுது, Short Selling செய்வதானால், இந்த அளவு வரை விலை இறங்கும்) என்று கூறுவர்.அதே சமயத்தில் யூகங்கள் பொய்த்து, ஒரு குறிப்பிட்ட பங்கின் விலையானது, ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் சரியுமானால், மடமடவெனப் பங்கின் விலை மென்மேலும் சரியத் தொடங்கும். அதே போல், கரடிச் சந்தைப் போக்கின்பொழுது, பங்கின் விலை, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயருமானால் தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்லும். அந்த அளவினை'Stop Loss' என்பர். பங்கு வணிகத்தில் ஈடுபடுபவருக்கு அந்த 'Stop Loss' குறித்த தெளிவு வேண்டும். அத்தகைய குறிப்பிட்ட அளவினை, பங்கின் விலை தொடுகையில், நாம் நம் பங்கை விற்று ( அல்லது வாங்கி) விடவேண்டும். அதே போல், நம்முடைய தாங்கும் சக்தியைப் பற்றியும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். நம்மால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும், எந்த அளவு வரை நட்டத்தைத் தாங்கமுடியும் என்றும் முன் கூட்டியே யோசித்து முடிவு செய்து தமக்கென்று ஒரு செயல் திட்டத்தினை வகுத்து அதன் படி செயல்படுதல் வேண்டும். இவ்வாறு செய்யாமையினாலேயே பலர் நட்டமடைகின்றனர்.

சில சமயங்களில் பேராசையும், சில சமயங்களில் தேவையற்ற பீதியும் நட்டத்திற்குக் காரணமாகி விடுகிறது. நாம் ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் கிடைக்கும் என நினைத்துக்கொண்டு ஒரு பங்கினை வாங்குகிறோம்.அந்த அளவுக்கோ, அதைவிட சற்று அதிகமாகவோ உயர்ந்தவுடன் விற்று லாபம் பார்ப்பதே நல்லது. அந்தக்கட்டத்தில் விலை நாம் நினைத்த அளவு உயர்ந்ததும், மேலும் மேலும் உயருமென்று எதிர்பார்த்துக் காத்திருந்தால், பலன் எதிர்மறையாகிவிட வாய்ப்புண்டு. என் நண்பர் ஒருவர், விலை உயர உயர மேலும் மேலும் ஏறும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார். உடனிருந்தவர்களும், இப்பொழுது விற்கவேண்டாம் இன்னும் ஏறும் என்று தவறாக யோசனை சொன்னார்கள். பங்குகள் விலை திடீரெனச் சரிந்துவிட்டது. கிட்டத்தட்ட வெறும் காகிதத்திற்கு ஈடாகிவிட்டது அந்தப் பங்குகள். எனவே பேராசை பெருநட்டம் என்பதை மனதில் கொள்வது முக்கியம்.

கணிணி மூலம் பங்கு விற்பனை செய்யத் தொடங்கும் கற்றுக்குட்டிகள் தொடக்கத்தில் எதிர்பாராத விதமாக தவறான ஆணைகளைத் தந்து விடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். விற்கச் சொல்லுவதற்குப் பதில் வாங்கச் சொல்லியோ அல்லது தவறான பங்கு எண்ணிக்கைகளைக் கொடுத்துவிடவோ அதிக வாய்ப்பு உண்டு. எனவே கவனமாக இருப்பது அவசியம். சிலர் ஏற்கனவே பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ள தமது நண்பர்கள் அல்லது உறவினர்கள் மீது கண்மூடித் தனமாக நம்பிக்கை வைத்து அவர்கள் வாங்கியுள்ள பங்குகளை வாங்குவதும், அவர்களுடைய ஆலோசனைகளையே கேட்பதுமாக இருப்பர். இவர்களுக்கு யோசனை சொல்பவர்களே தேவையான தெளிவு இல்லாதவர்களாக இருந்தால் இவர்களும் சேர்ந்து நட்டப்பட வேண்டி வரும். அது மட்டுமின்றி தேவையில்லாத மனக்கசப்பும் உருவாகும்.

நிறுவனங்களின் தன்மையைப் பார்த்தும், சந்தையில் அதற்கான தேவையைப் பார்த்தும் பங்குகளை வாங்காமல், ஏதோ தமக்குப் பரிச்சயமான / புகழ் பெற்ற நிறுவனம் என்பதற்காகப் பங்குகளை வாங்குவது தவறானது. தரமான நிறுவனங்களின் பங்குகளை வாங்காமல், குறுகிய காலத்தில் நிறைய லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் Penny Stocks எனப்படும் விலை மலிவான, சிறிய அல்லது புதிய நிறுவனங்களின் பங்குகளை ஏராளமாக வாங்கிப் போடுவது ஆபத்தானது. அதே சமயம், மிகக் குறைந்த லாபமே போதும் என்று நினைத்து அவசரப்பட்டு பங்குகளை விற்றுவிடுவதும் சரியல்ல. சொல்லப் போனால் திருவள்ளுவர் கூறும்
'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.'
என்ற குறளைப் போல, சந்தை சாதகமாக இல்லாதபொழுது, கொக்கு மீனுக்காகக் காத்திருப்பது போல் காத்திருக்கும் பொறுமையும், சாதகமான நேரம் வரும்பொழுது, தாமதமின்றி கொக்கு மீனைக் கவ்வுவது போல், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் சாமார்த்தியமும் அவசியம்.

இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். தாங்கள் நம்பி வாங்கிய பங்கின் விலை எவ்வளவு சரிந்தாலும் அதை விற்காமல், மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்று நம்பிக்கொண்டே இருப்பார்கள். தாங்கள் எடுத்த முடிவு தவறாகப் போகாது என்ற அளவு கடந்த நம்பிக்கையே அதற்குக் காரணம். தான் நல்ல லாபம் கிடைக்கும் என்று நம்பி வாங்குகின்ற பங்குகள், நினைத்தபடி செயல்படவில்லை எனில் அதற்குக் காரணம் என்ன என்பதை அறிந்து, தேவைப்படுமானால், சிறிய நட்டம் வந்தாலும் பரவாயில்லை என்று விற்றுவிடுவதே அறிவுடைய செயல். இன்னும் சிலரோ, சிறு அளவு நட்டம் வந்துவிட்டாலும் மனமுடைந்து, எல்லாப் பங்குகளையும் விற்று அவசியமில்லாமல் நட்டத்தை ஏற்றுக் கொள்வர். இப்படித் தப்பு மேல் தப்பாகச் செய்துவிட்டு, சந்தையில் பணத்தை இழந்துவிட்டு வருந்துவோர் பலர். சந்தையின் முக்கியமான ஒரு குணம் - உணர்ச்சிமேலீட்டின் காரணமாக ஊசலாடுவது. சந்தையில் லாபம் பார்க்க விரும்புபவருக்கு மிகத் தேவையான தகுதி, உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக விற்பனை மேற்கொள்வது. இது இருந்தாலே பாதி வெற்றிதான். சந்தையின் அடுத்த குணம் - எதிர்பாராத மாற்றங்கள். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவருக்குத் தேவை -எந்தச் சூழலையும் தனக்குச் சாதகமாக மாற்றக் கூடிய நுண்ணறிவு.

இது இரண்டும் உங்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அல்லது வளர்த்துக்கொள்ள இயலும் என்று நம்புகிறீர்களா? துணிந்து பங்குச் சந்தையில் இறங்குங்கள், வெற்றி காணலாம்.

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2009 08:56 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
பங்குவர்தகம்
1 வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009 18:48
பொன்னுவெல்
நன்றீ தினசரி வர்தகம் பட்ரிய தகவலுகு எந்த தலதை அனுகுவது ? எதனை வகையன பங்கு வர்தகம் உல்லது அதை பட்றீய தகவலுகு எந்த டதலதை அனுகுவது நன்றீ

வாசகர் கருத்துக்கள், category: "வணிகம்"

detail of A toZ பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
SPECULATION பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
about broking office பங்குச் சந்தையின் வகைகள்
பஙுசந்தை பங்குச் சந்தையின் வகைகள்
basic about thepanku santhai பங்குச் சந்தையின் வகைகள்
use ful பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்குச் சந்தையில் முதலீடு சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
best stock brockers company பங்குச் சந்தையின் வகைகள்
Stock Market-How to win? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 87 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை