Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

எண்ணம் போல் வாழ்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
think-positive02நமது கிராமப் பகுதிகளில் பெரியவர்களை வணங்கும்பொழுது, "நன்றாக இரு" என்று வாழ்த்துவதை விட, "உன் எண்ணம்போல நன்றாக இரு" என்று வாழ்த்துவதைத்தான் அதிகம் காணலாம். மேம்போக்காக கவனிக்கும்பொழுது " நீ விரும்புவது எல்லாம் உனக்குக் கிடைக்கட்டும்" என்று பொருள் கொள்ளுவார்கள். ஆனால், இதன் உண்மையான கருத்து, "உன் மனத்தில் நீ எந்த விதமான எண்ணங்களைக் கொண்டிருக்கிறாயோ, அதுவே நீயாவாய்" ( You are your thoughts) என்ற புத்தரின் பொன்மொழி போன்றது.

"Law of Attraction" அதாவது ஈர்த்தல் விதி என்று மேலை நாடுகளில் இன்று பிரபலமாக இருக்கும் இந்தக் கோட்பாடுதான், நமது முன்னோர்களால் காலம் காலமாக அறிவுறுத்தப் பட்டு வருகிறது.

ஈர்த்தல் விதி என்றால் என்ன?

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ஈடான ஒரு எதிர்வினை உண்டு என்னும் நியூட்டனின் விதிபோல், நாம் நினைக்கும் ஒவ்வொரு நினைப்பிற்கும் ஒரு விளைவு உள்ளது. நாம் எந்த நிலையில் இன்று இருக்கிறோமோ, அதற்குக் காரணம் நமது எண்ண அலைகள்தான். நாம் எதைக்குறித்து எப்பொழுதும் சிந்திக்கிறோமோ, அதுவே நம்மை வந்தடைகிறது. ஏனெனில், நம் மனதின் எண்ண அலைகள் வலிமையானவை. அவை இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள அதே தன்மையை உடைய அலைகளை ஈர்க்க வல்லவை என்று இந்தக் கோட்பாடு கருதுகிறது.

'நம்முடன் இருப்பவர்கள், நம்மிடம் உள்ள பொருட்கள், நாம் செய்யும் பணி போன்ற எல்லாவற்றையும் தீர்மானிப்பது நமது எண்ணங்கள்தான்' என்றால் நாம் விரும்புவது, விரும்பாதது எல்லாமே நம்முடன் இருக்கின்றனவே! யார் வறுமையையும், தனிமையையும் துன்பங்களையும் விரும்புகிறார்கள்! இக்கோட்பாடு உண்மையானால், உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக அல்லவா இருக்கவேண்டும்? உலகில் எவரேனும் பிரச்னைகள் வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா என்ன? என்று ஐயம் தோன்றுகிறது அல்லவா?

ரோண்டா பைர்னே (Rhonda Byrne) என்பவர் எழுதிய 'The Secret' என்ற நூலின் அடிப்படையில் இதே பெயரில் 2006ம் ஆண்டு, ஒரு திரைப்படம் வெளிவந்தது. அது முதல், இது குறித்து பலரும் பல நூல்களை எழுதிவிட்டார்கள். பலர், 'உங்கள் வாழ்க்கையினை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்' என்ற அறைகூவலுடன் பல பயிற்சி வகுப்புக்களை நேர்முகமாகவும், இணைத்தளம் மூலமாகவும் நடத்தி வருகின்றனர்.

இந்தக் கோட்பாடு ஒன்றும் அத்தனை புதியதில்லை, குறிப்பாக, தமிழினத்திற்கு இது ஒரு புதுமையே அன்று. திருவள்ளுவரின் தமிழ் மறையே இதற்குச் சான்றாகும். ஊக்கமுடைமை அதிகாரத்தின் இரு குறள்கள், இக்கோட்பாட்டை எடுத்தியம்புகின்றன.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு' - (குறள் எண் 595)

நீரில் உள்ள ஆம்பல் மலரின் தண்டின் நீளமானது, நீர்மட்டத்தால் தீர்மானிக்கப் படுகிறது. நீர்மட்டம் உயர உயர, தண்டின் நீளமும் அதிகரிக்கும். நீர்மட்டம் இறங்கினால், தண்டின் நீளமும் குறைந்துகொண்டே வரும். அதைப்போலவே, மனிதர்கள் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் அவரது மனத்தை, அதாவது அவர்களது எண்ணத்தைப் பொறுத்ததுதான். என்று கூறும் அவர் தமது அடுத்த குறளிலும் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று இதையே வலியுறுத்துகிறார்.

நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி?

ஈர்த்தல் விதி, கேட்பதற்கு மிக எளிமையானதுதான், கடைப்பிடிக்க எளிதுதான். ஆனாலும், ஒருவர் அதைப் பின்பற்றவேண்டும் எனில் அந்த விதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்மறையாக எண்ணங்களை விடுத்து, நல்லவற்றையே சிந்திக்கவேண்டும்.

ஈர்த்தல் விதியின் மூன்று படிகள்

கேளுங்கள்: 'தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்' என்கிறது விவிலியம். ஆம், நமக்கு என்ன தேவை என்று உணர்ந்து கொள்வதுதான், இந்த ஈர்த்தல் விதியின் முதல்படி. 'அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்' என்ற பழமொழி நினைவு வருகிறதா? நமக்கு என்ன தேவையென்று நாம் அறிந்துகொண்டால்தான், இந்தப் பிரபஞ்சம் அதை நாம் அடைய உதவி செய்யும் என்று இந்த விதியினைப் பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.

நம்புங்கள்: நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புங்கள். சந்தேகப் படாதீர்கள். நீங்கள் எதை அதிகமான் நினைக்கிறீர்களோ அதுவே வந்தடையும் என்பதுதான் இதன் இரண்டாவது விதி. பல நேரங்களில் "நான் கிளம்பும்போதே நினைத்தேன், இந்த வேலை சரியாக நடக்காது என்று" , "வண்டி நடுவழியில் தகராறு செய்யும் என்று முதலிலேயே தோன்றியது" என்றெல்லாம் நாம் கூறுவது உண்டு, அதற்குக் காரணம், நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் சக்தி நமக்கு இருக்கிறது என்பதா? கண்டிப்பாக இல்லை, நமது எதிர்மறை எண்ணமானது, அத்தகைய விளைவை உருவாக்கிவிட்டது என்றுதான் அர்த்தம். வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புபவர்கள் வெற்றி அடைவதர்கும், தோல்வியடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுகிறவர்கள் தோல்வி அடைவதற்கும், அவர்களால் ஈர்க்கப்படும் அலைகளே காரணமாகின்றன.

அடையுங்கள் : பெரும்பாலான சமயங்களில், நாம் விரும்புவது நம்மை வந்தடைகின்ற பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதுண்டு. நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள், அதன் வேலை நேரம், சம்பளம் இவை எல்லாம் உங்களுக்கு ஒத்துவரவில்லை. உங்களுக்கு அதைவிட ஒரு நல்ல வேலை கிடைக்கும் பொழுது, 'புதிய வேலை எப்படி இருக்குமோ! இது பழக்கப்பட்ட இடம், நண்பர்கள் இருக்கிறார்கள். புதிய இடம் நமக்கு ஒத்து வராவிட்டால் என்ன செய்வது?' என்பது போன்ற தயக்கங்கள் உண்டாவதால் நாம் பல வாய்ப்புக்களை இழக்கிறோம். சொந்தத் தொழில் தொடங்க விரும்பும் பலர், தம்மிடம் அதற்கான தகுதியும் திறமையும் இருந்தும், இலாபம் கிடைக்காவிடில் என்ன செய்வது, நட்டமாகிவிட்டால் என்ன செய்வது என்று வாய்ப்புக் கிடைத்தாலும் அதை நழுவ விடுவதுண்டு. அவ்வாறின்றி, நாம் விரும்புவதை, இந்த உலகம் நம்மிடம் அளிக்கும்பொழுது, அதை இரு கரம் நீட்டிப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.

'ஓம் சாந்தி ஓம்' என்னும் இந்தித் திரைப்படத்தில் ' நீங்கள் ஒன்றை விரும்பி அடைய நினைத்தால், இந்த உலகம், அதை உங்களிடம் கொடுக்க முயலும்' என்ற பொருளில் ஒரு வசனம் வரும்.

ஆம்...... நீங்கள் என்ன ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்கள் கையில்தான்...... இல்லை இல்லை.... உங்கள் மனத்தில்தான் இருக்கிறது.

இந்த 'ஈர்த்தல் விதி'யின் வழிமுறைகள், பயன்பாடுகள் ஆகியவை குறித்து மேலும் பேசுவோம்.....
 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "பொதுக்கல்வி"

HOW TO PUT IN EMAI ADDRES கூகிளில் தமிழ்மொழி மொழிபெயர்ப்பு!( படங்கள் இணைப்பு)
அருமையான பதிவு. எல்லாம் தகரும் தருணங்களில்....!
எல்லாம் தகரும் தருணங்களில் எல்லாம் தகரும் தருணங்களில்....!
இளைஞர்க்ளுக்கு வழிகாட்டி இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி
இளையவருக்கு ஒருவழிகாட்டியாக இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி
kuraiyaiyum niraiyaakkalaam குறையையும் நிறையாக்கலாம்!
சோம்பல் ஒரு சோக ராணி சோம்பல் ஒரு சோக காரணி
நல்ல கதை சோம்பல் ஒரு சோக காரணி
Very Intersting article கை கொடுக்கும் கை
Very Intersting கை கொடுக்கும் கை

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 85 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை