பங்குச்சந்தையில் ஆதாயம் காண்பது அத்தனை சுலபமல்ல என்றும், அது குறித்த அறிவினை வளர்த்துக்கொள்வது நட்டமடையாமல் தடுக்க உதவும் என்றும் சென்ற கட்டுரையில் கண்டோம். இதில், பொதுவாக, பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
முதலீடு, விற்பனை குறித்த தெளிவின்மை:
தான் போக வேண்டிய ஊர் எது என்றே தெரியாதவர், பயணத்தை வெற்றிகரமாக நடத்துவது முடிகிற காரியமா?
பலர் 'நாம் எத்தகைய முதலீடு செய்ய வேண்டும்? எந்த அளவுக்கு துணிகரமான முதலீட்டில் (Risky Investment) கால் வைக்கலாம்? இழப்பைத் தாங்கும் சக்தி எவ்வளவு? எந்த வகையான பங்குகளில் ஈடுபட விரும்புகிறோம்? நீண்ட கால முதலீடா, குறுகிய கால முதலீடா, அல்லது பங்கு வணிகம் செய்து லாபம் ஈட்ட முயலலாமா?' என்ற பலவகையான கேள்விகளையும் தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டு, தக்க விடையுடன் பங்கு வணிகத்தில் இறங்குவதில்லை. ஏதோ, யாரோ என்னமோ சொன்னார்கள் என்றோ, லாபம் அடைந்த சிலரைப் பார்த்துவிட்டு, தானும் அவ்வாறே செய்யலாம் என்றோ நினைத்துக்கொண்டு ஆழம் தெரியாமல் காலை விட்டு அவதிப்பட்டவர்கள்/படுபவர்கள் பலர்.
பங்குகளில் முதலீடு செய்பவர்களாக இருந்தால், தாம் எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க நினைக்கிறாரோ, அந்நிறுவனத்தின் நிர்வாகம்(Management), கடந்த கால செயல்பாடுகள்(Past Performance), நிறுவனத்தின் உள் மதிப்பு (Intrinsic value) முதலியவை குறித்து ஆய்வு செய்வது அவசியம். அது இல்லாமல், பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போல், சந்தையின் ஏற்ற இறக்கத்தால் கவரப்பட்டு, தன்னிச்சையாக ஏதாவது பங்குகளை அடிக்கடி விற்றும் வாங்கியும் பரிவர்த்தனை செய்வாரானால், வெகு விரைவிலேயே முதலை இழப்பது உறுதி.
பங்கு வணிகம் செய்ய விரும்புகிறவர்கள், சந்தையின் போக்கை வைத்து, சந்தையின் நாடியைக் கணிக்கக் கற்றுக்கொள்வது அவசியம். எந்த நேரத்தில் சந்தை மேலே போகும், அது எப்போது இறங்கும் என்பது குறித்து அறிந்து, துடிப்பும் திறமையுமாகச் செயல் படத்தெரியாமல், எவரோ சொல்லும் யோசனையை நம்பிக்கொண்டு இறங்குவது என்பது, பிறர் நீந்துவதைப் பார்த்து ஆசைப்பட்டு நீச்சல் தெரியாதவனும் ஆற்றில் இறங்குவது போன்றது.
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் எதனால், எப்பொழுது ஏற்படுகிறது என்பதை தர்க்கவியல் ரீதியில்(Logical) அணுகி அறிய முடிவதில்லை. ஏனெனில், பெரும்பாலும் பங்குச்சந்தையானது உணர்ச்சிகளாலும்(Emotions), நம்பிக்கை அல்லது அவநம்பிக்கைகளால் உந்தப்படுகிறது. பெரும்பாலான பல முதலீட்டாளர்கள், பிறர் முடிவுகளை அடிப்படையாக வைத்தே தமது வணிக முடிவுகளை எடுக்கின்றனர். அது தவறு. பிறரைப் பார்த்து, அவர்கள் செய்வதுபோல் செய்ய முயலும்பொழுது, காலம் கடந்து விடக்கூடும்.
கணக்கில் ஏற்படும் தவறுகள்:
பங்கு வணிகம் செய்பவர்கள், தமது பரிவர்த்தனைகளுக்கே ஏற்ப தாம் கணக்கு வைத்திருக்கும் பங்கு முகவர்களுக்கு, கட்டணம்/தரகுத்தொகை (Fees/Brokerage) செலுத்த வேண்டும். மேலும் பங்கு வணிகத்தில் கிடைக்கும் ஆதாயத்துக்கு சில வகை வரிகளும் செலுத்த வேண்டும். சின்னச் சின்ன ஆதாயங்களைப் பெறுவதற்காக அதிக அளவில் வர்த்தகம் செய்பவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, பங்குகளின் விலை ரூ.1000 என வாங்கி வைத்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து ரூ.1005க்கு விற்பதாகக் கொள்வோம். அவர் தான் ஒரு பங்கிற்கு ரூ.5 ஆதாயம் பெற்றிருப்பதாக நினைத்துக் கொள்ளலாம். இந்தப் பங்குகளை வாங்கும் பொழுதும், மீண்டும் விற்கும்பொழுதும் அப்பரிவத்தனைகளுக்காக அவர் செலுத்தும் தரகுத்தொகை மற்றும் வரிகள் அவர் பெற்ற லாபத்தைவிட அதிகமாகிவிடலாம். கூட்டிக்கழித்துப் பார்த்தால் அப்பரிவர்த்தனை நட்டத்தில் முடிந்திருப்பதாக அர்த்தமாகிறது அல்லவா? எனவே, நமது பரிவர்த்தனைகளின் பொழுது, நாம் செலுத்தும் கட்டணங்கள், சேவை வரிகள் போன்ற பலவற்றையும் மனதில் கொள்வது மிகவும் முக்கியமாகும். அதை மறந்துவிட்டு செயல்படுகையில், நாம் லாபம் என்று நினைத்த ஒன்று நட்டத்தில் முடிந்து விட வாய்ப்புண்டு.
அளவுக்கு மிஞ்சிய அபாயகர முதலீடுகள்:
சிலர் அசட்டுத்துணிச்சலுடன் பங்குச்சந்தையில் ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்வார்கள். எவ்வளவு தூரம் நம்மால் நட்டத்தைத் தாங்க முடியும் என்ற தெளிவு வேண்டும். மேலும், கூடிய வரையில் லாபம் அடையாவிட்டாலும், நட்டமடைவதைத் தவிர்க்க முயலவேண்டும். ஏனெனில், 50 சதவீத நட்டம் ஏற்படுமானால், நாம் போட்ட முதலை எடுக்கவே நமக்கு நூறு சதவீத லாபம் கிடைத்தாக வேண்டும் இல்லையா? பங்கு விற்பனையில் சிறந்து விளங்கும் உலகப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் திரு. வாரன் ப்ஃப்பெட் அவர்களின் கூற்றைக் கேளுங்கள். "The First Rule of Investing is don't lose money, the second rule is 'Don't forget Rule No.1". எந்த விளையாட்டாக இருந்தாலும், அதற்கென உள்ள விதிமுறைகளின் படி கவனமாக விளையாடுவது வெற்றியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆலோசனைகளை ஆலோசியுங்கள்:
இன்று பங்குச்சந்தையில் மக்களுக்கு இருக்கும் மோகத்தைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்க ஏராளமான பங்கு ஆலோசனை மையங்களும், புற்றீசல் போல் முளைத்துவிட்ட ஏராளமான இணையத்தளங்களும் முனைந்துவிட்டன. ஒவ்வொருவரும் தம் மனம் போன போக்கில் யோசனைகளை அள்ளி வழங்குகின்றனர். மக்களும் நம்பகமான தகவல்களுக்கும் போலித்தகவல்களுக்கும் வித்தியாசம் காண முடியாமல், பல சமயங்களில் தம் பணத்தைக் கோட்டை விட்டு விடுகின்றனர். இத்தகைய பங்குத் தகவல் ஆலோசனை தரும் நிறுவனங்களில் உறுப்பினராகச் சேருமுன், தீர யோசியுங்கள். நீங்களே சந்தைப் போக்கு குறித்த அறிவை வளர்த்துக்கொண்டு, உங்களுக்கான செயல் திட்டத்தை வகுப்பதே நல்லது. 'பிறக்கப்போவது ஆண்பிள்ளை, தப்பினால் பெண்பிள்ளை' என்கிற மாதிரி குத்துமதிப்பாக தகவல்களை அள்ளி வீசும் நிறுவனங்களில் மாட்டிக்கொண்டு இரையாகும் பல முதலீட்டாளர்களில் ஒருவராக மாறாமல் இருப்பது அவசியம்.
கடினமாக நாம் பல நாட்கள் உழைத்து, சம்பாதித்து சேமித்த பணத்தை,எளிதில் இழக்கலாமா? சந்தையில் நுழைபவர்கள் கவனமாக முதலீடு செய்வது மிக அவசியம். பணத்தைப் பெருக்க நினைத்து பங்குவணிகத்தில் ஈடுபடுபவர்கள் இன்னும் பல தவறுகளை இழைத்து, போட்ட முதலையே இழந்துவிடுகின்றனர். அவை குறித்து மேலும் தொடர்ந்து இப்பகுதியில் அலசலாம்.
--------------------------------------------------------------------------------------------------
கி.பாலகார்த்திகா








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















1200 South Avenue, Suite 203, Staten Island, New York 10314, United States...
இந்த trading company பற்றிய விபரங்கள் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.