Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

குறையையும் நிறையாக்கலாம்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

nothing-is-impossible-005ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான்.

சில மாதங்கள் கழிந்த பின்னும் அந்த ஆசிரியர் அவனுக்கு ஜூடோவின் ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே திரும்பத் திரும்ப மிக நுணுக்கமான முறையில் கற்றுத் தந்திருந்தார். அந்த சிறுவன் அந்தப் பயிற்சியை ஓரளவு நன்றாகவே கற்றுத் தேர்ந்த பின் ஆசிரியரிடம் சொன்னான். ”ஐயா எனக்கு நீங்கள் வேறு பயிற்சிகளையும் கற்றுத் தாருங்களேன்”

அந்த வயதான ஆசிரியர் “நீ இந்த ஒரு பயிற்சியை சிறு குறையும் இல்லாமல் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தால் அதுவே போதுமானது. இதைத் தவிர வேறு எந்த பயிற்சியும் நீ கற்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறி விட்டார். அந்த சிறுவனுக்கு அவர்  வேறு பயிற்சிகள் கற்றுத் தராமல் இருப்பது ஏமாற்றத்தைத் தந்த போதும் அவர் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தபடியால் அவர் கூறியபடி அந்த ஒரு பயிற்சியையே தொடர்ந்து மேலும் சில மாதங்கள் செய்து அதில் முழு ஆளுமை பெற்றான்.

அவன் அந்த ஒரு பயிற்சியில் ஒரு சிறு குறையும் இல்லாமல் முழுமையான ஆளுமை பெற்று விட்டான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின் அந்த வருடத்திய தேசிய ஜுடோ போட்டியில் அந்தச் சிறுவனைக் கலந்து கொள்ளச் செய்தார் அந்த ஆசிரியர். அந்த சிறுவனுக்கோ திகைப்பு தாளவில்லை. அந்த தேசியப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல திறமையான வீரர்கள் கலந்து கொள்வார்கள்.  அவனோ ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே முழுமையாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறான். ஜூடோவில் அவனுக்குக் கற்றுக் கொள்ள இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

“ஐயா எனக்கு அந்த ஒரு பயிற்சி தவிர வேறு எதுவும் தெரியாத நிலையில் தேசிய அளவு போட்டியில் எப்படி கலந்து கொள்வது?”

அப்போதும் அந்த ஆசிரியர் அவனுக்குச் சொன்னார். “உனக்கு அந்த ஒரு பயிற்சி போதும். உனக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உன் எதிரியிடம் இந்த ஆக்கிரமிப்பு முறையை பயன்படுத்து. மற்ற எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே”

அவர் அந்த அளவு உறுதியாக கூறிய பிறகு அவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் போட்டியில் கலந்து கொள்ள சம்மதித்தான். ஆசிரியர் அவனை போட்டிக்கு அழைத்துச் சென்றார். முதல் இரண்டு போட்டிகளில் அவர் சொன்னது போலவே செய்து அவன் மிக எளிதாக வென்று காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றான். அவனுக்கே அது அதிசயமாக இருந்தது.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. ஆனால் சிரமங்களுக்கு இடையில் அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்த போது அந்த ஆக்கிரமிப்பு முறையைப் பிரயோகித்து வென்று முன்னேறினான்.

இறுதிப் போட்டியில் அவனுக்கு எதிராக போட்டியிட்ட ஆள் வயதிலும், வலிமையிலும், திறமையிலும் அவனுக்கு மேற்பட்டவனாகவே இருந்தான். போட்டியில் ஆரம்பத்தில் அவனால் அந்த நபரை வெல்ல முடியவில்லை. அவனுடைய இடது கை இல்லாத குறையையும், படும் சிரமத்தையும் பார்த்த நடுவர்கள் இடைவேளையின் போது அவன் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள அனுமதி தருவதாகக் கூறினார்கள். அவனுடைய ஆசிரியரோ அதற்கு சம்மதிக்கவில்லை. “அவன் போட்டியில் தொடர்வான்” என்று உறுதியாகக் கூறினார்.

அவர் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் கண்ட அந்த சிறுவனுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது. இடைவேளைக்குப் பின் தொடர்ந்த போட்டியில் எதிராளி சற்று அசந்திருந்த போது தன் முழு பலத்தையும் திரட்டி அந்த ஆக்கிரமிப்பு முறையைப் பயன்படுத்தி எதிராளியை செயலிழக்க வைத்து வெற்றி பெற்றான். அவனுக்கே அந்த வெற்றி ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பதக்கத்தைப் பெற்ற போதும் அவனுக்கு பிரமிப்பு நீங்கவில்லை. வீடு திரும்புகையில் அவன் ஆசிரியரிடம் தன்னால் எப்படி அந்த ஒரு பயிற்சி மட்டும் கற்றுக் கொண்டு வெற்றி பெற முடிந்தது என்று கேட்டான்.

ஆசிரியர் சொன்னார். “அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, நீ அந்த ஒரு பயிற்சியில் குறைவில்லாமல் முழுமையாகப் பயிற்சி செய்திருக்கிறாய். இரண்டாவது, இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட எதிராளிக்கு ஒரே வழி தான் இருக்கிறது. அந்த வழி ஆக்கிரமிப்பவரின் இடது கையைப் பிடித்துக் கொள்வதில் தான் இருந்து தான் ஆரம்பிக்கிறது”

இடது கையை இல்லாதவன் ஆக்கிரமித்தால் அந்தப் பிடியில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. அந்த சிறுவனின் மிகப் பெரிய குறை மிகப் பெரிய பலமாகப் போய்விட்டது பாருங்கள்.

பல சந்தர்ப்பங்களில் குறைகள் வேறு விதத்தில் நிறைகளாக முடியும். சில குறைகள் இருப்பவர்கள் அதை ஈடுகட்ட முயற்சித்து அந்த குறையில்லாதவர்களை விடவும் அதிகமாக சாதித்து விடுவதை பல சமயங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. குருடு, செவிடு, ஊமை என்ற மூன்று ஊனங்களை உதாசீனப்படுத்தி விட்டு உலக அளவில் பெரும் சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

குறைகளை மீறி சாதிப்பதற்குத் தேவையான மிக முக்கியமான பண்பு தன்னிரக்கத்தோடு தளர்ந்து ஒடுங்கி விடாமையே. தன்னிரக்கத்தில் ஆரம்பித்து அடுத்தவர் இரக்கத்தையும் தேடி நிற்பவர்கள் வாழ்க்கை தேக்கமடைந்து விடுகிறது. ’எனக்கு இந்தக் குறை இருப்பதால் நான் இனி ஒன்றும் செய்வதற்கில்லை’ என்ற அறிவிப்புக்கு குடும்பத்தினரும், மற்றவர்களும் கூட அங்கீகாரம் தந்து ஆதரிக்க ஆரம்பிக்கும் போது அந்த மனிதரின் முன்னேற்றம் முடங்கிப் போகிறது.

எனவே உடலின் குறைகளையோ, வசதி வாய்ப்புகளின் குறைகளையோ கண்டு தளர்ந்து விடாதீர்கள். அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை மட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள். சில குறைகளை இன்னொரு கோணத்தில் பார்த்தீர்களானால் அதுவே வேறு சில முன்னேற்றங்களுக்கு அனுகூலமாகலாம். உண்மையான குறை மனதின் குறைகளே. வெளிப்புறக் குறைகள் தோற்றத்தில் இருக்குமளவு நம் முன்னேற்றத்தை தடுக்க சக்தி படைத்தவை அல்ல. இதை தங்களுக்கு இருக்கும் குறைகளைப் பெரிதாக நினைக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதே போல அவர்கள் நம்பிக்கை இழக்கும் தருணங்களில் நண்பர்களும், உறவினர்களும் அந்த அவநம்பிக்கைக்கு துணை போகாமல் தங்கள் அன்பாலும் நம்பிக்கையாலும் அவர்களைத் தாக்குப் பிடிக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே குறைகள் ஒருவரைக் குறைத்து விடாமல் நிறைகளாகப் பரிணமிக்க முடியும்.

 

-என்.கணேசன்

 

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
kuraiyaiyum niraiyaakkalaam
1 திங்கட்கிழமை, 10 ஜனவரி 2011 17:33
Kanapathippillai
very good article for encouragement

வாசகர் கருத்துக்கள், category: "பொதுக்கல்வி"

HOW TO PUT IN EMAI ADDRES கூகிளில் தமிழ்மொழி மொழிபெயர்ப்பு!( படங்கள் இணைப்பு)
அருமையான பதிவு. எல்லாம் தகரும் தருணங்களில்....!
எல்லாம் தகரும் தருணங்களில் எல்லாம் தகரும் தருணங்களில்....!
இளைஞர்க்ளுக்கு வழிகாட்டி இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி
இளையவருக்கு ஒருவழிகாட்டியாக இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி
kuraiyaiyum niraiyaakkalaam குறையையும் நிறையாக்கலாம்!
சோம்பல் ஒரு சோக ராணி சோம்பல் ஒரு சோக காரணி
நல்ல கதை சோம்பல் ஒரு சோக காரணி
Very Intersting article கை கொடுக்கும் கை
Very Intersting கை கொடுக்கும் கை

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 87 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை