ஃபெங் சுயி என்ற சொல்லிற்கு 'காற்றும் நீரும்' என்று பொருள். வாழ்வின் அடிப்படை ஆற்றல்கள் என்று இவையிரண்டும் கருதப்படுகின்றன. ஆதிகாலச் சீனர்களின் இயற்கை குறித்த தத்துவங்களும், மனோதத்துவமும் இணைந்த வாழ்க்கை முறையினை அடிப்படையாகக் கொண்டது ஃபெங் சுயி.
இந்தப் பரந்த அண்டங்கள், பேரண்டங்கள் எங்கிலும் பரவியுள்ள ஆற்றலின் இயக்கத்திற்கும், நம் வாழுமிடத்திற்கும் உள்ள தொடர்பினையும், நாம் நம் கட்டிடங்களை அமைக்கும் முறை, வீட்டிற்குள் இருக்கும் பொருட்கள் இவற்றில் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் கூறும் இயல் ஃபெங் சுயி எனலாம்.
ஃபெங் சுயி கூறும் 'சி' (Chi) என்ற ஆற்றல் ஒரு மனிதனின் வாழ்வையும் அவன் சுற்றுச்சூழலையும் இணைக்கிறது. அச்சூழல்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் மாற்றுகையில் அவன் வாழ்க்கையிலும் மாற்றங்கள் தோன்றுகின்றன. இந்தச் 'சி' என்ற ஆற்றலே ஒரு மனிதனின் நற்பேறுகளையும், அவன் வெற்றியையும் தீர்மானிக்கிறது என்று ஃபெங் சுயி தத்துவம் கருதுகிறது.
'சி' யானது ஷெங் சி (Sheng Chi), ஷா சி (Sha Chi) என இருவகைப்படும். 'சி' யானது ஒரு மனிதனின் வாழ்வில்ஆற்றொழுக்குப்போல் சீராகவும் சமநிலையாகவும் இருக்குமானால் அது ஷெங் சி எனக்கருதப்படுஅகிறது. இது நேர்மறையானது. ஒருவருக்குப் புதிய வாய்ப்புகள், வாழ்வில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், வளம் இவற்றை உண்டாக்கக் கூடியது. 'சி' சமச்சீரற்ற ஆற்றலாக, தடைகளை உடையதாக இருக்க நேர்ந்தால், நோய், துன்பம், தோல்விகள் இவற்றுக்குக் காரணமாகி விடும். இச்சக்தியை 'ஷா சி' அதாவது 'எதிர்மறை ஆற்றல்' என்று கூறலாம்.
ஃபெங் சுயி' யின் அடிப்படைக் கோட்பாடுகள்:
1. முதலில் இந்தக் கோட்பாடுகளின் மீது முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும். இந்த விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் இறைவனிடம் உங்கள் தேவைகளை எடுத்துரைக்கிறீர்கள். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியடையும் என்ற எண்ணம் வேண்டும்.
2. எதிர்மறையான சிந்தனைகளை உதறி, நேர்மறையான எண்ணங்களை மட்டுமே வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். நீங்கள் விரும்பும் இனிய வாழ்வு, வெற்றி இவற்றைக் குறித்து எண்ணமிடவேண்டுமே தவிர, கெடுதலான எண்ணங்களை வளர்க்கக் கூடாது. ஏனெனில், ஃபெங் சுயியின் அடிப்படையே, நேர்மறை எண்ணங்கள் நேர்மறை ஆற்றலையும், எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறைச் சக்தியையும் கவர்ந்து இழுக்கும் என்பதுதான்.
3. உங்களிடம் இருக்கும் ஒவ்வொன்றுக்கும், உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொன்றுக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் வளம் பெருகிக் கொண்டே இருக்கும்.
4. உங்கள் சுற்றுப்புறத்தைக் குறித்த விழிப்புணர்வுடன் இருங்கள். இயற்கையின் வழியில், இயற்கையுடன் இயைந்த வாழ்வை மேற்கொள்ளுங்கள்.
5. பெங் சுயி ஆற்றலின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் ஆற்றல் தங்குதடையின்றி இயங்கவேண்டுமானால், அதிக இடையூறுகள், தடங்கல்கள் இல்லாமல் இருக்கவேண்டும். அதாவது தேவையற்ற பொருட்கள், குப்பை கூளங்கள் இன்றி உங்கள் இருப்பிடம் சுத்தமாக இருத்தல் வேண்டும். அதிக அடைசலான மரச்சாமான்கள், பெரும் மேசைகள், சோஃபா முதலியவை இன்றி, (அவை இருப்பின் ஃபெங் சுயி விதிகளின் படி அவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.) அதிக வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் வீட்டினுள் நுழைகையில் தடைகள் இல்லாமல் இருப்பது அவசியம்.
6. ஒரு அறையில் யார் நுழைந்தாலும் அவர்களைப் பார்க்கின்ற வகையில் சாமான்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு வழி இல்லையெனில் அந்த அறையில் பெரும் கண்ணாடிகளை வைப்பதன்மூலம் இக்குறைபாட்டைச் சரி செய்ய இயலும்.
7. பொருட்கள் வைத்த இடத்திலேயே எப்பொழுதும் இருக்கக் கூடாது. அவ்வப்பொழுது இடமாற்றம் செய்வதன் மூலம் ஆற்றல் பரவ வழி பிறக்கும். மாற்றங்கள் என்பது மிக முக்கியம், மாற்றமில்லையெனில் அது தேக்க நிலையைக் குறிக்கிறது. எனவே வளர்ச்சி ஏற்படாது.
இவையெல்லாம் ஃபெங் சுயியின் அடிப்படை விதிகள்.
எந்தெந்த இடத்தில் வெளிச்சம் இருக்கவேண்டும், எந்தெந்தப் பிராணிகளை வளர்க்கவேண்டும், எந்தெந்த இடத்தில் எடை குறைவாகவோ, எடை அதிகமாகவோ இருக்கலாம், எங்கே எந்த வண்ணம் இருக்கவேண்டும் என்று பல விதிகள் ஃபெங் சுயி தத்துவத்தில் உண்டு. அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், வளம், திருமண வாழ்வு, படிப்பு, தொழில் முன்னேற்றம், மகிழ்ச்சி, அன்பான அமைதியான உறவு என்ற எல்லாம் கிடைக்கும் என்பது இந்தச் சீனமுறையின் நம்பிக்கை.
மேலும் இது 'யின்' (Yin which means Negetive) 'யாங்க்' (Yang - which means positive) என்ற இரட்டை நிலையின் கருத்துப்படிவத்தை வலியுறுத்துகிறது. இந்திய நாட்டின் கோட்பாடான பரமாத்மா, ஜீவாத்மா போல், இது 'விண்' 'மண்' என்ற இரட்டை நிலையை நம்புகிறது. உண்மைதானே, வாழ்வில் எப்பொழுதுமே, எல்லாமே இரட்டை நிலைதானே! இருள் ஒளி, இரவு பகல், பெண் ஆண், இன்பம் துன்பம் என்று எதுவுமே தனித்தியங்க இயலாது, ஒன்றையொன்று சார்ந்திருக்கக் கூடியவையே அல்லவா?
வாழ்க்கையில் எல்லாமே 'யின்' ஆகவோ 'யாங்க்' ஆகவோ இருக்க இயலாது. அப்படி இருப்பின் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சீன நம்பிக்கை. ஒரு மனிதன் ஒரே அறையில் அடைந்து கிடந்து வேலை செய்தல், ஒரு பொருள் ஒரே இடத்தில் எப்பொழுதும் வைக்கப்பட்டிருத்தல், ஒரு இடத்தில் இருளாகவே இருத்தல் அல்லது அதிக வெளிச்சமாக இருத்தல் இவை எல்லாவற்றையும் ஃபெங் சுயி தவறு எனக் கருதுகிறது. அப்படி இருந்தால் வாழ்வின் சமநிலை பாதிக்கப் படும் என்று கருதுகிறது.
இந்திய நாட்டின் பிரபலமான வாஸ்துவிற்கும், சீனத்தின் 'ஃபெங் சுயி'க்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து அடுத்த கட்டுரையில் காண்போம்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















